பயனர்கள்.

ript>

செவ்வாய், 12 அக்டோபர், 2010

நீண்ட இடைவெளி ஏன்? - அசின்..!!

கடைசியாக 'லண்டன் ட்ரீம்ஸ்' படத்தில் சல்மான் கானுடன் நடித்தார் அசின். இப்படம் ரிலீசாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. அதற்கு பின் அவர் நடித்த படமே வெளிவரவில்லை. இது பற்றி அசின் கூறியது: 'லண்டன் ட்ரீம்ஸ்'   படத்துக்கு பின் விளம்பர படங்களில் பிசியாக இருந்தேன். அதன் பின் தமிழில் ‘காவலன்’ பட வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் மீண்டும் சல்மான் கானுடன் ÔரெடிÕயில் நடிக்க¤றேன். இந்த இரண்டுமே பெரிய படங்கள். அதனால் தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படங்கள் வெளியாகும். அடுத்தடுத்து படங்கள் வெளியாக¤,
தோல்வி அடைந்தால் அதனால் பயனில்லை. ஆண்டுக்கு ஒரு படம் வந்தாலும் பேசப்பட வேண்டும். இந்தியில் மேலும் இரு படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. 'காவலன்' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பது பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை. அது பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு அசின் கூறினார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட மின்உற்பத்தி டிசம்பர் ஆரம்பம்..!!

புத்தளம் மாவட்டம் கற்பிட்டி நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட மின்உற்பத்தி எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. முதலாம் கட்டத்தின்கீழ் 300 மெகாவோட் மின்சாரம் நாட்டின் மின்சாரத்துடன் இணைக்கப்படவுள்ளது. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது 95வீதம் நிறைவடைந்துள்ளன. இயந்திரங்களின் மின் உற்பத்தி தொடர்பான பரிசோதனைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனல்மின் உற்பத்தி நிலையத்தில் முழுமையான நிர்மாணப் பணிகள் 2012ம் ஆண்டில் நிறைவடையவுள்ளது. அதன்போது, 900 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது பிள்ளைகளைச் சித்திரவதை செய்த தாயும், கள்ளக் காதலனும் கைது..!!

கள்ளக் காதலனுடன் சேர்ந்து தனது பிள்ளைகளைச் சித்திரவதை செய்த தாயையும், அவரது கள்ளக் காலதனையும் கண்டி புலனாய்வுப் பொலிஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை, ஹமங்கொட, ரிட்டிகஹாபொல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தற்காலிகமாக வாசம் செய்து வந்தபோதே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இப்பெண்ணுக்கு திருமணமாகி இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கணவர் அவர்களை விட்டுப் பிரிந்துவிட்டார். கள்ளக்காதலனுடன் வௌ;வேறு இடங்களில் தற்காலிகமாகத் தங்கி பொழுதுபோக்கிக் கொண்டிருந்த நிலையில் பிறந்த குழந்தை ஒன்றை ஒருவருக்கு இருவரும் விற்றுள்ளனர். அவ்வப்போது பெண்ணின் சொந்த வீட்டுக்கு வரும் காதலன் இரு பிள்ளைகளையும் தீயால் சுட்டும் அடித்தும் துன்புறுத்தியுள்ளார். கண்டி புலனாய்வுப் பிரிவுக்கு அயலவர்கள் தெரிவித்த தகவலையடுத்து குறிப்பிட்ட வீட்டை பொலிஸார் சோதனை செய்தபோது பிள்ளைகள் மாத்திரமே இருந்துள்ளனர். அவர்கள்மீது சித்திரவதைக் கான அடையாளங்கள் தென்பட் டன. அதனைத் தொடர்ந்து பொலிஸார் பல நாள்களாக சிவில் உடையில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின் இவ்விருவரும் கட்டுகஸ்தோட்டையில் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில்வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பெண்ணின் காதலன் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு 10,4, 01 வயதுகளில் மூன்று பெண்குழந்தைகள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

வாகனேரி அடிச்சரவெட்டியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு..!!

மட்டக்களப்பு, வாகனேரி அடிச்சரவெட்டியில் விவசாயம் செய்யப்பட்ட காணியில் அமைக்கப்பட்டிருந்த குடிசை ஒன்றுக்குள் இன்று அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த விவசாயியை அங்கு வந்த யாணை தாக்கியுள்ளது. படுகாயமடைந்த விவசாயி ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்த விவசாயி மிறாவோடை மாஞ்சோலை எனும் முகவரியில் வசித்துவரும் 55வயதான இப்றாகிம் கச்சி முகம்மது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு யாழ் ரயில்சேவை மீண்டும் ஆரம்பிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை-ஜாலிய விக்கிரமசூரிய..!!

