அஜித்தும், மேனனும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வார்களா என்பதே சந்தேகமா இருக்கிறது இவர்களின் நடவடிக்கை.கெளதம் மேனன் இவரை தோழுக்கு மேல் தலை இல்லாதவர் என்று சொல்ல, அஜித்தோ நீ இல்லாமலே நான் 50 படம் பண்ணிட்டேன் அப்படின்னு பேட்டி கொடுத்து சூடாக்கினாங்க. அஜித் விட்ட அந்த கதை வழக்கம் போல சூர்யாவை நோக்கி போயிருக்கிறது. கெளதம் அடுத்து சூர்யாவுடன் அஜித் கதையை செய்கிறார், இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ஹிந்தியில் தன்னுடைய சொந்த தயாரிப்பு கம்பெனியை வைத்து தயாரிக்கிறார், தற்போது அவருடன் ட்வண்டித் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனமும் சேர்ந்து செய்கிறார்கள். ஆனால் இப்போது அஜித்தும் படத்தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்திருக்கிறார். கம்பெனி பெயர் குட்வில் எண்டர்டெயின்மெண்ட், இதில் இவர்கள் நண்பர்களும் இணைவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். கெளதமுடன் ரஹ்மான் இணைந்தது நினைவிருக்கலாம் அதேபோல்.. இதில் நீங்கள் நடிக்கும் படம் மட்டும்தான் தயாரிக்கபடுமா என்று கேட்டதற்கு, இல்லை எல்லா நடிகர்களுக்குமே எங்கள் நிறுவனம் படம் தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தல இனி தயாரிப்பாளர் “தல”
பயனர்கள்.
ript>
வெள்ளி, 1 அக்டோபர், 2010
மண்டைக்குள்ளேயே ஒரு கடிகாரத்தை செட் பண்ணி வைத்திருக்கும் இரு முக்கிய நடிகர்கள் விஜய்யும் வடிவேலுவும்..!!
மணி கூண்டுல சத்தம் வருதோ இல்லையோ, மணிகட்டுல இருக்கிற கடிகாரம் நினைவூட்டுதோ இல்லையோ, மண்டைக்குள்ளேயே ஒரு கடிகாரத்தை செட் பண்ணி வைத்திருக்கும் இரு முக்கிய நடிகர்கள் விஜய்யும் வடிவேலுவும்.சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டால் ஆளை விடுங்க என்று கிளம்பிவிடுவார்கள். அது எவ்வளவு முக்கியமான ஷாட்டாக இருந்தாலும் மறுநாள்தான். இயக்குனர்களும் அவரது மூடுக்கேற்ப சாயங்காலம் ஆறு மணிக்குள் தான் எடுக்க வேண்டிய பகுதிகளை எடுத்துவிட்டு போயிட்டு வாங்க சார் என்று விடைகொடுப்பதும் கால காலமாக நடக்கிற சங்கதி. இப்போது எல்லாவற்றுக்கும் ஒரு குட்பை சொல்லிவிட்டார் விஜய்.
காவலன் படப்பிடிப்புக்கு நள்ளிரவு வரை இருந்து நடித்துக் கொடுத்துவிட்டுதான் செல்கிறாராம். காரணம் அசின். அவரது கால்ஷீட்டை இடையில் இழந்துவிட்டு இரண்டு மாதம் படாத பாடு பட்டுவிட்டார் சித்திக். அதனால் அவர் மீண்டும் கால்ஷீட் கொடுக்கிற தேதிகளுக்குள் படத்தையே முடித்துவிட வேண்டும் என்று துடிக்கிறாராம். அதன் காரணமாக அசின் தேதி கொடுக்கும் போதெல்லாம் உங்க நேரத்தையும் கொஞ்சம் அனுசரிச்சு கொடுங்க என்று கேட்டாராம் விஜய்யிடம். அவரும் சம்மதித்துவிட்டார்.
