பயனர்கள்.

ript>

வியாழன், 14 அக்டோபர், 2010

ட்விட்டரில் நான் இல்லை - அசின்..!!

தனக்கு தெரியாமல் என்பெயரில் ட்விட்டர் ஆரம்பித்து, எனது ரசிகர்களுடன் யாரோ உரையாடி வருகிறார்கள், என்று கூறியுள்ளார் அசின். யாரோ சிலர் ட்விட்டரில் அசின் பெயரில் துவக்கி, ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனராம். இதற்கு ஏராளமான பாலோயர்கள் குவிந்துள்ளனராம். இதுகுறித்து பற்றி அசின் நான் டுவிட்டரிலோ, ஆர்குட்டிலோ அல்லது வேறு எந்த வெப்சைட்டிலும் இல்லை. எதிர்காலத்தில் ஒருவேளை துவங்கலாம். ஆனால் இப்போது இல்லை. இணைய தளங்களில் எனது பெயரை யாரும் பயன்படுத்த வேண்டாம்..." என்று கூறியுள்ளார்.

சேனைக்குடியிருப்பு ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு..!!

அம்பாறை கல்முனை சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள ஆற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். துறைநீலாவணையைச் சேர்ந்த சேனைக்குடியிருப்பில் வசித்துவந்த 50வயதான கோவிந்தப்பிள்ளை குணசேகரம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் கல்முனை வடக்கு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கல்முனைப் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி வைத்திய நிலையங்கள், போலி மருந்தகம் பற்றி தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்..!!

நாட்டில் இயங்கிவரும் போலி தனியார் வைத்திய நிலையங்கள், போலி மருந்தகங்கள் போன்றவை தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்கள் மேற்கொள்வதற்கு இலகுவாக தொலைபேசி இலக்கங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு போலியாக இயங்கிவரும் தனியார் வைத்திய நிலையங்கள், மருந்தகங்கள் தொடர்பான விபரங்களை 011 2883195,0113083360 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.

வாகரை, ரிதிதென்ன கிராமத்தில் 14வயது மாணவி தற்கொலை..!!

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயகலகத்திற்கு உட்பட்ட ரிதிதென்ன கிராமத்தில் 14வயது மாணவியொருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலம் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதி பாடசாலையொன்றில் 09ம் வகுப்பு பயிலும் மாணவியே தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாழைச்சேனைப் பொலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர் மீது மோனிகா புகார்..!!

கவுரவர்கள் படத்தில் நடித்ததற்காக தனது சம்பள பாக்கி ரூ. 2 லட¢சத்தை தரவில்லை என தயாரிப்பாளர் மீது நடிகை மோனிகா புகார் அளித்துள்ளார். சஞ்சய்ராம் தயாரித்து, இயக்கியுள்ள படம் Ôகவுரவர்கள்Õ. சத்யராஜ், விக்னேஷ், மோனிகா நடித்துள்ளனர். இப்படம் நாளை திரைக்கு வருகிறது. மோனிகாவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில், ரூ. 2 லட்சத்தை ஷூட்டிங்கிற்கு பின் வழங்குவதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்து இருந்தார்களாம். ஆனால் படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் சம்பள பாக்கியை தரவில்லை என சஞ்சய் ராம் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் மோனிகா. இது பற்றி மோனிகா கூறியதாவது: பட ஷூட்டிங் முடிந்ததும் டப்பிங¢ பேசுவதற்கு முன்பே சம்பள பாக்கியை கேட்டேன். டப்பிங் முடிந¢ததும் தருவதாக சொன்னார்கள். டப்பிங் முடிந்தும் சம்பளத்தை தரவில்லை. இது பற்றி கேட்பதற்கு போன் செய்தால் போனை சஞ்சய் ராம் எடுப்பதே இல்லை. 100 முறையாவது அவருக்கு போன் செய்திருப்பேன். ஒரு முறை கூட எடுத்து பேசவில்லை. வேறு வழியில்லாமல்தான் சங்கத்தில் புகார் செய்தேன். இப்படத்துக்கு 20 நாள் கால்ஷ¦ட் கொடுத்தேன். ஆனால் 6 நாட்கள் கூடுதலாக நடித்துக் கொடுத்தேன். அதையெல்லாம் மறந்துவிட்டு என்னை அலைக்கழிக்க வைக்கிறார்கள். இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடிவு எடுப்பதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி  தெரிவித்துள்ளார். இவ்வாறு மோனிகா கூறினார்.

