பயனர்கள்.

ript>

சனி, 16 அக்டோபர், 2010

இலங்கையின் வடக்குக்கு பயணம் செய்வது குறித்த தடையை ஜப்பான் தளர்த்தியது..!!

இலங்கையின் வடக்கு பிரதேசங்களுக்கு பயணம் செய்வது குறித்து ஜப்பானிய பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அந்நாடு தளர்த்தியுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக வடக்குப் பிரதேசங்களுக்கான பயணங்களை தவிர்க்குமாறு ஜப்பான் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், தற்போது வடக்கின் பாதுகாப்பு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் இன்று அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா போன்ற நகரங்களுக்கான பயண எச்சரிக்கைகளை ஜப்பான் தளர்த்தியுள்ளது. எவ்வாறெனினும், வடக்கு பிரதேசங்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஜப்பானிய பிரஜைகள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்களுக்கான விஜயங்களை தவிர்க்குமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி சம்பளம் கேட்டேனா? - தமன்னா ஆவேசம்..!

ரூ.1 கோடி சம்பளம் கேட்டதால் தமன்னாவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குகிறார்கள் என தகவல் வெளியானது. இது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியது: தமிழில் கார்த்தியுடன் ‘சிறுத்தை', தெலுங்கில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா படங்கள் என 3 படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர், ராம் ஆகியோருடன் 2 படங்கள் உள¢ளன. இந்த படங்களின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. மொத்தம் 6 படங்களில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கால்ஷீட் இல்லை. இதற்கிடையில் சிலர் என்னிடம் கால்ஷீட் கேட்டார்கள். அவர்களிடம் என்னுடைய சூழலை சொன்னேன். ‘ஜனவரியிலாவது கால்ஷீட் கொடுங்கள்Õ என்றனர். ‘அதுவும் முடியாதுÕ என்றேன். இதை மனதில் வைத்துக்கொண்டு 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள். நான் யாரைப் பற்றியும் தவறாக கூற விரும்பவில்லை. ஒரே நாள் இரவில் நான் ஹீரோயின் ஆகிவிடவில்லை. கஷ்டப்பட்டு நடித்து, படிப்படியாக முன்னேறிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

மாத்தறை திஹகொட, நாதுகல பஸ் தரிப்பிடத்தில் இளைஞர் சுட்டுக்கொலை..!!

மாத்தறை மாவட்டம், திஹகொட, நாதுகல பஸ் தரிப்பிடத்தில் வைத்து இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ்தரிப்பிடத்தில் நின்றிருந்த இவரை வானொன்றில் வந்த ஆயுதக்குழுவொன்று சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது. இறந்தவர் மாத்தறை பள்ளிமுல்லையைச் சேர்ந்த 30 வயதுடைய ஜெயவிக்ரம என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் 17பேர் தலைமன்னார் வருகை..!!

இலங்கை கடற்பரப்பினுள் மூழ்கி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட மீன்பிடி படகுகளை எடுத்துச் செல்வதற்காக தமிழக மீனவர்கள் 17பேர் தலைமன்னார் வருகை தந்துள்ளனர். ஜுலை 22ம் திகதியளவில் இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கிய தமது படகுகளை மீட்க முடியாமல் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் தமிழகம் திரும்பினர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களுடன் இணைந்து படகுகளை மீட்க முற்பட்டபோதும் மீட்க முடியாததால் ராமேஸ்வரம் மீனவர்களை அனுப்பிவைத்த இலங்கை கடற்படையினர், அடுத்த சில நாட்களில் இரண்டு படகுகளையும் மீட்டு தலைமன்னார் கடற்படை முகாமில் நிறுத்தினர். இலங்கை செல்ல மத்திய அரசிடமிருந்து உத்தரவு வந்தது. இதை தொடர்ந்து மூன்று படகில் மீனவர்கள் கணேசன் பாக்கியராஜ் உட்பட 17பேர் தலைமன்னார் வந்தனர். கடலோர காவல்படை கப்பலின் பாதுகாப்புடன் இந்திய கடல்எல்லை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17மீனவர்களும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கிருந்து இலங்கை கடற்படையினரின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு படகுகளையும் மீட்டு ராமேஸ்வரம் திரும்பினர். இலங்கை கடற்படையின் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் இதனை உறுதி செய்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமாலை நாடு திரும்பினார்..!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமாலை 7 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளார். சிறீலங்கா விமானசேவைக்கு சொந்தமான விஷேட விமானத்தில் ஜனாதிபதி வந்தடைந்ததாக தெரிவித்துள்ளார். பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அழைப்பில் நேற்று முன்தினம் புதுடில்லிக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்குடன் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள், அவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் என்பன தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுமுள்ளார்.

கொக்கொட்டிச்சோலை முதலைக்குடாவில் ஒருவர் சுட்டுக்கொலை..!!

மட்டக்களப்பு கொக்கொட்டிச்சோலையில் முதலைக்குடாவில் நேற்றையதினம் இரவு 9.30மணியளவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குற்றச்செயல் சம்பவத்துடன் தொடர்புள்ள சந்தேக நபரொருவரைத் தேடி பொலிசார் சென்றபோது பொலிஸாருக்கும் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது பொலிஸாரின்; துப்பாக்கி வெடித்தே குறித்தநபர் இறந்ததாக கூறப்படுகின்றுது. பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.

தாய்லாந்தில் கைதான இலங்கை அகதிகள் விடயம்..!!

கனடாவின் ஓட்டாவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகம், தம்முடன் தொடர்புகொண்டு, தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட இலங்கையர் தொடர்பான நிலவரங்களை அறிவித்துள்ளதாக கனேடிய தமிழ்ப் பேரவை தெரிவித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டவர்களில் சுமார் 126பேர் அகதிகளாகப் புகலிடம் கோரியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் நான்கு வயதுக்கு உட்பட்ட18 குழந்தைகளில் இருமாதம் நிரம்பிய குழந்தை ஒன்றும் அடங்குகின்றது. 21 பெண்களும் 15 ஆண்களும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாவர். 4 கர்ப்பிணித் தாய்மார்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிட்டுள்ளதோடு அவர்களுக்கான உதவிகளையும் வழங்கி வருகின்றனர். எந்த ஒரு அகதிக் கோரிக்கையாளரும் கம்பிகளுக்குப் பின் வைக்கப்பட்டிருத்தல் கூடாது என்றும் தேவையானதை விட அதிகமான நேரம் வைக்கப்படக் கூடாது எனவும் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகளுக்கான ஆணையம் நம்புகின்றது" என்று பேரவை மேலும் தெரிவிக்கின்றது.