பயனர்கள்.
ript>
வியாழன், 30 செப்டம்பர், 2010
பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பயிற்சி பெற்றுவரும் இளம்பெண்கள் விடுதலையானதும் தொழில்வாய்ப்பைப் பெற ஏற்பாடு..!!
வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பயிற்சி பெற்றுவரும் இளம்பெண்கள், அங்கிருந்து விடுதலையானதும் தொழில்வாய்ப்பைப் பெறுவதற்கு வசதியாக ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்ட நடமாடும் சேவையொன்று அங்கு நடைபெற்றது. இதில் கொழும்பு சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள் கலந்து கொண்டிருந்தன. அத்துடன் தொழில் திணைக்களத்தின் அதிகாரிகளும் அங்கு சமூகமளித்திருந்தனர். இந்நிறுவனங்கள் தம்மிடமுள்ள தொழில்வாய்ப்பு அங்கு வழங்கப்படும் வசதிகள் வாய்ப்புகள் என்பன குறித்து இந்த இளம்பெண்களுக்கு விளக்கமளித்தன. அத்துடன் பெண்களுக்குத் தொழில் வழங்கும் நிறுவனங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சட்ட வரையறைகள் குறித்து வேலைவாய்ப்பு பெறவுள்ள பெண்களுக்கு தொழில் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்தனா. பல பெண்கள் ஆடைத்தொழில் வாய்ப்பைப் பெறுவதில் நாட்டமுடையவர்ளாக இருந்த போதிலும் பலர் தமது மாவட்டங்களிலேயே இந்தத் தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என நிறுவனங்களிடமும், தொழில் திணைக்கள அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தனர். தமது பெற்றோரையும் குடும்பத்தினரையும் விட்டு அதிக காலம் தாங்கள் பிரிந்திருப்பதனால், தொடர்ந்தும் அவ்வாறு இருக்க முடியாது என்றும், தமது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் இருந்து தொழில்புரிவதையே தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும் வன்னிப்பிரதேசத்திலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ தங்களால் உடனடியாக ஆடைத்தொழிற்சாலைகளை அமைக்க முடியாது என்றும் காலப்போக்கில்தான் செய்ய முடியும் என்றும் ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதேவேளை, ஆடைத்தொழிற்சாலைகளுக்கு 4000 பணியாளர்கள் உடனடியாகத் தேவைப்படுவதாகவும், இதன் காரணமாகவே இவ்வாறு புனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களை வேலைக்கமர்த்துவதற்காக இநத நிறுவனங்கள் முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகி;ன்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக