பயனர்கள்.
ript>
வெள்ளி, 8 அக்டோபர், 2010
எஸ்.எம்.கிருஷ்ணா வடக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்..!!
எஸ்.எம்.கிருஷ்ணா வடக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்- உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வடக்கில் இந்திய அரசின் உதவியினால் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். எதிர்வரும் 29ம் திகதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அவர் வீடமைப்புத் திட்டம், ரயில் பாதைகள் அமைக்கும் வேலைத்திட்ட ங்களுக்காக அடிக்கல் நாட்டவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ். அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே மேற்படி விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன. மடுவிலிருந்து தலை மன்னார் வரையும் ஓமந்தையிலிருந்து பளை வரையும் இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 29ம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கலந்து கொள்ளவுள்ளார். இதேவேளை, இந்திய அரசின் உதவியுடன் வடபகுதியில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்பகட்டமாக யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கலந்து கொள்ளவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார். வட பகுதிக்கு விஜயம் செய்யும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
ராம்கோபால் வர்மா தயாரிப்பில் - விஜய்..!!
இயக்குனர் ராம்கோபால் வர்மா நடிகர் சூர்யாவை வைத்து இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘ரத்த சரித்திரம்’ படத்தை இயக்கிவருகிறார். அடுத்து தன் உதவியாளர் அஜித்தின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை இந்தி, தமிழ் என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கவுள்ளார் ராம்கோபால் வர்மா. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் நாயகன் விஜய் என்பது மட்டும் உறுதியாகிவுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழு விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது. இந்திப் பதிப்பின் நாயகனாக அக்ஷய் கண்ணா நடிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக “நாடோடிகள்” படத்தின் மூலம் புகழ் பெற்ற அனன்யா நடிக்கவுள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
போராட்டங்கள் மற்றும் சத்தியாகிரங்களில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவு..!!
கொழும்பு வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுத்தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டங்கள் மற்றும் சத்தியாகிரங்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, உடனடியாக அப்புறப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி, காவற்துறையினருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எதிர்காலத்தில் அமைதியின்மை ஏற்படும் என முன்வைக்கப்பட்ட வாதத்தை கவனத்தில் கொண்டு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ள சிலர் சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறு கோரி சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கோரி கலாசார விவகார திணைக்களம் மற்றும் கறுவாத் தோட்ட காவற்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் ஸ்ரீநாத் பெரேரா, கித்சிறி காட்டப்பிட்டி உள்ளிட்டோர் சுதந்திரச் சதுக்கத்தில் சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரத் பொன்சேக்காவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றம் விதித்துள்ள சிறைத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பெனர்களையும் இவர்கள் காட்சிப்படுத்தியுள்ளதாக காவற்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அவர்களை அங்கிருந்து செல்லுமாறு காவற்துறையினர் கேட்டுக்கொண்ட போதிலும் அவர்கள் அங்கிருந்து செல்லாது தொடர்ந்தும் சத்தியாகிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சத்தியாகிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய சம்பவங்கள் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க சுதந்திரச் சதுக்க கட்டடத்திற்கும் அதன் சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். இதனால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அனுமதி தருமாறு காவற்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதனை கவனத்தில் கொண்ட நீதவான், சத்தியாகிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக காவற்துறையிருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
வீ. இராதாகிருஷ்ணனை மலையக மக்கள் முன்னணியில் இணைக்கும் விடயத்திற்கு முடிவு..!!
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணனை மலையக மக்கள் முன்னணியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் காரசாரமான வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் முடிவொன்று எட்டப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்படி பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனுக்குத் தலைமைப் பதவியை வழங்கி அவரைக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. பம்பலப்பிட்டி வெஸ்ரன் ஹோட்டலில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்நாள் நடைபெற்ற கூட்டத்தில் காரசாரமாக விவா தம் நடைபெற்றுள்ளது. இதன்போது கட்சியின் சில மூத்த உறுப்பினர்களுக் கிடையே சூடான வார்த்தைப் பிரயோக ங்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனை கட்சிக்குள் இணைத்துக் கொள்வதில் ஓர் இணக்கத்திற்கு வராவிட்டால் கட்சியிலிருந்து விலக்கிவிடப்போவதாக முக்கிய உறுப்பினர்கள் சிலர் எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே பிடிவாதப் போக்கிலிருந்த சிலர் தமது நிலைப்பாட்டைத் தளர்த்தி இராதா கிருஷ்ணனைத் தலைவராக உள்வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்துவிட்டதாகத் தெரிய வருகின்றது. அடுத்த கட்டமாக கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமெனக் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பீ. யிடமும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐ.நா முன்னாள் துணை பொதுச்செயலர் தெரிவிப்பு..!!
இறுதிக்கட்டயுத்தத்தின்போது இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐ.நாவின் முன்னாள் துணை பொதுச்செயலர் டெனிஸ் ஹாலிடே தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகள் பக்கச் சார்பற்ற முறையில் அமைய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து இலங்கை உதாசீனமான போக்கைப் பின்பற்றி வருகிறது. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் டப்ளின் நடைபெற்ற விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அனர்த்த குறைப்பு உச்சிமாநாடு இலங்கையில்..!!
ஆசிய அனர்த்த குறைப்பு உச்சிமாநாடு 2011ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது. ரஷ்யா, ஜப்பான், சீனா உட்பட 29 நாடுகள் அங்கம் வகிக்கும் ஆசிய அனர்த்த குறைப்பு உச்சிமாநாட்டை இலங்கையில் எதிர்வரும் 2011ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நடத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் ஆலோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எந்திரன் திரைப்படம் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடம்..!!
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு அமெரிக்கா மற்றும் கனடாவின் பல இடங்களில் கட்டண சிறப்புக் காட்சி நடைபெற்றது. ஹாலிவுட் படங்களுக்குத்தான் இதுபோன்ற காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். படம் வெளியான முதல் தினம் எந்திரன் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட் படமான சோஷியல் நெட்வொர்க் முதலிடத்திலும் இருந்தது. அப்போதே, எந்திரன் முதலிடத்துக்கு வந்துவிடும் என கணிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி அக்டோபர் இரண்டாம் தேதி நிலவரப்படி ரோபோ / எந்திரன் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்துக்கு வந்துள்ளது. பெரிய ஹாலிவுட் படங்களின் வெளியீடு இல்லாத சூழல் என்றாலும், அமெரிக்க டாப் 10-ல் இந்தியப் படங்களுக்கும் ஒரு இடம் கிடைப்பதே பெரிய விஷயம். ஆனால் ரஜினியின் படமோ முதலிடத்தையே பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த விசேட செயலணி ஒன்றை அரசாங்கம் நியமிக்கவுள்ளது..!!
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட செயலணி ஒன்றை அரசாங்கம் நியமிக்கவுள்ளது. சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதற்காக நீதிமன்ற அமைச்சினால் 44 பேரைக் கொண்ட விசேட செயலணி ஒன்று நியமிக்கப்படவுள்ளது. மாதாந்த அடிப்படையில் இந்த செயலணி சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் நோக்கில் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த செயலணியில் அங்கம் வகிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் இராணுவ முகாம்களை அமைத்து அதன் மூலம் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கு இராணுவத்தினர் தீர்மானித்துள்ளனர். கடற்படையினரும் கூடுதலான முகாம்களை அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடல் வழியாக சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் செல்வதனை தடுப்பதற்காக விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தநிறுத்த உடன்படிக்கை வீழ்ச்சியடைய அமெரிக்காவும் பிரித்தானியாவும் காரணம்..!!
புலிகளுக்கும் அரசிற்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை வீழ்ச்சியடைவதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய அந்நாட்டு காங்கிரஸ் சபை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைமைகள் குறித்து இப்பேச்சுவார்த்தையின்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடு போன்ற துறைகள் குறித்து இலங்கைத் தூதுவர், அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார். அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்சபை உறுப்பினர் மேரி லென்டர்யூ, கிளன் தொம்சன், ஜிம் மோர்கன் குடியரசுக் கட்சியின் பிரதிநிதி ஸ்டீவ் டெரியாஸ், ஹொவாட் க்ளோப் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அமெரிக்காவின் உதவியை பெற்றுக்கொள்ளுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜயலத் ஜயவர்தன ஜெனீவாவில் சமர்ப்பித்த பிரேரணை நிராகரிப்பு..!!
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன ஜெனீவாவில் நடைபெற்ற ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்ற அமைப்பில் சமர்ப்பித்த பிரேரணை அந்த அமைப்பினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அப்பிரேரணை தொடர்பாக சமர்ப்பித்த இலங்கையின் உண்மைநிலை தொடர்பான விளக்கத்தை கருத்திற்கொண்ட அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன சமர்ப்பித்த பிரேரணையை முற்றாக நிராகரித்தது. மேற்படி அமைப்பின் கூட்டத் தொடரில் பங்குபற்றிய இலங்கை அரசாங்க அணியில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அணியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அகில விராஜ் காரியவசம் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஜயலத் ஜயவர்தனவின் பிரேரணையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் அரசாங்கம் சர்வாதிகார போக்கில் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
கடந்த சில தினங்களாக வவுனியாவில் மீண்டும் கள்வர்களின் கைவரிசை ஆரம்பம்..!!
கடந்த சில தினங்களாக வவுனியாவின் நகர்ப்பகுதி மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் கள்வர்கள் தமது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். நேற்று இரவு மட்டும் வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் மூன்று வீடுகளில் கள்வர்கள் கொள்ளையிட முயற்சித்துள்ளனர். வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களின் வீடுகளிலும் வெளிநாடுகளிலிருந்து சொந்தக்காரர்களைச் சந்திக்க வந்தவர்களின் வீடுகளிலுமே இந்தக் கொள்ளை முயற்சிகள் இடம் பெறுவதாகத் தெரியவருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சிலதினங்களுக்கு முன்னர்தான் வவுனியாவில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் தனியாக காவல்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டு குடும்பத் தலைவர்களிடம் விபரங்கள் சேகரித்து சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவது இங்குக் குறிப்பிடத்தக்கது. இதேபோன்று யாழ்ப்பாணத்திலும் கள்வர்களின் கைவரிசை இடம் பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் இணையத்தள வடிவமைப்புப் போட்டி 2010 – யாழ். மாவட்டம்..!!
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் உள்ளூர் மயமாக்கப்பட்ட செயல்களுக்கான சிறப்பு மையமானது, கணினியை உள்ளூர்மொழிகளில் பயன்படுத்துவது சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. இம்மையத்தினால் மென்பொருள்கள் இலங்கைக்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உள்ளூர்மயமாக்கம் (Localisation) செய்யப்பட்டு வருகின்றன. அத்தோடு உள்ளடக்க உள்ளூர்மயமாக்கம், உள்ளூர்மொழிகளில் உள்ளடக்க அபிவிருத்தி, உள்ளூர்மொழிகளில் கணிமை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் ஆகியனவும் இம்மையத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் ஆகும். இச்சிறப்பு மையமானது LAKapps மையம் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழ்மொழியில் கணிமை தொடர்பான செயற்திட்டம் ஒன்று கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய பாடசாலை மாண வர்கள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளிலும், அறிவகங்களிலும், கணினி வளநிலையங்களிலும் நடாத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக கிழக்குமாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான ஒரு இணையத்தள வடிவமைப்புப் போட்டியும் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன. இச்செயற்திட்டம் மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவ்வருடம் யாழ் மாவட்டத்தில் தமிழ் கணிமை சம்பந்தமான செயற்திட்டம் ஒன்று இந்த LAKapps மையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய யாழ் மாவட்டத்தில் உள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி ஆகிய கல்வி வலயங்களிலுள்ள பல பாடசாலைகளிலும் புலோலி கணினி வள நிலையத்திலும், யாழ். உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்திலும் தமிழ் கணிமை சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், தமிழ் இணையத்தள வடிவமைப்பு பற்றிய பயிற்சிப்பட்டறைகள் ஆகியன நடத்தப்பட்டன. இக்கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் ஏறக்குறைய 1000 மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
யாழில் நடைபெறும் இந்தச் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்போது யாழ். பாடசாலை மாணவர்களுக்கான தமிழ் இணையத்தள வடிவமைப்பு போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது. இதில் யாழ் பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்குபெறலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்களை வலயக் கல்விப் பணிப்பகங்களிலும் http://www.lakapps.lk/llcj/ என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான இறுதித் திகதி 10.10.2010. போட்டிக்குரிய விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அனைத்தும் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களது இணையத்தளங்களை நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் அபிவிருத்தி செய்து முடித்து எமக்கு சமர்ப்பிக்கவேண்டும். இப்போட்டியில் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பெறும் இணையத்தளங்களை வடிவமைத்த வெற்றியாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும்.
அத்தோடு ஒவ்வொரு வலயத்திலிருந்து மேலதிகமாக தகுதியான இரண்டு இணையத்தளங்களுக்குச் சிறப்புப் பரிசில்களும் தகுதியானவை என நடுவர்களால் தெரிவு செய்யப்படும் இணையத்தளங்களை வடிவமைத்த மாணவர்களுக்கு பங்கு பற்றியதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும். இவை அனைத்தும் நவம்பர் மாதம் இடம்பெறும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.

இந்த செயற்திட்டம் பற்றிய மேலதிக விபரங்களுக்கும் விசாரணைகளுக்கும்
இணையத்தளம் http://www.lakapps.lk/llcj/
மின்னஞ்சல் – sarvesk@uom.lk
தொலைபேசி – 0114216061 - உடன் தொடர்பு கொள்ளலாம்.
இணையத்தளம் http://www.lakapps.lk/llcj/
மின்னஞ்சல் – sarvesk@uom.lk
தொலைபேசி – 0114216061 - உடன் தொடர்பு கொள்ளலாம்.
சரத் பொன்சேகா சங்கடத்தில் வீழ்வதற்கு எதிர்க்கட்சிகளும் அமெ.தூதரகமுமே காரணம் - விமல் வீரவன்ச..!!
எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகளுமே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சங்கடத்தில் தள்ளியுள்ளனர். இவர்களது பேச்சினை இனியும் கேட்டுக் கொண்டிருக்காது அனோமா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதன் மூலமே தனது கணவரை விடுவித்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில், சரத் பொன்சேகா என்பவருக்கு செல்யூட் அடிக்கவும் செல்யூட் வாங்கவும் மாத்திரமே தெரியும். அவருக்கு அரசியல் தெரியாது. இருந்தும் யுத்தம் தொடர்பில் நன்கு தெரியும். ஆனாலும் அரசியல் தெரியாத ஒருவரை கொண்டுவந்து எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் இவ்வாறான சங்கடத்தில் தள்ளிவிட்டுள்ளனர். இதற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகளும் உதவி புரிந்தனர்.சரத் பொன்சேகாவை நினைக்கும் போது எனக்கும் கவலையாக இருக்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியினால் அதற்கு ஒப்புதல் அளிக்காதிருக்க முடியாது.
இராணுவ நீதிமன்றத்தின்மூலம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்றாலோ அல்லது தனது கணவர் தனக்கு வேண்டும் என்றாலோ அனோமா பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோர வேண்டும். எதிர்க்கட்சியினரின் பேச்சினைக் கேட்டு மன்னிப்புக் கோராதிருப்பதில் பலன் ஏதும் கிட்டப்போவதில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது கணவர் விஜய குமாரதுங்க சிறையில் இருந்த சமயத்தில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் மன்னிப்பு வழங்குமாறு கோரியதையடுத்தே அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அனோமாவுக்கு தனது கணவர் வேண்டுமென்றால் மன்னிப்புக் கோருவதைத் தவிர வேறு வழி கிடையாது. வீதி வீதியாக அலைவதில் நன்மையில்லை. சரத் பொன்சேகா சிறையில் இருக்க வேண்டியவர் அல்ல. அவர் வெளியில் இருக்க வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். ஆனாலும் அவர் வெளியில் வருவதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. இதனாலேயே பொன்சேகா மன்னிப்புக் கேட்கக் கூடாது என்று அனோமா ஊடாக தூண்டி விடுகின்றனர். பொன்சேகாவின் குடும்பத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிக்க வேண்டாம் என்றார்.

ரஜினியை ரசிகர்கள் தங்களது கடவுளாக நினைத்து அலகு குத்தி கொண்டாடுகிறார்கள்..!!
ராகவேந்திரர்? பாபா?.. நோ இவர்கள் எல்லாம் கிடையாது. பால் தாக்கரேதான் ரஜினியின் லேட்டஸ்ட் கடவுள். மும்பைக்கு ரோபோ பிரிமியர் ஷோவுக்கு வந்த ரஜினி பால் தாக்கரேயை சென்று சந்தித்தார். இவரது சிவசேனா மும்பைவாழ் தமிழர்களை அடித்து உதைத்து மும்பையிலிருந்து வெளியேற்றிய கதை எந்த தமிழனும் மறக்க முடியாதது. தமிழர்கள் என்றில்லை, மற்ற மாநிலத்தவர்களின் கதையும் ஏறக்குறைய இதேதான். மராட்டியன் என்றால் மட்டுமே தாக்கரேக்களின் கூடாரத்தில் மதிப்பு. பால் தாக்கரேயை சந்தித்துவிட்டு வந்த ரஜினி, என்னுடைய பெற்றோர்கள் மராத்தியர்கள், மராத்தி படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியதாகவும், தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி என உணர்ச்சி வசப்பட்டதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் ரஜினியின் வாழ வைக்கும் தெய்வங்கள் அவரது ரசிகர்கள், இதுவே பெங்களூரு என்றால் அவர் ஒரு கன்னடர், அவரது கடவுள் ராஜ்குமார், மும்பை சென்றால் அவர் மராட்டியர், அவரது கடவுள் பால் தாக்கரே. துரதிர்ஷ்டம் எந்திரன் வங்காள, குஜராத்தி, போஜ்புரி, மலையாள, துளு போன்ற மொழிகளில் வெளியாகவில்லை. வெளியாகியிருந்தால்... ரஜினியின் மேலும் சில கடவுள்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)