பயனர்கள்.

ript>

வியாழன், 30 செப்டம்பர், 2010

சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம்..!!

ஜனநாயகத் தேசியக் கூட்டணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது நீதிமன்றம் 30 மாதகால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அச்சமயம், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் கலந்து கொள்ள சென்றிருந்ததால், அவர் நாடு திரும்பியதும், அவரது தீர்மானத்துகமைவாகவே தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கைச் சட்டத்தின் அடிப்படையில் ஆறு மாதத்திற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

கொழும்பு காசல் வைத்தியசாலையில் 14வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார்..!!

கொழும்பு காசல் வைத்தியசாலையில் 14வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். குறித்த சிறுமியும் அவரது குழந்தையும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குழந்தைபெறும் வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலொன்றினை அடுத்து சிறுவர் பாதுகாப்பு சபையின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சென்று சிறுமி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சத்திர சிகிச்சைமூலம் குழந்தை பெறப்பட்டதாகவும், சிறுவயதில் குழந்தை கிடைத்ததனால் குழந்தை, வைத்தியசாலையின் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குழந்தை பெற்றெடுத்த 14வயதுடைய சிறுமிக்கு தந்தை இல்லையெனவும், அவருடைய தாய் மனநோயாளி எனவும், சிறுமிக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. சிறுமியைப் பார்வையிட 28வயதுடைய இளைஞர் வைத்தியசாலைக்கு வந்து போவதாகவும், சிறுமிக்கு 18வயதானவுடன் அவரை திருமணம் செய்துகொள்வதாக குறித்த இளைஞன் அறிவித்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், 14வயது சிறுமி குழந்தைப் பெற்றுள்ளதனால் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பயிற்சி பெற்றுவரும் இளம்பெண்கள் விடுதலையானதும் தொழில்வாய்ப்பைப் பெற ஏற்பாடு..!!

வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பயிற்சி பெற்றுவரும் இளம்பெண்கள், அங்கிருந்து விடுதலையானதும் தொழில்வாய்ப்பைப் பெறுவதற்கு வசதியாக ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்ட நடமாடும் சேவையொன்று அங்கு நடைபெற்றது. இதில் கொழும்பு சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள் கலந்து கொண்டிருந்தன. அத்துடன் தொழில் திணைக்களத்தின் அதிகாரிகளும் அங்கு சமூகமளித்திருந்தனர். இந்நிறுவனங்கள் தம்மிடமுள்ள தொழில்வாய்ப்பு அங்கு வழங்கப்படும் வசதிகள் வாய்ப்புகள் என்பன குறித்து இந்த இளம்பெண்களுக்கு விளக்கமளித்தன. அத்துடன் பெண்களுக்குத் தொழில் வழங்கும் நிறுவனங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சட்ட வரையறைகள் குறித்து வேலைவாய்ப்பு பெறவுள்ள பெண்களுக்கு தொழில் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்தனா. பல பெண்கள் ஆடைத்தொழில் வாய்ப்பைப் பெறுவதில் நாட்டமுடையவர்ளாக இருந்த போதிலும் பலர் தமது மாவட்டங்களிலேயே இந்தத் தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என நிறுவனங்களிடமும், தொழில் திணைக்கள அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தனர். தமது பெற்றோரையும் குடும்பத்தினரையும் விட்டு அதிக காலம் தாங்கள் பிரிந்திருப்பதனால், தொடர்ந்தும் அவ்வாறு இருக்க முடியாது என்றும், தமது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் இருந்து தொழில்புரிவதையே தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும் வன்னிப்பிரதேசத்திலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ தங்களால் உடனடியாக ஆடைத்தொழிற்சாலைகளை அமைக்க முடியாது என்றும் காலப்போக்கில்தான் செய்ய முடியும் என்றும் ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதேவேளை, ஆடைத்தொழிற்சாலைகளுக்கு 4000 பணியாளர்கள் உடனடியாகத் தேவைப்படுவதாகவும், இதன் காரணமாகவே இவ்வாறு புனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களை வேலைக்கமர்த்துவதற்காக இநத நிறுவனங்கள் முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகி;ன்றது.