அமெரிக்காவில் பாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு : விஞ்ஞானிகள் நூதன திட்டம்..!!

அமெரிக்காவில் பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவில் விஷ பாம்புகள் அதிக அளவில் உள்ளன. இவை அங்குள்ள வனப்பகுதியில் மரங்களில் சர்வ சாதாரண மாக உலா வருகின்றன. மக்களின் உயிருக்கு அச்சுறுத் தலாக அவை திகழ்கின்றன. அவை ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட சரக்கு வாகனங்களில் ஊடுருவி வந்துள்ளன. இதனால் கடந்த 1980-ம் ஆண்டு முதல் பாம்புகளின் தீராத தொல்லை இங்கு அதிகரித்துள்ளது.
எனவே அங்குள்ள விஷ பாம்புகளை கொல்ல அமெரிக்க வேளாண் விஞ்ஞானிகள் நூதன திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எலி என்றால் பாம்புகளுக்கு கொள்ளை பிரியம். அவற்றை விழுங்கி உணவாக்கி கொள்ளும். எனவே எலிகளின் உடலில் “அசிடோமினாபென்” என்ற விஷ மருந்தை செலுத்தி காட்டுக்குள் உலவ விட்டால் அவற்றை சாப்பிடும் பாம்பு களை செத்து மடியும் என்று கருதினர். அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் குவாம் தீவில் உள்ள 20 ஏக்கர் வனப்பகுதியில் 200 எலிகளை ஹெலிகாப்டர் மூலம் வீசினர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே இதே திட்டத்தை பெருமளவில் செயல்படுத்த உள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட விஷ எலிகள் வீசப்பட உள்ளன. இதன் மூலம் அங்குள்ள விஷ பாம்புகளின் எண் ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரத்தினபுரி நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வசிக்கமுடியாத நிலை காணப்படுகிறது-எம்.கே.சிவாஜிலிங்கம்..!!

இரத்தினபுரி நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வசிக்கமுடியாத நிலை காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று நிவித்திகல குக்குலகல பிரதேசத்துக்கு விஜயம்செய்த சிவாஜிலிங்கம் அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்துள்ளார். இது குறித்து எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்த எம்.கே சிவாஜிலிங்கம், நான் இன்று நிவித்திகல குக்குலகல பிரதேச மக்களை நேரில் சென்று சந்திதேன். இவர்கள் இன்னும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இம்மக்கள் இங்கு தொடர்ந்து தங்கமுடியாத நிலை காணப்படுகின்றது. இதுவரை 10 குடும்பங்கள் மாத்திரமே மீள் திரும்பியுள்ளதாகவும் தற்போதும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. தமிழ் குடும்பங்களின் 25 வீடுகள் பெருபாண்மை இனத்தவரால் தாக்கபட்டுள்ளதோடு இவர்களின் உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மட்டுமே வந்து தம்மை பார்வையிட்டுள்ளார். எந்ந ஒரு தமிழ் அமைச்சர் கூட வரவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.கோட்டையிலிருந்து பீரங்கிக் குண்டுகள் கண்டுபிடிப்பு..!!

யாழ்.கோட்டையின் இடிபாடுகளுக்கிடையிலிருந்து ஒல்லாந்தர் காலத்துப் பீரங்கிக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ். கோட்டையின் புனரமைப்புப் பணியின்போது தொல்லியல் பொருள்கள் ஏதாவது இருக்கின்றவா என்பதைக் கண்டு பிடிப்பதில் ஆராச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன்போதே இக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோட்டையின் சுற்று மதில்களைப் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இடிக்கப்பட்ட சில இடங்களில் ஒல்லாந்தர் பாவித்த பழைமை வாய்ந்த பீரங்கிக் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கோட்டையைச் சுற்றியுள்ள அகழியைத் தோண்டி புனரமைக்கும் பணிகள் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த அகழி புனரமைப்புக்கு முன்னர் அப்பகுதியில் வெடிபொருள்கள் இருக்கின்றனவா என்ற சோதனை நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவுள்ளது.

