பயனர்கள்.
ript>
ஞாயிறு, 10 அக்டோபர், 2010
சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்..!!
சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கைக்கு அடுத்தகட்ட கடனுதவியை வழங்குவது குறித்து நாணய நிதிய அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆய்வுகளின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் ஆறாம்கட்ட கடனுதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பொருளாதார நிலைமைகள் திருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாக இறுதியாக சர்வதேச நாணய நிதியம் மேற்கொண்ட மதிப்பீடுகளின் போது அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையை அடிப்படையாகக் கொண்டே அடுத்த கடனுதவிகள் குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள அதேவேளை, இதுவரையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.275 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் 824குடும்பங்களைச் சேர்ந்த 2525பேர் மீள்குடியேற்றம்..!!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் இதுவரை 824குடும்பங்களைச் சேர்ந்த 2525பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 549 குடும்பங்களைச் சேர்ந்த 1,784பேரும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வசித்து வந்த 215குடும்பங்களைச் சேர்ந்த 731பேருமே விஸ்வமடு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் செட்டிகுளத்தில் நலன்புரி நிலையத்திலிருந்து வந்தவர்களுக்கேதறப்பாள் வழங்கப்பட்டுள்ளது. மன்னகண்டல், மாணிக்கபுரம், வள்ளுவர்புரம் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அடுத்தவாரம் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.தயானந்தா தெரிவித்துள்ளார்.
நுவரெலியா கொட்டகலை ரொசிட்டா தோட்ட மக்கள் அடைமழை காரணமாக இடம்பெயர்வு..!!
மலையகப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையால் கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் வாழ்ந்த சுமார் 14 குடும்பங்களைச் சேர்ந்த 69பேரை அந்த வீடுகளை விட்டு வெளியேறுமாறு நுவரெலியா மாவட்டச் செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி பணித்துள்ளார். மேற்படி நடவடிக்கை நேற்று முன்தினம் (08) மாலை 4 மணிஅளவில் இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாக சில தினங்களாக பெய்துவரும் அடைமழையால் இத்தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் தொடர் குடியிருப்புகள் பாதிப்புக் குள்ளாகியுள்ளன. ஒரு சில வீடுகளில் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. இங்கு வாழும் மக்களின் பாதுகாப்பு கருதியே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்தில் ரூ.117 கோடி வசூல் : எந்திரனின் மந்திர சாதனை..!!
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எந்திரன் திரைப்படம் ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் ரூ.117 கோடி வசூல் செய்து, சாதனை படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் எந்திரன் திரைப்படம் வெளியானது. இது குறித்து இன்று வெளியான செய்திக்குறிப்பில் ஒரு வாரத்திற்கான வசூல் பட்டியல் காண்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. ஆந்திராவில் ரூ.30 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 4 கோடியும், வட இந்தியா முழுவதும் ரூ.15 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்னதாக சல்மான் கான் நடித்த 'தபாங்' திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.87 கோடி வசூல் செய்தது தான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை எந்திரன் முறியடித்துள்ளது. மேலும் 'தபாங்' திரைப்படம் 2 வாரத்தில் ரூ.117 கோடி வசூல் செய்த சாதனையை எந்திரன் படம் ஒரு வாரத்தில் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. ஆந்திராவில் ரூ.30 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 4 கோடியும், வட இந்தியா முழுவதும் ரூ.15 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்னதாக சல்மான் கான் நடித்த 'தபாங்' திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.87 கோடி வசூல் செய்தது தான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை எந்திரன் முறியடித்துள்ளது. மேலும் 'தபாங்' திரைப்படம் 2 வாரத்தில் ரூ.117 கோடி வசூல் செய்த சாதனையை எந்திரன் படம் ஒரு வாரத்தில் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்திலேயே மாபெரும் தேநீர் கோப்பையைத் தயாரித்து இலங்கை உலக சாதனை..!!
உலகத்திலேயே மாபெரும் தேநீர் கோப்பையைத் தயாரித்தமைக்கான கின்னஸ் உலக சாதனையை இலங்கை படைத்துள்ளது. கிளாக்ஸோஸ்மித்க்லைன் நிறுவனத்தால் வீவாவின் பிரதான தொனிப்பொருள் பிரச்சார நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த சாதனை நிகழ்வு ஆரம்பம்முதல் இறுதிவரை லண்டனைச் சேர்நத கின்னஸ் பிரதிநிதியால் கண்காணிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டமைக்கான உறுதிப்படுத்தல் சான்றில் இலங்கை கிளாக்ஸோஸ்மித்க்லைன் நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவுத் தலைவரும் இயக்குனருமான திரு. சச்சி தோமஸிடம் கையளிக்கப்பட்டது. இதற்கு முன் 2009ம்ஆண்டு செப்டம்பர்மாதம் 26ம்திகதி அமெரிக்கா, கன்ஸாஸ், போர்ட் ஸ்கொட் சுகாதார நிலையத்தினால் மாவெரும் தேநீர் கோப்பைக்கான சாதனை படைக்கப்பட்டிருந்தது. இந்த கோப்பையானது 3000லீற்றர் அதாவது 660 கெலன் தேநீரைக கொண்டது. எனினும் வீவாவினால் படைக்கப்பட்ட இந்த சாதனையானது 1000 கெலன்களைக் கொண்ட மாபெரும் சாதனையாகும். கிளாக்ஸோஸ்மித்க்லைன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களினதும், நூற்றுக்கணக்கான மக்களினதும் கரகோஷத்தின் மத்தியில் இந்த உலகசாதனை இன்றுகாலை 10.30 மணியளவில் படைக்கப்பட்டது. இந்த கோப்பை 10உயரமும், 8 அடி அகலமும் கொண்டது. 2000 வோல்ட்டேஜ் கொண்ட 6ஹீட்டர்களினால் தேநீர் சூடுபடுத்தப்பட்டது. தேநீரைச் சூடாக வைத்திருக்க மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் பயண்படுத்தப்பட்டன. இந்த அரிய உலகசாதனை நிகழ்ச்சியில் வீவாவின் தூதுவரான இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார் சங்கார, மற்றும் இலங்கை ஜனாதிபதியின் மகனான ஜோசித ராஜபக்ஷ, மற்றும் கலைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த கோப்பை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் மத்தியில் பார்வைக்கு விடப்பட்டது. இந்நிகழ்வு இடம்பெறுவதற்கு 3 தினங்களுக்கு முன்னரே இது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான திட்டமிடல்கள் 2 மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இலங்கை தமிழ் மக்களின் நிலை பற்றி தமிழக முதல்வர் மு.கருணாநிதி காங்கிரஸ் தலைவி கலந்துரையாடல்- இலங்கையின் வடக்கிலுள்ள முகாம் மக்களின் அவதி தொடர்பில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி இன்று காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியை சந்தித்தபோது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். அத்துடன் தமிழக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பிலான மனுவொன்றையும் தமிழக முதல்வர் இன்று சென்னையில் வைத்து சோனியாகாந்தியிடம் கையளித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான செயன்முறையை விரைவில் ஆரம்பிக்க அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமென்றும் தமிழக முதல்வர் சோனியா காந்தியிடம் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
70 குழந்தைகளுடன் நடன ஆசிரியர் “செக்ஸ்” உறவு - ஆபாச வீடியோக்கள் சிக்கியது..!!
அமெரிக்காவில் டெக்காஸ் நகரில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் மார்கோ அல்பெரஸ் (34). இவர் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அக்குழந்தைகளிடம் “செக்ஸ்” நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் சுமார் 70 குழந்தைகளிடம் “செக்ஸ்” வைத்து இருந்தது தெரிய வந்தது. மேலும் அவற்றை அவர் வீடியோ மூலம் ஆபாச படம் எடுத்து அதை பத்திரப்படுத்தி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் வீட்டை போலீசார் சோதனையிட்டு 200 ஆபாச வீடியோ கேசட்டுகளை பறிமுதல் செய்தனர். தான் குழந்தையாக இருந்த போது இதுபோன்று பல செக்ஸ் கொடுமையை அனுபவித்ததாகவும், அதன் பாதிப்புதான் தன்னை இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட செய்தது என்றும் ஆசிரியர் மார்கோ அல்பெரஷ் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)