வட பகுதியில் இரண்டு லட்சம் நன்னீர் இறால் குஞ்சுகளை ஐந்து குளங்களில் விடுவதற்கு நடவடிக்கை..!!

வட பகுதியில் இரண்டு லட்சம் நன்னீர் இறால் குஞ்சுகளை ஐந்து குளங்களில் விடுவதற்குக் கடற்தொழில் நீரியல் வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வவுனியாவில் வவுனியாக்குளம், பாவற்குளம், முல்லைத்தீவில் வன்னேறிக்குளம் ஒலுமடுக்குளம், அக்கராயன் குளம் ஆகியவற்றில் இவை விடப்படவுள்ளன. 12 மீன்பிடித்துறை அமைப்புக்களுடன் இது விடயமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாகக்...

“சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை- எந்திரன் மெகா ஹிட்..!!

“சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை… சிறப்பான நடிப்பு, பிரமாதமான ஸ்டன்ட், ஐஸ் அழகு சொக்க வைக்கிறது. இயல்பான காமெடி, மிரள வைக்கும் இரண்டாம் பாகம்… குடும்பத்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்!”எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் ‘முதல் தகவல் அறிக்கை’ இது என்றால் மிகையல்ல.டுபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் டுபாயில் சந்தைத்துறை அதிகாரியாகப் பணியாற்றும் வரும் ஒருவர். படம் பார்த்ததையும், முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் இப்படிக் கூறினார்: “வாய்ப்பே இல்லை சேர். படம் என்றால் இதான். இதுக்கு மேல் ஒரு உயர்தர வர்த்தக படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி – ஷங்கர் இணைந்தது அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது. எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவு மிரட்டல், அசத்தல். சண்டைக் காட்சிகளை வடிவமைத்த ஹொலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள். எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் இல்லை, ஒரிஜினல் இந்திய ஆங்கிலப் படம் என்றுதான் இதனை நான் வர்ணிப்பேன். ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். ரோபோவாக கலக்கி இருக்கிறார். இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. ரஜினி – ஐஸ்வர்யா ஜோடி பிரமாதம். பல காட்சிகளில் பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குனர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்…” என்றார் அவர். அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். முதல் நாள் முதல் காட்சிக்கு பல நாடுகளில் ஒரு டிக்கெட் ரூ 3500 வரை விலை போயுள்ளது. அப்படியும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற மனக்குறைதான் பலருக்கநோர்வேயில் டிக்கெட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் டிக்கெட் கேட்பவர்களைத் தவிர்க்க செல்போன்களை நிறுத்தி வைக்கும் நிலை
ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்தார். ஸ்வீடனில் இந்தப் படம் நான்கு நாட்களுக்கு திரையிடப்படுகிறது. இந்த நாட்டில் இதுவே பெரும் சாதனையாம். இந்த நான்கு நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். சிங்கப்பூரில் 11 திரையரங்கில் எந்திரன் வெளியாகின்றது. முதல் காட்சி இரவு 8 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே தவம் கிடக்கிறார்களாம் ரசிகர்கள்.

கணவனால் வெட்டுண்ட மனைவி உயிரிழப்பு: மஸ்கெலியாவில் சம்பவம்..!!

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்திலுள்ள கவிரவில தோட்டத்தில் இன்று இடம் பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குடும்பப் பெண்ணொருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவரை வெட்டிய இந்தப் பெண்ணின் கணவர் தானும் கழுத்தில் வெட்டிக் கொண்டதால் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :கவிரவில தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர் குடும்பம் ஒன்றின் கணவன் - மனைவிக்கு இடையில் தனிப்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மனைவி இன்று பிற்பகல் 1 மணியளவில் விறகு பொறுக்கிக் கொண்டு வீடு வந்து கொண்டிருந்த போது வழியில் மறைந்திருந்த கணவன் திடிரென பாய்ந்து கத்தியினால் மனைவியின் கழுத்தினை வெட்டியுள்ளார். இதன் போது கழுத்து வெட்டுக்கு இலக்காகிய மனைவி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதன் பின்பு தலைமறைவாகிய கணவன் மதுவருந்தி விட்டு பின்னர் நஞ்சும் அருந்தி கொண்டு தனது கழுத்தையும் வெட்டிக்கொண்டுள்ளார்.இதன் பின்பு உயிரிழந்த பெண் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே வெட்டிக்கொண்டவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்அங்கு அவருக்கு அவசரமான சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்பு மேலதிக சிகிச்சைக்காக தற்போது கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளுக்குத்தாயான 47 வயதுடைய வள்ளி என்ற பெண்மணினாவார்.ஆபத்தான நிலையிலுள்ள இந்தப்பெண்ணின் கணவனின் பெயர் ரட்ணராஜா ( வயது 58 ) என்பவராவார். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மஸகெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய - இலங்கைக் கடற்படையினர் நடுக்கடலில் பேச்சுவார்த்தை..!!

இந்திய - இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாகவே இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது இனி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கடற்படை அதிகாரிகள் உறுதி அளித்தனர். கடலோர பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் இருநாட்டு கடற்படை மற்றும் காவல்படைகள் இணைந்து சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறை தண்டனை..!!

ஏழு வயது சிறுமி ஒருவரை பாலியல் து~;பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் 7 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளார்.ஜாஎல பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்ட்டுள்ளது.

வன்னியிலிருந்து இடம்; பெயர்ந்தோருக்கு 5 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி..!!

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து திருக்கோயில் பிரதேச செயலகப்பிரிவில் வினாயகபுரம்,காயத்திரி கிராமம் ஆகிய இடங்களில் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப ஹரிட்டாஸ் எகெட் நிறுவனம் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகளை இன்று காலை வழங்கியுள்ளது.12 குடும்பங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களையும், 2 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் பெறுமதியான தையல் இயந்தரங்களையும் வழங்கியுள்ளனர்.திருக்கோயில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தன்போது ஹரிட்டாஸ் எகெட் பணிப்பாளர் அருட்பேராசிரியர் ஸ்ரீதரன் சில்வெஸ்டர் பொருட்களை கையளித்தார்.

ஜனாதிபதியின் செயலானது சர்வாதிகாரத்தை தெளிவு படுத்துகின்றது - ஜே.வி.பி..!!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார். இச் செயலானது சர்வதிகாரத்தை தெளிவுப் படுத்துகின்றது என ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.யுத்தத்தை வெற்றி கொண்ட முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் பல குற்றச் செயல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். நாட்டில் ஜனநாயம் மாறி சர்வதிகாரத்தை ஆட்சி தொடர்கிறது. இதனை ஜே.வி.பி எதிர்த்து போராடவும் தயாராக உள்ளது என மேலும் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு..!!

 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  வரவு செலவுத் திட்ட விவாதம் நவம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் ஆரம்பித்து நிறைவடையும் வரையிலும் இந்தியா ஒருபோதும் அழுத்தம் கொடுக்கவில்லை - கோத்தபாய ராஜபக்ஷ..!!

இறுதிக்கட்ட யுத்தம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பிரான்ஸ், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர்கள், ஐ.நா. பிரதிநிதிகள், சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். எனினும், யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் வரையிலும் இந்தியா ஒருபோதும் அழுத்தம்கொடுக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதேசங்களை கைப்பற்றினோம். ஆனால் இறுதிமுடிவு எட்டப்படவில்லை. எனினும் ஜனாதிபதியின் தலைமைத்துவம் மற்றும் குழுவாக இணைந்து செயற்படுதல் மூலமாகவே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது. உலகம் மிகவேகமாக வளர்ந்த அந்த தருணத்தை நாம் தவறவிட்டுவிட்டோம். இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ளவேண்டும் என்றும் அவர் சொன்னார். வங்கித்தொழில் கற்கை நிலையத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் பொருளாதார முகாமைத்துவமும் கற்றுக்கொண்ட யுத்தமும் எனும் தலைப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
2005 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நான் நியமிக்கப்பட்ட போது பலரும் என்னுடன் கலந்துரையாடினர். யுத்தத்தின் மூலம் புலிகளை தோற் கடி ப் ப த ற்கு அரசாங்கங்கள் பல முயற்சித்தன. அவையாவும் தோல்வியடைந்தன. இந்நிலையில் புலிகளை யுத்தத்தின் மூலமாக புலிகளை தோற்கடிக்கமுடியாது. அவர்கள் கேட்பதை கொடுத்து பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணுமாறு அவர்கள் என்னிடம் கோரிநின்றனர்.யுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய இரண்டு முறைமைகள் ஊடாகவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஆட்சியிலிருந்து பல அரசாங்கங்கள் முயற்சித்தன. நாமும் முயற்சிகளை மேற்கொண்டோம். தனியாக அல்ல, இந்தியா மற்றும் நோர்வேயூடாக விடயங்களை விளங்கிக்கொண்டோம். எமது நிலைப்பாட்டில் நாம் இருந்தோம், யுத்தத்தில் ஏனைய அரசாங்கங்கள் ஏன் தோல்வியடைந்தன. அவற்றை திரும்பி பார்க்கமுடியாது. எனினும் நாம் திரும்பிப்பார்த்தோம், வடமாராட்சி படைநடவடிக்கை தொடர்பில் திரும்பி பார்த்தோம். படையினரின் பலத்திற்கு புலிகளால் ஈடுகொடுக்கமுடியாது, நாம் ஒவ்வொரு தடவையும் வெற்றியீட்டு÷வாம். ஆனால் அதனை நிறைவுக்கு கொண்டுவரவில்லை.  படைநடவடிக்கை, சமூகம், அரசியல், பொருளாதாரம், ராஜதந்திரம் மற்றும் சர்வதேச தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. வடமராட்சி நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை, எனக்கு படைநடவடிக்கை தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்டது. தலைவர்களுடன் பலமாக கடமையாற்றினோம். 2005 ஆம் ஆண்டு தலைவரை நாம் இறக்குமதி செய்யவில்லை, எம்மிடத்தில் பலவீனம் இருந்தது. அதனை நாம் கண்டுகொண்டோம். புலிகள், படையினருக்கு கூடுதலான இழப்புகளை ஏற்படுத்தி இடங்களை கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தை மீட்டோம், பின்னர் நாம் கிழக்கை மீட்டெடுத்தவேளை தந்திரோபாய பின்வாங்கல் என்று பிரபாகரன் தெரிவித்தார். எதிர்க்கட்சியும் கூறியது.  வன்னி வனாந்தரம் பயங்கரவாதம் ஆட்கொண்டிருந்தது. எங்களிடத்தில் போதுமான படையினர் இருக்கவில்லை. படையை ஓர் இடத்திலிருந்து எடுக்கமுடியாத நிலைமை. ஜயசிக்குறு நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்தை கைப்பற்றினோம். எனினும் பாதுகாக்கமுடியவில்லை. இவ்வாறான நிலைமைகள் படைப்பலத்தை பாதிக்கும். இதுபெரியதொரு காரணமாகவும் அமையும். படைகளை பலப்படுத்தவேண்டும் என்று கோரினோம். அதற்கான ஒரு பகுதியை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன். சர்வதேசம் அழுத்தம் கொடுத்தது இந்தியாவிற்கும் எமக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வு இருந்தது. இந்தியாவில் சிறுபான்மை ஆட்சியிருந்தாலும் எங்களிடத்தில் புரிந்துணர்வு இருந்தது. பொருளாதார ரீதியில் நாங்கள் பணத்தை நாம் செலவழித்தோம். உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டவேளையிலும் அதற்கும் நாம் முகம்கொடுத்தோம். ஆட்சிபீடம் ஏறியவேளையில் பலமாக அரசாங்கம் இருக்கவில்லை, படைநடவடிக்கையை தொடர்வதற்கு அரசியல் மிக முக்கியமானது. 2005 ஆம் ஆண்டு சிறுபான்மை அரசாங்கமே இருந்தது. பாராளுமன்றத்திலும் பலமிழந்து இருந்தது. மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது ஆதரவு கிடைக்காவிடின் தொடரமுடியாது.  பல அரசாங்கங்கள் படையணிகளை பலப்படுத்த விரும்பவில்லை. படைகளை பலப்படுத்துவதை மிக முக்கியமான விடயமாக கருத்தில் கொண்டோம். முப்படைகளையும் பொலிஸ் மற்றும் சிவில் படைகளை பலப்படுத்தினோம். ஜனாதிபதியினால் மட்டுமே படைகளை பலப்படுத்த முடியும். அதற்கான அதிகாரமும் அவரிடத்திலேயே இருக்கின்றது. கிழக்கில் முப்படைகளை பலப்படுத்தினோம். வன்னியில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை. தெளிவான தூரநோக்கு , குறிக்கோள் இவை முக்கியமான விடயமானதாகும். அதற்கு தலைமைத்துவமும் முக்கியமானதாகும். புரிந்துணர்வு காலத்தில் படைகளின் முக்கியஸ்தர்களும் புலிகளின் முக்கியத்தலைவர்களும் கலந்துரையாடினர். பேச்சுவார்த்தைகளை அரச தலைவர்கள் முன்னெடுக்கவேண்டும். படையினர் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என ஜனாதிபதி கூறினார். படையினரின் ஹெலிகொப்டர்களை புலிகள் கோரியிருந்த வேளையில் அவற்றை நாம் கொடுக்கவில்லை.  கெப்பத்திகொல்லாவையில் கிளேமோர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அங்கு செல்லவேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினர். ஜனாதிபதி சென்றார். மக்களுடன் கலந்துரையாடினார். அதுதான் தலைமைத்துவம். படையினருடன் பயணித்தார், விஜயம் செய்தார். வவுனியாவிற்கு போகுமாறு நான் கோரியபோது கிளிநொச்சிக்குதான் செல்வேன் என்று ஜனாதிபதி சென்றிருந்தார்.  பாதுகாப்பு சபைக்கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் எந்த நேரத்தில் நடைபெற்றாலும் அதில் ஜனாதிபதி கட்டாயமாக பங்கேற்பார். ஒரு கூட்டத்தையேனும் தவறவிடவில்லை. அது தலைமைத்துவதற்கு முக்கியமானது. படைநடவடிக்கைகளை மெதுவான முன்னெடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். முகமாலையில் ஒரே நாளில் 125 க்கு மேற்பட்ட படையினரையும் ஆறு படையணிகளையும் இழந்தோம். அனுராதபுரத்தில் விமானங்களை இழந்தோம். இப்போது சரிதானே என பலரும் வினவினர் ஆனால் தலைமைத்துவம் புதிய விடயங்களை தேடிக்கொண்டிருந்தது. அவர் அஞ்சவில்லை. புலிகளின் விமானங்கள் எமது படைப்பலத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை என்றாலும் அவை உளவியல் ரீதியில் தாக்கத்தை கொடுத்தன. 2005 ஆம் ஆண்டு வான் பாதுகாப்பு முறைமை எங்களிடத்தில் இருக்கவில்லை. எனினும் புலனாய்வு தகவல்களின் பிரகாரம் 1998 ஆம் ஆண்டிலிருந்தே புலிகள் விமானங்களை வைத்திருந்தனர் . புலிகளின் விமான தாக்குதல் எமக்கு முதல் அனுபவமாக இருந்தது. அதற்காக கவலையடையவில்லை. பலநாடுகளில் ஆலோசனை பெற்றோம் மிகவேகமான விமானங்களையும் புதிய ஹெலிகளையும் அறிமுகம்செய்தோம். பயிற்சியில் ஈடுபட்டோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டவேளையில் விமானங்கள் சுட்டு கீழே வீழ்த்தப்படுவதை ஜனாதிபதி பார்த்தார். தலைமைத்துவம் பலமிழந்திருந்தால் கட்டளை அதிகாரிகளும் படையினரும் பலமிழந்திருப்பர். தலைமைத்துவத்தின் பங்களிப்பு முக்கியமானது. அதுவே எங்களை ஊக்குவிக்கசெய்யும். ஊக்குவிப்புகளை விமர்சம் செய்தனர். அவற்றை தவிர்ப்பதற்கு படையினருக்கு அவர்களின் குடும்பங்களுக்கும் நலன்புரி விடங்களை மேற்கொண்டோம்.படையினருக்கு ஆயுதங்கள் சீருடைகளை மட்டுமே வழங்கவில்லை. அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம். குழுவாக வேலைச்செய்தோம். பாதுகாப்பு முன்களத்தில் இருப்பவர்களுக்கு உதவினோம். நான்காவது ஈழபோர் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடுமுழுவதும் வியாபிக்கப்படும் என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார். மக்களும் தலைவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினர். தலைமைத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புலிகள் மேல்மாகாணத்தில் தாக்குல் நடத்தினர். வடக்கு கிழக்கில் படைநடவடிக்கைளை மேற்கொண்ட ஏககாலத்தில் பொருளாதார நிலையங்களையும் பாதுகாத்தோம். கட்டுநாயக்க விமான நிலையம்,துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்ற புலிகளின் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. மேல்மாகாணத்தில் புலிகளின் வலைப்பின்னலை பொலிஸாரே இல்லாதொழித்தனர். 3000 படையினருடன் பயணித்த ஜெட்லைனர் ஆட்காவி கப்பலுக்கு பல கப்பல்கள் பாதுகாப்புக்கு சென்றது. கடற்படைத்தளபதி கண்விழித்து கப்பல் பயணத்தை கண்காணித்து கொண்டிருந்தார். இலங்கைக்குள் ஆயுதங்கள் வருவதை தடுத்தனர். பல்வேறுபட்ட புலனாய்வு பிரிவுகள் மற்றும் முகவர் நிலையங்களிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. குழுவாக கடமையாற்றினோம். படையினரின் நன்னடத்தையில் கவனம் செலுத்தப்பட்டது படைநடவடிக்கை இடம்பெற்றகாலத்தில் மதுஅருந்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. பல சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கடுமையாக சோதனை உட்படுத்தப்பட்டனர். எதனை முன்னெடுத்தாலும் அதனை தொடர்ந்தோம். அதனூடாகவே இறுதிபெறுபேற்றை கண்டோம். இறுதிக்காலக்கட்டத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து வெளிவிகார அமைச்சர்கள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இன்னும் பல சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகள் அழுத்தம் கொடுத்தனர். புரிந்துணர்வு உட்படிக்கைக்கு சென்று இணக்கப்பாட்டை எட்டுமாறு வலியுறுத்தினர். எனினும் தன்னால் நிறுத்தமுடியாது என திட்டவட்டமாக கூறிய ஜனாதிபதி படையினர் பலமடைந்து மீள்குழுவாக செயற்படுவர் என்றும் தெளிவுப்படுத்தினார்.  யுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு எந்த நாட்டிற்கு தடுக்க இயலாது. இந்தியாவிற்கு தடுக்கும் சக்தி இருந்தது. தமிழ்நாட்டின் அழுத்தம் இருந்தது. இந்தியாவை எம்முடனே வைத்துக்கொண்டோம். இருநாடுகளுக்கும் இடையில் பொறிமுறை இருந்தது. இந்தியாவிடம் உரையாடினோம். மூவரை நியமித்தோம், இந்தியாவும் மூவரை நியமித்தது. தினந்தோறும் உரையாடினோம். குறிப்பாக தமிழ்நாட்டில் அழுத்தம் தொடர்பில் கலந்துரையாடி அவற்றிற்கு தீர்வு கண்டோம். தமிழக முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார். அன்று 5.30 மணிக்கு சிவ்சங்கர் மேனனுடன் தொடர்பு கொண்டு உரையாடினேன்.  உணர்வு பூர்வமான விடயம் ஜனாதிபதியுடன் பேசவேண்டும் என்றார். சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தோம். ஐந்து நிமிட உரையாடலின் பின்னர் மறுநாள் காலை சிவ்சங்கர் மேனன் கொழும்பிற்கு வருகைதந்தார். கலந்துரையாடலுக்கு பின்னர் அறிக்கையை வெளியிட்டார். கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டார். பிரச்சினைக்கு இணங்காணுவதற்கான பொறிமுறை முக்கியமானது இந்தியா ஒருபோது அழுத்தம் கொடுக்கவில்லை. புரிந்துணர்வு, வழிமுறைகள், பகுப்பாய்வு,தெளிவான இலக்கு, திட்டம், உண்மையான தலைமைத்துவம், பலமான வேலை, தொடர்தல், ஊக்கம், பங்களிப்பு முக்கியமானது.ஒருபோதும் காத்திருக்கவில்லை. ஒவ்வொரு விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன. சகல தமிழர்களும் பயங்கரவாதிகள் இல்லை, ஆனால் 99 வீதமான பயங்கரவாதிகள் தமிழர்கள். அதிஷ்டவசமாக சில விடயங்களை செய்வேண்டியநிலைமை ஏற்பட்டது. அவற்றை மீளவும் திரும்பிப்பார்த்தோம். வேறு தேவைகளுக்காக வருகின்ற தமிழர்களுடன் புலிகள் பயணித்தனர்,பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கிகொண்டனர். அவற்றை தடுத்தபதற்கு நடவடிக்கை எடுத்தோம். தமிழர்களை வடக்கு கிழக்கிற்கு திருப்பி அனுப்பினோம். அதனால் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம்கொடுத்தோம். அந்த நடவடிக்கையை நிறுத்திகொண்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். பிரச்சினைக்கு முகம்கொடுத்து பார்க்கவேண்டும். அதேபோல அபிவிருத்தியை பிரயோகிக்கவேண்டும். கடந்த 30 வருடங்களில் உயிர்கள், உடமைகள் மட்டுமன்றி பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை எனக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது அதில் பற்றுதியுடன் செயற்படவேண்டும் முதலீடுகளை அதிகரிக்கவேண்டும் .இது நல்ல சந்தர்ப்பம்,நேரம் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டும். உலகம் மிகவேகமான வளர்ந்த அந்த தருணத்தை நாம் தவறவிட்டுவிட்டோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ளவேண்டும் என்று….

