பயனர்கள்.

ript>

சனி, 16 அக்டோபர், 2010

தமிழக மீனவர்கள் 17பேர் தலைமன்னார் வருகை..!!

இலங்கை கடற்பரப்பினுள் மூழ்கி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட மீன்பிடி படகுகளை எடுத்துச் செல்வதற்காக தமிழக மீனவர்கள் 17பேர் தலைமன்னார் வருகை தந்துள்ளனர். ஜுலை 22ம் திகதியளவில் இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கிய தமது படகுகளை மீட்க முடியாமல் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் தமிழகம் திரும்பினர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களுடன் இணைந்து படகுகளை மீட்க முற்பட்டபோதும் மீட்க முடியாததால் ராமேஸ்வரம் மீனவர்களை அனுப்பிவைத்த இலங்கை கடற்படையினர், அடுத்த சில நாட்களில் இரண்டு படகுகளையும் மீட்டு தலைமன்னார் கடற்படை முகாமில் நிறுத்தினர். இலங்கை செல்ல மத்திய அரசிடமிருந்து உத்தரவு வந்தது. இதை தொடர்ந்து மூன்று படகில் மீனவர்கள் கணேசன் பாக்கியராஜ் உட்பட 17பேர் தலைமன்னார் வந்தனர். கடலோர காவல்படை கப்பலின் பாதுகாப்புடன் இந்திய கடல்எல்லை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17மீனவர்களும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கிருந்து இலங்கை கடற்படையினரின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு படகுகளையும் மீட்டு ராமேஸ்வரம் திரும்பினர். இலங்கை கடற்படையின் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் இதனை உறுதி செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக