பயனர்கள்.

ript>

சனி, 9 அக்டோபர், 2010

ஈராக்கிய வர்த்தக அமைச்சர் எதிர்வரும் 20ம்திகதி இலங்கை விஜயம்..!!

இலங்கைக்கும் ஈராக்குக்குமிடையே வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் ஈராக்கிய வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவொன்று எதிர்வரும் 20ம் திகதி இலங்கை வருகிறது. அத்துடன் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக, பொருளாதார, கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் ஈராக்கில் மூடிக்கிடக்கும் இலங்கை தூதரகத்தை மீண்டும் திறக்கவும் ஈராக் விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஈராக்கிய தூதுவர் கன்தான் தாஹா கலீப் பிரதமர் தி.மு. ஜயரட்னவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது ஈராக்கிய தூதுவர் மேற்கண்டவாறு ஈராக்கிய அரசின் நோக்கங்களை பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நீண்டநாட்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை - ஈராக் ஒன்றிணைந்த குழுவும் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. லெபனானிலுள்ள இலங்கை தூதுவர் உள்ளிட்ட குழுவினர் ஈராக்கின் தலைநகரான பாக்தாத்துக்குச் சென்று இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கான அடிப்படை வேலைகளில் ஈடுபடவுள்ளது என்றும் ஈராக்கிய தூதுவர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த பிரதமர் தி.மு. ஜயரட்ன, மசகு எண்ணெய் உற்பத்தியில் ஏற்றுமதியில் ஈராக் உலகில் அனைத்து நாடுகளையும் விட முன்னணியில் திகழ்கிறது. இவ்வாறான நாடொன்றுக்கு அங்குள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க ஆயத்தமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக