பயனர்கள்.

ript>

ஞாயிறு, 7 நவம்பர், 2010

தங்காலை நீதிமன்றக் கட்டடத் தொகுதி ஜனாதிபதியால் திறந்துவைப்பு..!!

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தங்காலை நீதிமன்றக் கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்துள்ளார். அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 358 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடத் தொகுதியில் மஜிஸ்திரேட் நீதிமன்றம் மாவட்ட நீதி மன்றம் உயர் நீதிமன்றம் சட்ட உதவி காரியாலயம் தொழில் நியாய சபை என்பவையூம் உள்ளட ங்கியுள்ளதோடு இவை நவீன வசதிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதி நீதிஅமைச்சர் ரெஜினோல்ட் குரே உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் சீனா பயணம்..!!

வடமேல் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 24 மாகாணசபை உறுப்பினர்கள் கடந்த வெள்ளியன்று சீனாவுக்குப் பயணமானார்கள். கல்விச் சுற்றுலா ஒன்றின் நிமித்தம் சீனா சென்றுள்ள இவர்கள் எதிர்வரும் 17ம் திகதி நாடு திரும்பவுள்ளனர். இக்குழுவில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஐந்துபேர் கலந்து கொள்கின்றனர். மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த, ஏ.எச்.எம். றியாஸ், ஜானக டி. சொய்சா, சிந்தக மாயாதுன்ன, மற்றும் சுமல் திசேரா ஆகியோருடன் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தோரும் சீனா சென்றுள்ளனர். சுற்றுலாவுக்கு வடமேல் மாகாண சபை 85லட்சம் ரூபாவை ஒதுக்கிட்டுள்ளதாகவும், இக்குழுவில் இரு மாகாணசபை அதிகாரிகள் செல்வதாகவும் சபையின் செயலாளர் எஸ்.ஆர்.ஏ. சமரகோன் தெரிவித்துள்ளார். சுற்றுலாவில் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் நிமல் ஹேரத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர் சுற்றுலாவில் கலந்து கொள்ளவில்லை.

சம்பூர், நீர்கொழும்பு பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்பு..!!

திருமலை மாவட்டம் சம்பூர் மற்றும் கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பூர் கைமுந்தகுளத்திற்கு அருகில் புலிகள் இயக்கத்தின் பங்கர் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய 7 சிறிய பக்கெட்டுகள், 10 மிதிவெடிகள், ஒரு சயனைட் குப்பி என்பன மீட்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு கொப்பரா சந்தியில் வைத்து மன்னாரில் இருந்து மீன் ஏற்றிவந்த லொறியில் இருந்து ஆயிரம் டெடனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தைத் துரிதப்படுத்தும்படி இந்தியா இலங்கையிடம் வேண்டுகோள்..!!

மீளக் குடியேறியோருக்கான, இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தைத் துரிதப்படுத்தும்படி இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் பீ.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அமைச்சர் சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதியைச் சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு முடிந்த பிறகு வெளியே வந்த சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இலங்கையின் வடக்கு மோதலின்போது இடம்பெயர்ந்த 50 ஆயிரம் பேருக்கு வீடுகட்டித்தர வேண்டும் என்ற திட்டம் முன்னேற்றத்தில் இருக்கிறது. விரைவில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் வற்புறுத்தி இருக்கிறோம். மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள் என்றும் அமைச்சர் பீ.சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.

ஓட்டலில் மர்ம குரல் - ஜெனிலியா ஓட்டம்..!!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தி பட ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தார் ஜெனிலியா. ஓட்டலில் மர்ம குரலை கேட்டவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்த அனுபவம் பற்றி கூறியது: சமீபத்தில் ஷூட்டிங்கில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற¤ருந்தேன். நட்சத்திர ஓட்டலில் எனக்கு ரூம் ஒதுக்கப்பட்டிருந்தது. அறை கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றதும் ஏதோ ஒரு மர்ம இடத்துக்குள் நுழைந்தது போல் உணர்ந்தேன். சுவர் முழுவதும் பயங்கரமான உருவங்கள் வரையப்பட்டிருந்தன. சமாளித்துக்கொண்டு தங்கினேன். நேரம் செல்லச் செல்ல ஏதோ ஒரு மர்ம குரல் கேட்கத் தொடங்கியது. யாரோ வெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்த குரல் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்ததால் கூர்ந்து கவனித்தேன். சுவரில் விரிசல் விடுவதுபோல் சத்தம். உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒரு நிமிடம் கூட தங்க விரும்பாமல், வெளியில் ஓடி வந்தேன். வெளியில் வந்த பிறகுதான் உடன் வந்தவர்களும் அதேபோல் சத்தம் கேட்டு அறையிலிருந்து ஓடிவந்திருப்பது தெரிந்தது. அதன் பின் வேறு ஓட்டலில் சென்று தங்கினோம். இது திகில் அனுபவமாக இருந்தது.