பயனர்கள்.
ript>
புதன், 20 அக்டோபர், 2010
11 மேலதிக வாக்குகளினால் உள்ளுராட்சி திருத்தச்சட்ட மூலத்திற்கு அங்கீகாரம்..!!
மேலதிக 11 வாக்குகளினால் உள்ளுராட்சி திருத்தச்சட்ட மூலத்திற்கான அங்கீகாரம் கிழக்கு மாகாணசபையில் நேற்றிரவு நிறைவேற்றப்பட்டது. திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக 18 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித்தலைவர் தயகமேகேயும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதேநேரம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான ஜவாத் மற்றும் எதிர்க்கட்சியான தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் இரா.துரைரத்தினம் ஆகிய இருவரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். ஜே.வி.பி உறுப்பினர் சபையிலிருந்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியேறிச் சென்றார்.
லஸ்கார் இதொய்பா இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துவது பற்றி எவ்வித ஆதாரமில்லை-வெளிவிவகார அமைச்சர்..!!
தீவிரவாத அமைப்பான லஸ்கார் இதொய்பா பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்க இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துகின்றது எனத் தெரிவிப்பது தொடர்பாக எந்தவொரு ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். நான்கு நாள் விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த அமைச்சர் பீரிஸ், இவ்வாறு கூறுவதில் பிரயோசனமான தன்மை கிடையாது என்று கடந்த சனிக்கிழமை கூறியதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையில் லஸ்கார் இதொய்பா இயக்கத்தினர் பயிற்சி பெற்றதாக பூனே பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் முன்னர் கூறியிருந்தார். இந்த விடயம் எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதனை எமது பாதுகாப்பு அதிகாரிகள் பரிசீலித்திருந்தனர். ஆனால், அது தொடர்பாக நாம் எதனையும் கண்டறிந்திருக்கவில்லை. அந்த மாதிரியான ஏதாவது நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான புலனாய்வுத் தகவல் பரிமாற்ற பொறிமுறையில் இருநாடுகளும் ஈடுபட்டிருந்தன என்றும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார். பூனே பேக்கரி குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவர் தெரிவித்திருந்தமை தொடர்பாக இந்திய பாதுகாப்பு முகவரடைப்புகள் இலங்கை பாதுகாப்பு முகவரமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தன. கொழும்புக்கு சமீபமான இடத்திலேயே பயிற்சி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அப்பகுதி கடும் பாதுகாப்பு பிரசன்னமான இடம் என்று கூறி அதனை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருந்தனர். இதேவேளை, சீனாவுக்கு நெருக்கமாக இலங்கை செல்வது அதிகரித்துவரும் விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இந்தியாவுடன் கொழும்பு தொடர்ந்து விசேடமான உறவைக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார். சீனாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்திவருகின்ற அதேசமயம் இந்தியாவுடன் விசேட உறவைப் பேணும் என்று கூறியுள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு எதிராக இலங்கை மண்ணை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காதலி வேடம் தவிர்க்க முடியாது - சனுஷா..!!
9 வருடங்களுக்கு முன், மம்மூட்டியின் ‘தாதா சாகேப்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சனுஷா. தொடர்ந்து தெலுங்கிலும், தமிழில் ‘காசி’, ‘தீனா’, ‘அரண்’ படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிறகு ‘பீமா’வில் த்ரிஷாவின் தங்கையாக வந்தார். விநயன் இயக்கிய ‘நாளை நமதே’ மூலம் ஹீரோயின் ஆனார். சாதுவான பெண் கேரக்டர்களிலேயே வருகிறீர்களே? ‘நாளை நமதே’, ‘ரேனிகுண்டா’ படங்களில் அமைந்த கேரக்டர்கள் அப்படி. என்னால் மெச்சூரிட்டியான வேடங்களிலும் நடிக்க முடியும். அதற்கான படங்கள் அமைய வேண்டும். அதுவரை மென்மையான காதல் ஹீரோயினாக நடிக்க வேண்டியிருக்கும். இதை என்னைப் போன்றவர்கள் தவிர்க்க முடியாது. ‘நந்தி’யில் என் நடிப்பை பார்த்த பின், எல்லோருடைய கருத்தும் மாறும். ‘நந்தி’ டப்பிங்கில் டைரக்டர் அடித்தாராமே? தமிழ்வாணன் என்னை அடிக்கவில்லை. கோபத்தில் என் தலைமுடியை பிடித்து இழுத்தார். வலியால், ‘அய்யோ’ என்று கத்தினேன். டப்பிங்கில் கிளைமாக்ஸ் காட்சி வந்தபோது, நன்றாகத்தான் பேசினேன். டைரக்டருக்கு திருப்தி இல்லை. பிறகு நானே அவரிடம், ‘என் தலைமுடியை பிடித்து இழுங்கள். அந்த வேதனையில், கண்டிப்பாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்’ என்றேன். அவரும் யாரும் எதிர்பாராத நேரத்தில், என் தலைமுடியை கொத்தாகப் பிடித்து இழுக்க, கண் கலங்கியபடி டப்பிங் பேசினேன். காட்சியும் சிறப்பாக அமைந்துவிட்டது. அதிக சம்பளம் கேட்கிறீர்களாமே? இதுவரை என்னை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களிடம், நியாயமான சம்பளம் மட்டுமே வாங்கியுள்ளேன். தமிழ், மலையாளம், தெலுங்கில் நல்ல கேரக்டர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறேன். சம்பளம் இரண்டாம் பட்சம்தான். எனது திறமைகளை வெளிக்கொண்டு வரும் கேரக்டருக்காக, சம்பளம் குறைவாக வாங்கி நடிப்பேன். இப்போது விமல் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன்.
படிப்பு? ஷூட்டிங் இல்லாத நாட்களில் கேரளா கண்ணூரிலுள்ள ஸ்ரீபுரம் பள்ளிக்கு சென்று, பிளஸ் ஒன் படிக்கிறேன். ஷூட்டிங் இருந்தால், ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி நடிக்கிறேன். சினிமாவில் நடிப்பதால், படிப்பை விட முடியாது. நல்ல மதிப்பெண்களும் வாங்குகிறேன்.
படிப்பு? ஷூட்டிங் இல்லாத நாட்களில் கேரளா கண்ணூரிலுள்ள ஸ்ரீபுரம் பள்ளிக்கு சென்று, பிளஸ் ஒன் படிக்கிறேன். ஷூட்டிங் இருந்தால், ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி நடிக்கிறேன். சினிமாவில் நடிப்பதால், படிப்பை விட முடியாது. நல்ல மதிப்பெண்களும் வாங்குகிறேன்.
யாழ். குடாநாட்டில் மாற்று ஏற்பாட்டின்கீழ் மின்வெட்டை நடைமுறைப்படுத்தாமல் 24 மணிநேரமும் மின் விநியோகம் வழங்க உடன் நடவடிக்கை..!!
யாழ். குடாநாட்டில் மாற்று ஏற்பாட்டின் கீழ் மின்வெட்டை நடைமுறைப்படுத்தாமல் 24 மணிநேரமும் மின் விநியோகம் வழங்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மின்சாரசபை அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வடக்கு அபிவிருத்தி மீளாய்வுக் குழுவின் கூட்டத்தில் வைத்து இந்த உத்தரவை ஜனாதிபதி விடுத்துள்ளார். மின் வழங்குவதற்கான இயந்திரங்கள் பழுதடைந்திருந்தால் அவற்றை திருத்த உடன் ஏற்பாடு செய்யவேண்டும் இல்லாவிட்டால் வேறு இயந்திரங்களை பொருத்தி மின்விநியோகத்தை 24மணி நேரமும் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். ஏ9 வீதி,பண்ணை வீதி ஆகியன புனரமைக்கப்படாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என பிரஸ்தாபித்தபோது அந்த வீதிகளின் புனரப் பின் பிரச்சினைகளை வீதி அபிவிருத்தி அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேட்டுள்ளார். எதிர்வரும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் இந்தப் பணியை ஆரம்பிக்கப் போவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரி பதிலளித்துள்ளார். அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் ஜனாதிபதி அங்கு உரையாற்றினார். மக்கள் சேவையை மகோன்னத சேவையாகக் கருதி அரச ஊழியர்கள் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும். உங்களை நம்பித்தான் எமது மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பு உங்களிடமே உள்ளது என்பதை உணர்ந்து சகலரும் சிறப்பாகச் சேவையாற்ற வேண்டும் என்று அரசஅதிபர் அறிவுரை வழங்கினார். இந்நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் சமமானவர்கள். இனம்,மொழி, சாதி, வேறுபாடின்றி அவர்கள் இந்த நாட்டின் மக்கள் எனக் கருதி சகலரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வவுனியா கூட்டுப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சில்வெஸ்திரி அலன்ரின், முருகேசு சந்திரகுமார், ஹனுஸ் பாரூக், சிறீரங்கா ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், எஸ்.கனகரட்ணம், வடமாகாண ஆளுநர், ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண அரச அதிபர்கள், வடமாகாணத்தின் மாவட்டத் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர். வடமாகாணத்தின் செயற்பாடுகள் பற்றி பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்ட அரசஅதிபர்கள் தமது மாவட்டங்கள் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தனர். ஐந்து மாவட்டங்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி, திணைக்களத் தலைவர்களிடம் கேட்டு ஆராய்ந்தார்.
முருங்கன் என் இரட்சகர் சிறுவர் இல்ல சிறுவர் சிறுமியர் பெற்றோரிடமும், சிறுவர் இல்லத்திலும் ஒப்படைப்பு..!!
மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர்மீது குறித்த சிறுவர் இல்லத்தினை நடத்தி வந்த போதகரால் பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் குறித்த சிறுவர் இல்லம் நோற்று மூடப்பட்டதோடு அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 18 சிறுவர்களில் 16 சிறுவர்கள் நேற்று மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யுட்சன் பெற்றோர் உள்ள 8 சிறுமிகளை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் 6 சிறுமிகளை மன்னாரில் உள்ள பாதுகாப்பான சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும் சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரிக்கு உத்தரவிட்டார். உத்தரவிற்கமைவாக சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒருவர் மன்னார் வைத்திய சாலையிலும் மற்றைய சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த போதகரை மன்னார் பொலிஸார் தேடி வருகின்ற நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
புலிகள் அமைப்பைத் தோற்கடித்து இன்றைய சூழலை உருவாக்கித் தந்தமைக்காக ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவிப்பு..!
புலிகள் அமைப்பைத் தோற்கடித்து இன்றைய சூழலை உருவாக்கித் தந்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரம்பரியக் கைத்தொழில் சிறு கைத்தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. நன்றி தெரிவித்துள்ளார். புலிகளைத் தோற்கடித்தமைக்காக எங்கள் மண்ணில் வைத்து உங்களுக்கு இன்று நன்றி கூறுகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற வடக்கு அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் வைத்தே அமைச்சர் இந்தப் பாராட்டைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நலனுக்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும் அமைச்சர் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் மற்றும் வடக்கு ஆளுநர் சந்திரசிறி ஆகியோரின் செயற்பாடுகள் பற்றி விமர்சித்தார். இருவருமாக வடக்கில் திறந்து அல்லது ஆரம்பித்த வைத்த நிகழ்ச்சிகள் பற்றிய படங்களைத் திரையில் போட்டுக்காட்டிய ஜனாதிபதி அவற்றில் பணிகள் யாவும் அரைகுறையாக நிற்பதாகச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக வயாவிளான் பாடசாலைக் கையளிப்புத் தொடர்பான படத்தைப் போட்டுக் காட்டிய அவர், கூரைகள் அற்ற கட்டங்களையும் திருத்தப்படாத பாடசாலையையும் கையளித்தா படமெடுத்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாணந்துறை, கீக்கியனகந்த தோட்டம், கீழ் டிவிசனில் மலையிலிருந்து பாரிய கற்கள் விழும் அபாயம்..!!
பாணந்துறை பிரிவுக்குட்பட்ட மத்துகம, கீக்கியனகந்த தோட்டம், கீழ் டிவிசனில் மலைப்பகுதி ஒன்றிலிருந்து பாரிய கற்கள் உருண்டு வந்து ஆபத்தை விளைவிக்க இருக்கும் லயன் குடியிருப்புக்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டம் மேலும் தாமதிக்காது துரித கதியில் பூர்த்தி செய்யப்பட்டு குடியிருப்பாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கற்கள் உருண்டு வரும் பட்சத்தில் 25 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து காணப்படுகின்றது. இது தொடர்பாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த மலைப் பிரதேசத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி கற்கள் உருண்டு வரக்கூடிய நிலை காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டு மதுராவல பிரதேச செயலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தோட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இங்கு வசித்து வரும் 25 தொழிலாளர் குடும்பங்களுக்கும் வேறு இடத்தில் 7 பேச் காணி வீதம் ஒதுக்கீடு செய்து வீடமைத்துக் கொடுக்கத் திட்டம் மேற்கொண்ட போதிலும், ஒரு வருடம் கடந்தும் இன்னும் இத்திட்டம் மந்தகதியிலேயே இருந்து வருவது குறித்து குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குடியிருப்பாளர்கள் மழைக்காலத்தில் அச்சம் காரணமாக குடியிருப்புகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள தோட்டக் கட்டடம் மற்றும் பாடசாலைக் கட்டடத்தில் தங்கியிருந்து பொழுதைக் கழிக்கின்றனர். மதுராவல பிரதேச செயலகத்தின் மூலம் இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. வீடமைக்க ஒவ்வொருவருக்கும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மூலமாக 2 இலட்சத்து 40 ஆயிரமும், பெருந்தோட்ட நம்பிக்கை நிதியத்தின் மூலம் கடன் அடிப்படையில் 2 இலட்சமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது
சிதறிக் கிடக்கும் புலிகளின் புலனாய்வு மற்றும் ஆயுதப்பிரிவைப் பலப்படுத்த முயற்சி..!!
தலைமைத்துவமின்றி சிதறிக் கிடக்கும் புலிகளின் புலனாய்வு மற்றும் ஆயுதப்பிரிவு உறுப்பினர்களை பலப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சி செய்யப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) ஊடாகவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 30 வருடகால யுத்தம் முடிவடைந் துள்ள நிலையில் நாட்டில் அமைதிச்சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை உறுதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும். மனிதாபிமான நடவடிக்கைமூலம் புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. மக்களின் உள்ளங்களை மாற்றவும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும் மற்றொரு மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. மீண்டுமொரு யுத்தம் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்முதல் இன்றுவரை 4485 முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஈழ நாடொன்றை அமைக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மீண்டும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் இலங்கைக்கு வரும் புலிகளையும் யுத்தகாலத்தில் தென்பகுதியில் மறைந்திருந்து மீண்டும் வடக்கிற்குவரும் நபர்கள் குறித்தும் விசாரணை செய்வதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைமைத்துவமின்றி மறைந்து இருக்கும் புலனாய்வு மற்றும் ஆயுதப்பிரிவு புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எஸ்.எம்.எஸ். குறுந்தகவலினூடாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெற்றிகொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பது சகலரினதும் தலையாய கடமை-ஜனாதிபதி..!!
வெற்றிகொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பது சகலரினதும் தலையாய கடமையெனவும் அதனைக் காட்டிக்கொடுக்க இடமளிக்கக் கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வவுனியாவில் நேற்றுத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஒரு அரசாங்கமே உள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 20 வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்ட மக்களுக்கு மன நிறைவான சேவையை வழங்க வேண்டுமெனவும் சேவை வழங்குவதில் இன, மத பேதங்கள், பாரபட்சங்கள் இருக்கக் கூடாதெனவும் வலியுறுத்திக் கூறியுள்ளார். தம்மிடம்வரும் மக்கள் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லும் வகையில் அதிகாரிகள் செயற்படுவது அவசியமெனவும் கருணையுடனும் அன்புடனும் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கொண்டு மக்களுக்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். வடக்கில் சில அதிகாரிகள் தம்மிடம் வரும் மக்களிடம் இன, குல பாகுபாடு காட்டி பாரபட்சமான வகையில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய பேதம், பாரபட்சத்துக்கும் இடமின்றி சிநேகபூர்வமான சேவையை வழங்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்
புலிகளுக்கு சார்பாக வெப் தளங்களினூடாகவும் சிதறியுள்ள புலிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்யப்படுகிறது..!!
நோர்வேயில் உள்ள நெடியவனும் அமெரிக்காவில் உள்ள வி. உருத்ரகுமாரனும் புலிகளை பலப்படுத்த வெளிநாட்டில் இருந்து முயற்சி செய்கின்றனர். இது தவிர கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகளின் இரு தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சர்வதேச மட்டத்தில் புலிகள் தலைதூக்குவதை தடுக்கவும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)