கட்டிப்பிடிங்க திரையுல. விட்டுப்பிடிங்க நிஜத்திலங்கிற மாதிரியே நடக்குதே எல்லாமும்!
காவலன் படப்பிடிப்புக்கு நள்ளிரவு வரை இருந்து நடித்துக் கொடுத்துவிட்டுதான் செல்கிறாராம். காரணம் அசின். அவரது கால்ஷீட்டை இடையில் இழந்துவிட்டு இரண்டு மாதம் படாத பாடு பட்டுவிட்டார் சித்திக். அதனால் அவர் மீண்டும் கால்ஷீட் கொடுக்கிற தேதிகளுக்குள் படத்தையே முடித்துவிட வேண்டும் என்று துடிக்கிறாராம். அதன் காரணமாக அசின் தேதி கொடுக்கும் போதெல்லாம் உங்க நேரத்தையும் கொஞ்சம் அனுசரிச்சு கொடுங்க என்று கேட்டாராம் விஜய்யிடம். அவரும் சம்மதித்துவிட்டார்.
கட்டிப்பிடிங்க திரையுல. விட்டுப்பிடிங்க நிஜத்திலங்கிற மாதிரியே நடக்குதே எல்லாமும்!
ரஜினிகாந்த்- ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் 1000 தியேட்டர்களில் வெளியீடு..!!
மும்பை, அக்.1: நடிகர் ரஜினிகாந்த்- ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன்(இந்தியில் ரோபோட்) இந்தியா முழுவதும் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஞ்ஞானி வேடத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். தன்னைப் போலவே ஒரு ரோபோட்டையும் உருவாக்குகிறார். சுமார் 1000 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளதாக இந்தியில் படத்தை விநியோகித்த டோலு பஜாஜ் தெரிவித்தார். காலைக் காட்சியில் திரையரங்குகளில் 10 முதல் 15 சதவீதம் பேரே இருந்ததாக சினிமேக்ஸ் திரையரங்க வளாகத்தின் கிரிஷ் வான்கெடே தெரிவித்தார். சென்னையைப் போல எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பில்லை என்றாலும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவிப்பதன் மூலமாக பெரிய அளவில் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஷங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழ், இந்தி என வெளியாகியுள்ள இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தனக்கு பொது மன்னிப்பு கோரமாட்டார்..!!
ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தனக்கு பொது மன்னிப்பு அளிக்குமாறு கோரமாட்டார் என்று ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலரும் எம்.பியுமான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். 30மாத சிறைத்தண்டனைக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியதையடுத்து அவர் நேற்றிரவு வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தீர்ப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் சரத் பொன்சேகா கோரினால் அவர் தீர்ப்பினை பரிசீலனை செய்வாரென வெளியான தகவல்களையடுத்தே விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்பு அரசியல் பழிவாங்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு நாடுமுழுவதிலும் பொதுமக்களின் ஆதரவு திரட்டப்படும். சிவில் நீதிமன்றம் மூலம் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கப்பல் பணியாளர்களை மீட்க தூதரக மட்டத்தில் முயற்சி..!!
கடந்த அக்டோபரில் சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர்களை விடுவிப்பது தொடர்பில் எதிப்திய அதிகாரிகளுடன் எகிப்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி இலங்கைப் பணியாளர்களை விடுவிப்பது தொடர்பில் பேசுவதற்கு சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தித் தருமாறு கென்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது.
பலத்த பாதுகாப்போடு சூட்டிங்கில் பங்கேற்றிருக்கிறார் நயன்..!!
பிரபுதேவாவுடனான (கள்ளக்)காதல் வெட்டவெளிச்சத்துக்கு வந்த பிறகு ரொம்பவே பாதுகாப்பாக இருந்து வரும் நயன்தாரா, சமீப காலமாக சென்னை வருவதை தவிர்த்து வந்தார். அதுவும் பிரபுதேவாவின் மனைவி ரமலத்துக்கு ஆதரவாக மகளிர் அமைப்புகள் பேசத் தொடங்கியது முதல் அம்மணி கப் சிப். இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று நயன்தாராவை தங்கள் நிறுவன விளம்பரத்தில் நடிக்க அழைத்தது. சினிமாவில் மூணு மாசம் நடிச்சிக் கொடுத்தா கிடைக்கிற பணத்தை மூணே நாள்ல கொடுக்குறதா ரேட் பேசியிருக்கிறார்கள். மூணு நாள் சூட்டிங்கிற்காக ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு நாள் சம்பளம் முப்பது லட்சத்து சொச்சம். பணத்தாசை யாரை விட்டது. விளம்பரத்தில் நடிக்கவே மாட்டேன் என்ற தனது கொள்கையை கொஞ்சம் தளர்த்தி ஓ.கே. சொல்லி விட்டார். இந்த விளம்பர சூட்டிங்கை சத்தமில்லாமல் சென்னையில் நடத்த திட்டமிட்ட அந்த ஜவுளிக்கடை நிறுவனம், நயனுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்கவும் சம்மதித்தது. சகல வசதிகளுடன் பாதுகாப்பு வசதியையும் அம்மணி கேட்டுப் பெற்றுக் கொண்டார். ஏனாம்…?! மாதர் சங்கம் என்ற பெயரில் யாராவது சூட்டிங் நடக்கும் இடத்தில் வந்து பிரச்னை பண்ணி விட்டால என்ன ஆவது? என்ற பயம்தான் காரணமாம். பலத்த பாதுகாப்போடு சூட்டிங்கில் பங்கேற்றிருக்கிறார் நயன். விளம்பரத்தை முடித்த கையோடு அம்மணி கேரளாவுக்கு பறக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென கருதப்பட்ட தமிழ்க் குடும்பமொன்றை அவுஸ்திரேலிய பாதுகாப்பு..!!
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென கருதப்பட்ட தமிழ்க் குடும்பமொன்றை அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பினர் சிட்னியிலுள்ள தடுப்பு நிலையமொன்றில் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். தமது பிள்ளைகளுடன் இலங்கைத் தமிழ்க் குடும்பமொன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக த அவுஸ்திரேலியன் பத்திரிகை நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு நிலையத்திலிருந்து இரு மாதங்களுக்கு முன்னர் இந்தத் தமிழ்க்குடும்பம் சிட்னியிலுள்ள வில்லாவூட் தடுப்புநிலையத்திற்கு இடமாற்றப்பட்டிருந்தது. 6 வயது 3 வயதுடைய இரு மகன்மாருடன் இரகசியமான முறையில் இக்குடும்பம் இடமாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சிட்னியில் பெயார்ப்பீல்ட் மருத்துவமனையில் இக்குடும்பத்தின் தாய் மூன்றாவது பிள்ளையை கடந்த சனிக்கிழமை பிரசவித்துள்ளார். தடுப்பு நிலையத்தில் அதிகளவு பாதுகாப்புடன் இக்குடும்பம் வைக்கப்பட்டிருப்பதுடன் வெளி உலகுடன் தொடர்புகொள்ள முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. ஒசனிக் வைக்கிங் கப்பலிலிருந்த 78 இலங்கை அகதிகளில் இந்தத் தாயும் ஒருவராகும். இந்தத்தாய் புலிகளின் உறுப்பினராக இருந்தவர் என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டதாகவும் வட,கிழக்கு நீதிமன்ற முறைமையில் அவர் பணியாற்றியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்ணின் கணவர் கடந்த வருடம் நடுப்பகுதியில் கிறிஸ்மஸ்தீவுக்கு படகில் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறை..!!
ஏழு வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் 7வருட சிறைத்தண்டனை விதித்துள்ளார். கம்பஹா மாவட்டம் ஜாஎல பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்ட்டுள்ளது.
இத்தாலி மோதனா நகரில் கடந்த 25ம்திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்..!!