கொழும்பு யாழ்ப்பாணம் ரயில்சேவை மீண்டும் ஆரம்பிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய இன்று தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலகத்தில் கேட்போர் கூடத்தில் இன்றுகாலை நடைபெற்ற அமெரிக்க வர்த்தகக் குழுவினருக்கான வரவேற்புக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 1972ம் ஆண்டு நான் ரயில் மூலம் யாழ்ப்பாணம் வந்தேன். அதன் பின்னர் ஒருமுறை விமானத்தில் வந்தேன். இன்றும் விமானத்தில்தான் வந்துள்ளேன். எனினும் மிகவிரையில் மீண்டும் ரயில்மூலம் யாழ். வருவேன். அமெரிக்க வர்த்தகக் குழுவினர் இலங்கை வந்ததும் அவர்கள் வடக்கில் வர்த்தக முதலீடுகளைச் செய்யவூள்ளதும் எவரும் முற்றிலும் எதிர்பார்க்காத விடயமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திறமையான வழிநடத்தல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஒரு ஸ்தீர நிலையை அடைந்துள்ளது. இப்போது இலங்கையில் வருடாந்த வருவாய் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது விரைவில் மேலும் இரு மடங்காய் அதிகரிக்கும் என எதிர்பார்க்க முடியும். இலங்கையில் தொழில் இல்லாப் பிரச்சினை குறைந்து வருகின்றது. இலங்கையின் துரித அபிவிருத்தியை இணங்கண்டுள்ள உலக நாடுகள் இலங்கையின் முன்னேற்றத்துக்கு கைகொடுக்க முன்வந்துள்ளன. அதன் ஒரு அங்கமாவே இன்று அமெரிக்க வர்த்தகக் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடிகர்&நடிகைகளின் கார் மோகம்..!!

ஆக்ஷன் படம் ஓடினால் ஆக்ஷன் மேனியா, லவ் சப்ஜெக்ட் ஜெயித்தால் லவ் மேனியா என்று கோலிவுட் ஹீரோக்கள் தங்கள் படங்களின் பாணியை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதேபோல் தாங்கள் வாங்கும் காரில் எது டாப் கிளாஸ் என்று தேர்வு செய்து வாங்குவதிலும் போட்டி நிலவுகிறது. சொகுசு காரான பிஎம்டபிள்யூ தான் இப்போதைய கோலிவுட்டின் டிரெண்ட். நடிகர் விஜய் சமீபகாலமாக இந்த காரில்தான் வலம் வருகிறார். அதேபோல் தனுஷும் இந்த கார் வாங்கி இருக்கிறார். நடிகைகளில் த்ரிஷா, நயன்தாரா, டைரக்டர்களில் ஷங்கர், லிங்குசாமி ஆகியோர் பிஎம்டபிள்யூ பிரியர்கள். அந்த காரில்தான் ஷூட்டிங் செல்கின்றனர். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவும் அவ்வப்போது கார்களை மாற்றுகிறார்.

இலங்கை மக்களடனும் அரசடனும் அமெரிக்கா இணைந்து செயற்படும்- மைக்கல் மெலன் டிலான்..!!

யாழ் மக்கள் உட்பட இலங்கை மக்கள் அனைவருடனும் இலங்கை அரசாங்கத்துடனும் அமெரிக்க அரசாங்கம் இணைந்து செயற்படும் என தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் பிரதிநிதி மைக்கல் மெலன் டிலானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தலைமையில் அமெரிக்க வர்த்தக குழுவினர் இன்றுகாலை யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். யாழ்ப்பாண பொது நூலகத்தில் கேட்போர் கூடத்தில் இவர்களுக்கான வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் கலந்து கொண்டிருந்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மைக்கல் மெலன் டிலானி, இலங்கை ஒரு பாரிய அபிவிருத்தி இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. அதன் வெற்றிக்கு அமெரி;க்க அரசாங்கம் கைகொடுக்கும். இன்றைய கடின உழைப்பே நாளைய இளம் சந்ததியருக்கு நல்ல எதிர்காலத்தைத் தேடித்தரும். இந்த அடிப்படையில்தான் இலங்கை அரசாங்கம் வடக்கில் பாரிய முயற்சிகளில் இறங்கியூள்ளதென்பதை யாழ் மக்களுக்கு ஒரு நல்ல தகவலாக வழங்க விரும்புகிறேன். வடக்கில் தெரிவுசெய்யப்பட்டுள்ள இடங்களில் 30 நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முன்வந்துள்ளன. இதன்காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் தொழில் வாய்ப்பு பெறுவர். நாட்டின் பொருளாதாரமும் துரிதமாக வளரும் என்று தெரிவித்துள்ளார்.

கோட்டைக் கல்லாறு பகுதியில் மீனவர் இறங்குதுறை அமைக்க அனுமதி..!!

மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாறு பகுதியில் மீனவர் இறங்குதுறை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மற்றும் பிரதி அமைச்சர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோட்டை கல்லாறு பகுதி கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் கடற்கரை ஓரங்களில் சவுக்கு மரங்கள் நடப்பட்டு தற்போது வனப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் உண்மையில் சுனாமி அனர்த்தம் இடம்பெறுவதற்கு முன்னர் அப்பிரதேச மீனவர்கள் அங்கு மீனவர் தங்குமிடங்களை அமைத்து தங்களது தொழில்களை மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது அங்கு அமைக்கப்பட இருந்த இறங்குதுறையினை அமைப்பதில் பல்வேறு இடர்பாடுகளை தாம் எதிர்நோக்கி வருவதாக அப்பிரதேச மீனவர்கள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து இன்று இது தொடர்பில் முதலமைச்சர் சந்திரகாந்தன் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்தாலோசித்து அப்பிரதேசம் உண்மையில் மீனவர்களுக்கான பிரதேசமாக இருப்பதனால் அங்கு இறங்கு துறையினை அமைப்தற்கு மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாவலப்பிட்டியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 14வயது மாணவன் கைது..!!

கண்டி மாவட்டம் நாவலப்பிட்டிய குருந்துவத்தைப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உற்படுத்தியதாக சந்தேகிக்கும் 14வயது மாணவன் ஒருவனை குருந்து வத்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறுமியை வீட்டில் வைத்து விட்டு பெற்றோர்கள் பக்கத்துத் தோட்டத்தில் வேலைசெய்யச் சென்ற சமயம் பார்த்து பக்கத்து வீட்டு 14 வயது மாணவன் ஒருவன் வீட்டினுள் புகுந்து குற்றம் புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேற்படி சிறுமி கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருந்துவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.ரி. சஞ்சீவ தலைமையிலான குழு இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

யாழ். வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் புதுக்காட்டுச் சந்தியில் இரு மாணவிகள் கடத்தல்..!!

யாழ். வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் புதுக்காட்டுச் சந்தியில் வைத்து நேற்று மதியம் 2.00 மணியளவில் வெள்ளை வானில் வந்தவர்களால் இரண்டு மாணவிகள் கடத்தப்பட்டுள்ளார்கள். செம்பியன்பற்றுக் கரையோரக் கிராமத்தைச் சேர்ந்த அருளானந்தம் ஜீவா (வயது 18), செபஸ்தியான்பிள்ளை ஜெனித்தா (வயது 13) ஆகிய மாணவிகளே கடத்தப்பட்டவர்களாவர். இவர்கள் தும்பளையிலுள்ள தமது உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்று விட்டு பஸ்ஸில் திரும்பிவந்து, புதுக்காட்டுச் சந்தியில் இறங்கினர். அங்கு வீட்டுக்குச் செல்கின்றமைக்கு இன்னொரு பஸ்ஸ{க்காக காத்திருந்தபோதே கடத்தல் இடம்பெற்றுள்ளது. இருவரும் செம்பியன் பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவிகளாவர்.

வாய்ப்பு தேடி அலைவதில்லை - மீனாட்சி..!!

'மந்திர புன்னகை'யில் நடித்து வருகிறார் மீனாட்சி. அவர் கூறியது: கரு பழனியப்பன் இயக்கி நடிக்கும் ‘மந்திர புன்னகைÕ படத்தில், நந்தினி என்ற கதாபாத்திரம் ஏற்றிருக்கிறேன். ஆணுக்கு பெண் சமம் என்ற போராட்ட குணம் கொண்ட கேரக்டர். ‘கருப்பசாமி குத்தகைதாரர்' படத்துக்கு பிறகு எனக்கு நல்ல படங்கள் அமையவில்லை. வந்த எல்லா வாய்ப்புகளுமே கிளாமர் வேடங்கள்தான். ‘மந்திர புன்னகைÕ ஷூட்டிங் முற்றிலும் முடிந்துவிட்டது. எப்போது ரிலீஸ் என்று காத்திருக்கிறேன். அடுத்த மாதம் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகிறது. படம் பார்ப்பவர்கள் 'இது மீனாட்சியா?' என்று கேட்கும் அளவுக்கு என்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றி இருக்கிறார் இயக்குனர். வேறு கதைகள் வந்தாலும் அதை ஏற்காமல் காத்திருக்கிறேன். ஏனென்றால் அந்தப் படம் எனக்கு ஒரு புது இமேஜ் தரும். மேலும் வாய்ப்பு தேடி நான் என்றைக்கும் அலைந்தது கிடையாது. என்னை தேடி என்ன வாய்ப்பு வருகிறதோ அதை தேர்வு செய்து நடிக்கிறேன்.