பயனர்கள்.

ript>

சனி, 9 அக்டோபர், 2010

இணையதளத்தில் எந்திரன்: அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள்...!!! நீங்களும் பார்க்க...!!

இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள "எந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், ஷங்கர் இயக்கத்தில், தொழில்நுட்ப ரீதியில் சாதனை படைத்துள்ள திரைப்படம் என்பதால் இந்தத் திரைப் படம் பல கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டது. மிகப் பெரிய லாபத்துக்குப் படம் விற்கப்பட்டு தயாரிப்பாளர்களும் வரலாறு காணாத லாபத்தை ஈட்டியிருப்பதாகத் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.÷இந்தப் படத்தின் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்ற கனவில் தியேட்டர் அதிபர்கள் பல லட்சம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தி திரையிட்டனர். சுமார் ரூ.160 கோடி முதலீட்டுடன் தயாரிக்கப்பட்ட "எந்திரன்' திரைப்படம் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த 1-ம் தேதி பலத்த எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்டது. ஆனால், திரைப்படம் வெளியான 3 நாளிலேயே சிறு நகரங்களில் கூட்டம் குறைந்து, கட்டணத்தையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. ஒரே ஊரில் மூன்று, நான்கு திரையரங்குகளில் வெளியான காரணத்தாலும் முதல் 3 நாள்களும் அதிகமான கட்டணத்துடன் நான்கு, ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டதாலும், 30 நாள் ஓடவேண்டிய படம் மூன்றே நாளில் வரவேற்பை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் இத் திரைப்படத்தின் திருட்டு விடியோ, டி.வி.டி. வெளியாகாத வகையில் காவல் துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, இத் திரைப்படம் தொடர்பான காட்சிகள் இடம் பெறக் கூடாது என தமிழ் இணையதளம் ஒன்றுக்கு சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆளும் கட்சியின் குடும்பத்தைச் சேர்ந்த கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் என்பதால் காவல் துறையும் திருட்டு விசிடி வெளியாகிவிடாமல் எல்லா வகையிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
http://v.youku.com/v_show/id_XMjExOTgxMTMy.html / http://www.soku.com/search_video/q_enthiran எனப்படும் வெளிநாட்டு இணையதளத்தில் இந்தப் படம் தெளிவாகவும், முழுமையாகவும் கிடைப்பதாகத் தெரிகிறது. 2 மணி 50 நிமிடங்கள் இத் திரைப்படம் இணையதளத்தில் ஓடுவதாக, இதைப் பார்த்தவர்கள் தொலைபேசி மூலம் "தினமணி' அலுவலகத்துக்குத் தெரிவித்தனர். அவர்களிடம் சைபர் கிரைம் துணை ஆணையாளரின் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் மிக அதிகமான தொகைக்கு விநியோக உரிமையை அளித்ததைப் போல வெளிநாட்டு நிறுவனத்துக்கும், இணையதள உரிமைக்கும் சேர்த்து யாரேனும் விற்றிருப்பார்களோ என்ற சந்தேகம் தியேட்டர் அதிபர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி இருந்தால் மட்டுமே இவ்வளவு தெளிவாக இணைய தளத்தில் "எந்திரன்' திரைப்படத்தை அவர்கள் வெளியிட்டிருக்க முடியும். இந்த இணையதளத்தில் எந்திரன் திரைப்படம் ஓடுவதைத் தடுப்பதற்கு, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் "எந்திரன்' திரைப்படம் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதால் இப்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெறுகிறது. ஆனால், வேலூர், பாண்டிச்சேரி, திருத்தணி, ஒசூர் போன்ற சிறு நகரங்களில் கூட்டம் குறைந்து விட்டதால் வெளியாகி ஒரு வாரம் ஆவதற்குள் பல திரையரங்குகளில் இருந்து "எந்திரன்' திரைப்படம் மாற்றப்பட்டு விட்டிருக்கிறது. இதற்கு இணைய தளத்தில் படம் வெளியானது கூட காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
http://www.soku.com/search_video/q_enthira
http://v.youku.com/v_show/id_XMTk5MTQ0NjAw.html

நாட்டில் சீரற்ற காலநிலை தொடருமென அறிவிப்பு..!!

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவூவதால் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்றுடன்கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மேல்மாகாணம- சப்ரகமுவ மாகாணம்- தென் மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 30முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் பகுதியில் கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவூம் இப்பகுதி மீனவர்கள் மிகவூம் அவதானத்துடன் தொழிலில் ஈடுபடவேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டையில் தற்கொலை செய்து கொள்வோர் அதிகரிப்பு..!!

கண்டி, கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளது. கட்டுகஸ்தோட்டை பொலிஸ்பிரிவில் இவ்வருடம் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 22 எனக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களுள் 17 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவர். தற்கொலை செய்து கொண்டவர்களுள் பெரும்பாலானோர் இளம் வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மிகச் சிறிய பிரச்சினைகளுக்காகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.பீ. தியகெலினாவல தெரிவித்துள்ளார்.

மலையாள படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்..!!

இந்தியில் ‘லக்’ என்ற படத்தில் அறிமுகமான ஸ்ருதி, இப்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘7ஆம் அறிவு’ படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இந்தி, தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் சமீபத்தில் கமலை சந்தித்தார். ‘தலசமயம் ஒரு பெண்குட்டி’ என்ற கதையை சொன்னார். கதையை கேட்ட கமல், ஸ்ருதியை அழைத்து, ‘ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை கேட்டேன். நீயும் கேள். பிடித்திருந்தால் நடி’ என்று கூறினாராம். இதையடுத்து ஸ்ருதி அதில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

மேலும் 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1500 சிங்கள மக்கள் இன்று யாழ்ப்பாணம் வர ஏற்பாடு..!!

மீளக்குடியேறும் நோக்கத்தோடு 180 சிங்களக் குடும்பங்கள் ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்துள்ள நிலையில் மேலும் 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1500 சிங்கள மக்கள் இன்று யாழ்ப்பாணம் வருகின்றனர். மாலைக்குள் அவர்கள் அனைவரும் யாழ். நகரை வந்தடைவார்கள் என்று ரயில் நிலையத்தில் முகாமிட்டுள்ள சிங்கள மக்கள் கூறுகின்றனர். ரயில் நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கு முழுப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் உட்பட யார் சென்றாலும் விவரங்கள் பதியப்பட்ட பின்னரே அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. அனுராதபுரம், மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் இருந்து இன்றுமாலைக்குள் 500சிங்களக் குடும்பங்கள் வந்துசேர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதென அங்கு குடியேறும் நோக்கில் வந்து யாழ். நிலையத்தில் தங்கியுள்ளவர்களில் ஒருவரான சந்திரசிறி தெரிவித்துள்ளார். மூன்று நாள்களின் முன்னர் யாழ்ப்பாணம் வந்த இவருடன் 180 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் வந்துள்ளனர். இவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடங்கள் எவையும் இல்லாத போதும், தமக்கு அரச காணிகளை ஒதுக்கித் தருமாறு அரசஅதிபரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மேலும் 500 சிங்களக் குடும்பங்கள் மீளக்குடியேறும் நோக்கத்தோடு யாழ்ப்பாணம் வரவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, மீளக்குடியமரும் நோக்கத்துடன் யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு யாழ். செயலகத்தில் உள்ள உரிய அதிகாரிகளுக்கு மேலிட உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கான வேலைகள் இந்தமாதம் ஆரம்பமாகும்- இந்திய உயர்ஸ்தானிகர்..!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பமாகும் என இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்த் கூறியுள்ளார். யாழ். மாநகர சபையில் இலங்கை - இந்திய நட்புறவுச் சங்கத்தால் வழங்கப்பட்ட பஸ் வண்டிகளின் திறப்புகளை யாழ். நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். சண்முகலிங்கன், வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பொன்னம்பலம், யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் கு. பற்குணராஜா ஆகியோரிடம் இந்தியத் தூதுவர் அசோக்காந்த் நேற்று வெள்ளிக்கிழமை கையளித்தார். அசோக்காந்த் மேலும் பேசும்போது கூறியதாவது:- மக்களின் போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்கக் கூடியதான உதவிகளை இந்தப் பிரதேசத்திற்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மன்னார், மடு, தலைமன்னார் பகுதிகளுக்கான புகையிரத வீதிகளையும் எமது அரசு அமைத்துக் கொடுக்கவுள்ளது. இலங்கை - இந்திய நட்புறவின் சின்னமாக இங்கே பல்வேறு உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதார உதவியாக அவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் இந்திய அரசு உதவி வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட நீதிபதி சிறீஸ்கந்தராஜா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக சத்தியப் பிரமாணம்..!!

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதி சிறீஸ்கந்தராஜா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான வைபவம் அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது. இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டடிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவே கட்சிகள் சரத் பொன்சேகாவை பயன்படுத்திக் கொண்டுள்ளன-அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன..!!

அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கட்சிகள் சரத் பொன்சேகாவை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக பிரதிப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை பிழையான வகையில் அர்த்தப்படுத்தி நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசைதிருப்ப சில சக்திகள் முயன்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சரத் பொன்சேகா விவகாரத்தைப் பயன்படுத்தி சிலர் அரசியல் லாபங்களை ஈட்டிக்கொள்ள முயல்கின்றனர். வேறு விடங்கள் எதனையும் பேசமுடியாத காரணத்தினால் ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன சரத் பொன்சேகா கைது விவகாரத்தை பூதாகாரப்படுத்தி வருகின்றன. சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக லண்டனில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு புலி ஆதரவு அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. லண்டனில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டங்களில் சரத் பொன்சேகாவின் பிள்ளைகளும் கலந்து கொண்டனர். சரத் பொன்சேகா ஓர் அரசியல் கைதி என அடையாளப்படுத்தி அதன்மூலம் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் மஞ்சல் நிறத்திலான வெளவ்வால்..!(புகைப்படங்கள் வீடியோ இணைப்பு)

புத்தளம் மாவட்டத்திலுள்ள முந்தல் பரதங்கடுவ பகுதி வீடொன்றில் புத்தளம் மாவட்டத்திலுள்ள முந்தல் பரதங்கடுவ பகுதி வீடொன்றில் மஞ்சல் நிறத்திலான வெளவ்வால் ஒன்றை வீட்டுரிமையாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். வெளவ்வால் இனமானது இயல்பாக கருப்பு நிறத்தைக் கொண்டதாகவே காணப்படுகிறது. இதனை பார்வையிட பெரும் எண்ணிக்கையில் அப்பிரதேச மக்கள் செல்கின்றனர்.

படங்கள் வீடியோ கிளிப் இணைக்கப்பட்டுள்ளது.





நன்றி அதிரடி

நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்..!!

நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைஅருகே உள்ள இடும்பாவனம் என்ற ஊரில் நேற்று கண்டனக் கூட்டம் ஒன்றில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு பேசிய எஸ்.எஸ்.சந்திரன், கூட்டத்தை முடித்த பின்னர் நள்ளிரவில் மன்னார்குடி வந்த எஸ்.எஸ்.சந்திரன் அங்குள்ள பூர்ணா என்ற தனியார் ஹோட்டலில் தங்கினார். இந்த நிலையில் அவருக்கு மாத்திரை கொடுப்பதற்காக அவரது உதவியாளர் ஒரு மணியளவில் சந்திரனை எழுப்பினார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. உடலிலும் அசைவு எதுவும் இல்லை. இதனால் பயந்து போன உதவியாளர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சந்திரனைப் பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் அவர் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக சந்திரனின் உடலை அவரது காரிலேயே சென்னைக்குக் கொண்டு வந்தனர். சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட சந்திரனின் உடலைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

ஈராக்கிய வர்த்தக அமைச்சர் எதிர்வரும் 20ம்திகதி இலங்கை விஜயம்..!!

இலங்கைக்கும் ஈராக்குக்குமிடையே வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் ஈராக்கிய வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவொன்று எதிர்வரும் 20ம் திகதி இலங்கை வருகிறது. அத்துடன் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக, பொருளாதார, கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் ஈராக்கில் மூடிக்கிடக்கும் இலங்கை தூதரகத்தை மீண்டும் திறக்கவும் ஈராக் விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஈராக்கிய தூதுவர் கன்தான் தாஹா கலீப் பிரதமர் தி.மு. ஜயரட்னவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது ஈராக்கிய தூதுவர் மேற்கண்டவாறு ஈராக்கிய அரசின் நோக்கங்களை பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நீண்டநாட்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை - ஈராக் ஒன்றிணைந்த குழுவும் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. லெபனானிலுள்ள இலங்கை தூதுவர் உள்ளிட்ட குழுவினர் ஈராக்கின் தலைநகரான பாக்தாத்துக்குச் சென்று இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கான அடிப்படை வேலைகளில் ஈடுபடவுள்ளது என்றும் ஈராக்கிய தூதுவர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த பிரதமர் தி.மு. ஜயரட்ன, மசகு எண்ணெய் உற்பத்தியில் ஏற்றுமதியில் ஈராக் உலகில் அனைத்து நாடுகளையும் விட முன்னணியில் திகழ்கிறது. இவ்வாறான நாடொன்றுக்கு அங்குள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க ஆயத்தமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

50க்கும் மேற்பட்ட போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் கண்டு பிடிப்பு..!!

50க்கும் மேற்பட்ட போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 09மாதங்களில் மட்டும் 56 போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மாளிகாகந்த பிரதேசத்தில் இயங்கிவந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றிலிருந்து 261 போலி கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உரிமையாளர் போலியான கடவுச் சீட்டுக்களை விநியோகம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அரசாங்க அமைச்சர்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்-முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா..!!

அரசாங்க அமைச்சர்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அமைச்சர்களான விமல் வீரவன்சவும், கெஹலிய ரம்புக்வெல்லவும் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவிடம் நான் ஒருபோதும் மன்னிப்பு கோரவில்லை. எனது கணவர் விஜய குமாரதுங்கவின் சார்பில் நான், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் மன்னிப்பு கோரியதாக அமைச்சர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர். ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினேன் என்ற குற்றச்சாட்டு அப்பட்டானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திடீர் மாற்றத்தில் சமீரா..!!

‘வாரணம் ஆயிரம்‘ படத்தில் குண்டாக இருந்த சமீரா ரெட்டி ஆச்சர்யப்படும் அளவுக்கு மெலிந்துவிட்டார்.   அவர் கூறியது:கவுதம் இயக்கத்தில் நடித்த ‘நடுநிசி நாய்கள்‘ முடிந்துவிட்டது. அடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கிறேன். அந்த வேடத்துக்கு இப்போதைய எனது ஸ்லிம் தோற்றம் பொருத்தமாக அமைந்துவிட்டது. இந்த வார இறுதியில் இந்தி பட ஷூட்டிங்கிற்காக லண்டன் செல்கிறேன். இப்படத்தில் பைக் ஓட்டும் காட்சி வருவதால் பைக் ஓட்டி பழகி இருக்கிறேன். நான் அசைவ பிரியை. மட்டன், சிக்கன் என வெளுத்துக்கட்டுவேன். இப்போது சுத்த சைவப்பிரியை ஆகிவிட்டேன். இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன என்று சொல்ல முடியவில்லை. இத்துடன் யோகா செய்வதையும் தினசரி பயிற்சி ஆக்கிக்கொண்டிருக்கிறேன். இதனால் எனது உடல் ஆரோக்கியத்தில்  புதிய மாற்றத்தையும் எனக்குள் புதுவேகம் ஏற்பட்டிருப்பதையும் உணர முடிகிறது.

3 இடியட்ஸ் வேலைகளை தொடங்கினார் ஷங்கர்..!!

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார். இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மும்பையில் நடந்த எந்திரன் / ரோபோ பிரிமியர் காட்சிக்கு அமீர் கான், ராஜ்குமார் ஹிராணி மற்றும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா ஆகியோர் வந்திருந்தபோது, இந்தப் படத்தின் ரீமேக் குறித்தும் நீண்ட நேரம் விவாதித்துள்ளனர்.