கடவுச்சீட்டில் நாளை முதல் மாற்றம் - டபிள்யூ.ஏ.சுலானந்த பெரேரா..!!

கடவுச்சீட்டில் நாளை முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ.ஏ.சுலானந்த பெரேரா தெரிவித்தார்.  அதன்படி A மற்றும் N என்ற தொடrர் இலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டைப் பெற வேண்டும்.  அதற்கு விண்ணப்பிக்கும் வகையில் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படுவதுடன் அதற்கென குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது. நாளை முதல் புதிய விண்ணப்பப் படிவ நடைமுறைக்கு அமுலுக்கு வருகிறது என பெரேரா தெரிவித்தார்.  அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,  "A மற்றும் N தொடர் இலக்கம் கொண்ட கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் இரண்டு புகைப்படங்கள் கடவுச் சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தையுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது. சமாதான நீதவானின் சான்று தேவையில்லை. அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரம் என்பன இணைக்க வேண்டிய அவசியமுமில்லை. முதற் தடவையாக கடவுச் சீட்டு பெறவிரும்பும் ஒருவர், முன்பு போன்று உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின்

சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம்..!!

ஜனநாயகத் தேசியக் கூட்டணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது நீதிமன்றம் 30 மாதகால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அச்சமயம், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் கலந்து கொள்ள சென்றிருந்ததால், அவர் நாடு திரும்பியதும், அவரது தீர்மானத்துகமைவாகவே தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இலங்கைச் சட்டத்தின் அடிப்படையில் ஆறு மாதத்திற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன்படி, சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முல்லைத்தீவு, வவுனியா மக்களுக்கு நஷ்டஈடு..!!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்களுக்கு நஷ்டஈடாக நேற்று 249லட்ச ரூபாவை வழங்கியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி பிரதியமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட யகுடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நேற்றுக்காலை வவுனியாவிலும் பிற்பகல் முல்லைத்தீவிலும் நடைபெற்றன. மேற்படி நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று நஷ்ட ஈட்டுக்கான காசோலைகளை கையளித்துள்ளனர். பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மக்கள் கடந்த 30வருடகால யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.