நமீதாவுக்கு மலேரியா காய்ச்சல்..!!

தனியார் செல்போன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட நமீதா கடந்த சில நாட்களாக மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ரசிகர்களை சந்தித்து உரையாடுகிற நிகழ்ச்சி என்பதால், காய்ச்சலை பொருட்படுத்தாமல், அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நமீதா பேசமுடியாமல் தடுமாறி, மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ரசிகர்களை கலைந்து போக வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த நமீதாவை, சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்கள். நமீதா உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்தியாவின் நிலைப்பாட்டை அலட்சியம் செய்ததன் விளைவாகவே பிரச்சினை சிக்கலாகியது-ஜெகான் பெரேரா..!!

நாட்டின் கடந்த கால அரசுகள் இந்தியாவின் நிலைப்பாட்டை அலட்சியம் செய்ததன் விளைவாகவே பிரச்சினை சிக்கலாகியதாக இலங்கை சமாதானப் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிலைப்பாட்டை நாம் அலட்சியம் செய்ததால், ஆயுதக் குழுக்களுக்குப் பயிற்சியளித்தது என்று தெரிவித்த அவர், இந்தியாவின் கரிசனை இன்றும் நாளையும் என்றும் கவனத்திற்கொள்ளப் படவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தபோதே ஜெகான் பெரேரா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு இதுவே பொருத்தமான காலகட்டமாகும் உறுதியான ஓர் அரசாங்கம் இருப்பதால் தீர்வு காண்பதற்கு முடியும். யுத்தத்தை ஒரு பயங்கரவாத பிரச்சினையாக வரையறுக்க முடியாது இனப்பிரச்சினையின் பெறுபேறாகவே பயங்கரவாதம் தோன்றியது என்றும் ஜெகான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எமது கட்சியிலிருந்து எம்மை உதாசீனம் செய்வோருக்கு பதிலடி கொடுப்போம்-மனோகணேசன்..!!

எமது கட்சியிலிருந்து எம்மை உதாசீனம் செய்வோருக்கு பதிலடி கொடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எமது கட்சியிலிருந்து சொந்த முடிவின் அடிப்படையில் அரசுடன் இணைந்துகொண்டுள்ள பிரபாகணேசன் எம்பிக்கு எமது பொதுச்செயலாளரினால் கடந்த ஆகஸ்ட் 09ம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. இது அவரது உதாசீன போக்கை தெளிவாக எடுத்துகாட்டுகின்றது. அத்துடன் தான் வேறு ஒரு கட்சியை அமைக்கப்போவதாகவும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக தான் எடுத்த தனிப்பட்ட முடிவுகளை திருத்தி கொள்வதற்கு பிரபா கணேசன் எம்பிக்கு வழங்கப்பட்ட அவகாசம் போதுமானதாகும். இந்நிலையில் எமது கட்சியின் நிலைப்பாடுகளை உதாசீனம் செய்து தன்னிச்சையாக ஒழுங்கை மீறுபவர்கள்மீது உறுதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கட்சியை உதாசீனம் செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தொடர்பில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடம் கிடையாது. இந்நிலையில் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முடிவின்படி கட்சி அங்கத்துவத்திலிருந்து ஏன் நீக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி கேட்டு பிரபா கணேசனுக்கு இன்று கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டது..!!

கண்டி மாவட்டம் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடம் நேற்று புதன்கிழமை முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டத்தை யடுத்தே பொறியியல் பீடம் மூடப்பட்டதாக பல்கலைக்கழக பேராசிரியர் சரத் அபயகோன் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி பயணம்..!!

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி நோக்கிப் பயணமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.