இத்தாலி மோதனா நகரில் கடந்த 25ம்திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். புத்தளம் மாவட்டதைச் சேர்ந்த உயிரிழந்த இலங்கையர்கள் இருவரின் சடலங்களை நாட்டிற்கு எடுத்துவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் மோதனா நகரிலிருந்து காரில் சென்று கொண்டிருந்தவேளை, தண்ணீர் பௌசர் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவிக்கப்படுகின்றது. இதில் வென்னப்புவ கிரிமெட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த திஸ்னா ஹெலன் சுஜீவனி எனும் 29வயது யுவதியும், லுணுவில சிரிகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த டப்ளிவ்.அஜித் ரஞ்சன் சுரேஷ் பெர்ணான்டோ எனும் 34வயது நபருமே உயிரிழந்தவர்களாவர். காரில் பயணித்த உயிரிழந்த திஸ்னா ஹெலன் சுஜீவனியின் கணவர் சுமித் எண்டன், அவர்களது மகன் சுபுன் தில்ஷான் ஆகியோருடன், காரினைச் செலுத்திச் சென்ற சாரதியான 36வயது மில்ரோய் மற்றும் அவரது மனைவியான ஏண் கயான் திலங்கா (வயது 32) ஆகியோரும் காயமடைந்து மோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மோதனா நகர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நீதவான் ஒருவரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட போக்குவரத்துப் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தி..!!
நீதவான் ஒருவரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட போக்குவரத்துப் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குறிப்பிட்ட போக்குவரத்துத் துறை பொலிஸ் சார்ஜன்ட் ஹட்டன் நகரில் மீன் விற்பனை செய்த வாகனமொன்றுக்கு அருகில் மோசமான வார்த்தைப் பிரயோகத்தினை மேற்கொண்டிருந்த போது அவ்விடத்தில் நீதவான் ஒருவர் இருப்பது குறித்து பொதுமகன் ஒருவர் குறிப்பிட்ட சார்ஜன்ட்டுக்கு அறிவித்துள்ளார். அதன்போது அந்த சார்ஜன்ட்ட நீதவானை அவமதிக்கும் வகையில் வார்த்தைப் பிரயோகத்தினை பிரயோகித்துள்ளார். இவ்விடயம் குறித்து குறிப்பிட்ட நீதவான் பொலிஸ் உயரதிகாரிக்கு அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது அந்த பொலிஸ் சார்ஜன்ட் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட நீதவான் நுவரெலியா மாவட்டம் வலப்பனை நீதிமன்ற நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகாவின் சிறைத்தண்டனை குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..!!
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை அரசியல் ரீதியாக பழிவாங்கி அவருக்கு 30வருட சிறைத்தண்டனையைப் பெற்றுக் கொடுத்திருப்பதும் ஜனாதிபதியே அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டிருப்பதும் அருவருக்கத்தக்க செயலாகும். இது சர்வதேச மட்டத்தில் பல கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. இந்த இழிவான செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதுடன் தேசிய சர்வதேச மட்டத்தில் பாரிய போராட்டங்களை நடத்தி பொன்சேகாவை விடுதலை செய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வழங்கப்பட்டுள்ள இந்த சிறைத்தண்டனை குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் அவருக்கு எதிராக அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்திடமிருந்தும் அதன் போலியான நீதிபதிகளிடம் இருந்தும் இவ்வாறுதான் தீர்ப்பு வெளிப்படும் என்பதையும் நாம் முன்னரே அறிந்திருந்தோம். ஏனெனில் இராணுவ நீதிமன்றத்தின் செயற்பாடுகள் அவ்வாறு தான் அமைந்திருந்தன என்றும் அக்கட்சி விசனம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டில் புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் முடிவுக்கு கொண்டு வந்த மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடும் நிகழ்வாக நடத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேக்கை வெட்டுவதற்கான கௌரவத்தை சரத் பொன்சேகாவுக்கே வழங்கியிருந்தார். அதுமட்டுமல்லாது இவரே சிறந்த இராணுவத் தளபதியென உலகுக்கும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். அவ்வாறான ஒரு இராணுவத் தளபதியைத்தான் இன்று ஜனாதிபதி சிறையில் அடைப்பதற்கு உத்தரவாதம் அளித்துள்ளார். போலியான இராணுவ நீதிமன்றத்தை அமைத்து அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் ஏற்றவகையில் இராணுவ நீதிமன்ற நீதிபதிகளை நியமித்து அதனடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பானது ஜீரணிக்க முடியாததும் அருவருக்கத்தக்கதுமாகும். ஐக்கிய தேசியக் கட்சி இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது; நிராகரிக்கின்றது. பொன்சேகா மீதான தீர்ப்பு இன்று சர்வதேச மட்டத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவருமே ஏதோவொரு வகையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு இராணுவத் தண்டனைக்குட்பட்டவர்களாவர். இவர்களாலேயே பொன்சேகாவுக்கு தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. இராணுவ நீதிமன்றத்தை அமைக்கும் உரிமையும் அதிகாரமும் அதேநேரம் நீதிபதிகளை தெரிவு செய்யும் உரிமையும் அதிகாரமும் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. இதன் பிரகாரமே யாவும் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் ஜனாதிபதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு மக்களின் பேரபிமானத்தைப் பெற்றவரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றமானது சட்டத்துக்கு உட்பட்டதல்ல என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த பாதுகாப்புச் செயலர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தூக்கில் இடுவேன் என்று கூறியிருந்தார். அப்படியானால் அவரை தூக்கில் போடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகத் தான் இந்த சிறைத்தண்டனை அமைந்திருக்கின்றதா எனக் கேட்கவிரும்புகிறோம். எனவே, சரத் பொன்சேகா இந்நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த இராணுவத் தலைவராவார். அவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் வெளிப்படுத்தி பலதரப்பட்ட போராட்டங்களை நடத்துவற்கும் அவருக்கான நீதியையும் விடுதலையையும் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். நெடுந்தீவுப் பயணிகளுக்கான படகுச் சேவையில் குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!!
யாழ். நெடுந்தீவுப் பயணிகளுக்கான படகுச் சேவையில் குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவிலிருந்து காலை 7 மணிக்கு குறிகாட்டுவான் செல்லும் பயணிகள் படகு அங்கிருந்து பகல் 10.30 மணிக்கு மீண்டும் நெடுந்தீவுக்குப் புறப்படுகின்றது. எனினும் இன்று 1ம் திகதி வெள்ளிக்கிழமைமுதல் காலை 9மணிக்கு குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து பயணிகள் படகு புறப்படும். இதேபோன்று பி. ப. 4.30 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்குச் சென்று வந்த படகு இன்றுமுதல் குறிகாட்டுவானில் இருந்து பி. ப. 4மணிக்கு புறப்படும். நெடுந்தீவில் இருந்து பி. பகல் சேவை 2மணிக்கு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை ஆயுதமுனையில் அச்சுறுத்தி பலலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன..!!
வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை ஆயுதமுனையில் அச்சுறுத்தி பலலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கடந்த 28ம் திகதி காலை 9மணியளவில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மட்டுவில் தெற்கில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவன் வெளியில் சென்றவேளை வீட்டினுள் நுளைந்த இனந்தெரியாத இருவர் ஆயுதமுனையில் தனிமையில் இருந்த பெண்னை அச்சுறுத்தி நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். நீளக் காட்சட்டை அணிந்திருந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர் என்றும் மேலும் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தியே நகைகளைக் கொள்ளையடித்தனர். என்றும் தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் படையினர் என்றும் வீட்டைச் சோதனையிட வேண்டும் என அவர்கள் அந்தப் பெண்ணை அச்சுறுத்தினர் என்றும் கூறப்படுகிறது. தாலிக்கொடி மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணமும் கொள்ளையிடப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)