பயனர்கள்.

ript>

புதன், 13 அக்டோபர், 2010

காமெடி பண்ணும் வித்யா பாலன்..!!

இந்திப் படத்தில் நடிகை வித்யா பாலன் ஏதோ காமெடி ரோல் பண்ணுவதாகத் தப்பாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
தென்னிந்திய அளவில் தன் கவர்ச்சி நடிப்பால் புகழ்பெற்ற சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். மிலன் லுதாரியா இந்தப் படத்தை இயக்க உள்ளார்.  சில்க் வேடத்தில் நடிக்கக் கேட்டு வித்யா பாலனை அணுகினார் தயாரிப்பாளர். 'லோ டாப்ஸ் போட்டு நடிக்கமாட்டேன், ஹீரோவுடன் நெருக்கமாக ஷூட் பண்ணக்கூடாது, அது கூடாது இது கூடாது' என்று எக்கச்சக்கமாய் கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்.  மேடம், சில்க் வாழ்க்கையைச் சொல்ற படத்துல கவர்ச்சியா நடிக்கமாட்டேன்னு சொல்றது காமெடியா இல்லை.

கல்பிட்டியில் டெங்கு நோயாளர் இனங்காணப்படவில்லை - பிரதேச செயலாளர்..!!

கல்பிட்டி பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் இன்று வரை டெங்கு நோயாளர் எவரும் இனம் காணப்படவில்லையென்று கல்பிட்டி பிரதேச செயலாளர் றியால்தீன் தெரிவித்தார்.  கல்பிட்டி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர். பளல்ல தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
மேலும் அவர் கருத்துரைக்கையில், "கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து கிராம அதிகாரி பிரிவுகளிலும், தற்போது டெங்கு குறித்த அறிவுறுத்தல்களும் சிரமதானப் பணிகளும் இடம்பெறுகின்றன. சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் டெங்கு குறித்த அறிவூட்டல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஜூன் மாதத்தில் டெங்கு நோயாளர்கள் என சிலர் இனங்காணப்பட்டபோதும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை இடம் பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களிலும் டெங்கு ஒழிப்பு குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். ___

யாழில் பத்து இலட்சம் மரம் நடும் திட்டம் நிறைவு பெற உள்ளது..!!

 யாழ் மாவட்டத்தில் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் பத்து லட்சம் மரம் நடும் திட்டம் இந்த மாத இறுதியில் இருந்து அரம்பமாகி இரண்டு மாத காலத்தில் நிறைவு பெறவுள்ளது.
இதற்க்கான முன்செயற்பாடுகளை யாழ் மாவட்ட விவசாயத் திணைக்களமும் மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் சிறுகைத் தொழில் அமைச்சும் இனைந்து மேற்கொண்டுள்ளன. யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் தலா 100 வீடுகள் கோயில்கள் பொது இடங்கள் ஆலயங்கள் மயானங்களில் இந்த மரங்கள் நாட்டப்படவுள்ளன. கிராம மட்டத்தில் இந்த திட்டம் கடந்தாண்டுகளைப் போலல்லாது பிரதேச செயலகங்கள் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் நேரடிக் கண்கானிப்பகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் மரம் நடுகை சம்பந்த மான செயல்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் விவசாயத் தினைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அரசின் செயல்களுக்கு மன்னிப்புக் கிடையாது - விஜித்த ஹேரத்..!!

நாட்டில் அரசாங்கம் செய்யும் துரோகச் செயல்களுக்கு பொதுமக்களிடம் இருந்து ஒரு போதும் மன்னிப்பு கிடைக்காது. எனவே அரசாங்கம் ஜனநாயக விரோதமான செயற்பாடுகளை அதிகரிக்கும்போது அதற்கான பின் விளைவுகளை பொது மக்களிடமிருந்து சந்திக்க நேரிடும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். சரத் பொன்சேகாவோ அவரது குடும்பத்தாரோ அல்லது கட்சி உறுப்பினர்களோ ஒரு போதும் அரசாங்கத்திடம் மண்டியிடப் போவதில்லை. ஆனால் அரசாங்கத்தால் தொடர்ந்தும சரத் பொன்சேகாவை சிறையிலடைத்து வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்திய விஜித்த ஹேரத் எம்.பி. கூறுகையில்,. "கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையில் நாட்டில் ஜனநாயகத்திற்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளும் மனித உரிமை மீறல் சம்பவங்களும் மேலோங்கி காணப்பட்டன. யுத்தத்தின் பின்னரும் இந்நிலை மாற்றமடையவில்லை. நாடு தொடர்பாக அல்லது மக்கள் தொடர்பான சிந்தனைகளில் இருந்து விலகி சுயநல போக்குடனேயே அரசு செயற்பட்டது. இதனால் நாட்டில் பாரியளவிலான ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தது.  பொது மக்களுக்கு அரசாங்கம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வார்த்தைகளாகி விட்டன. 2500 ரூபா சம்பள உயர்வு, பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு, நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை 6 மாதத்திற்குள் மீள் குடியமர்த்தல் உட்பட இன்னோரன்ன வாக்குறுதிகளை மறந்தும் மீறியும் அரசாங்கம் செயற்படுகின்றது.  இவ்வாறானதொரு சூழ்நிலையில் சரத் பொன்சேகாவை சிறை வைத்து கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளதுடன் தான் எவ்விதமான தவறும் செய்யாத நிரபராதியைப் போல் அரசாங்கம் செயற்படுகின்றது. அரசாங்கத்தின் தவறுகளைப் பட்டியலிட்டால் மன்னிப்பே வழங்க முடியாது" என்றார்.

யாழ் கிராம அலுவலகர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்க அரசாங்க அதிபர் நடவடிக்கை..!!

 யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம அலுவலகர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வடக்கு கிழக்கு கிராம உத்தியோகத்தர் சங்கம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் இடம் பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராம அலுவலர் சங்கப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலின் போது பின்வரும் கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. கிராம அலுவலகர்களுக்கான வழங்கப்படும் சீருடைகளுக்கான கொடுப்பணவுகளை நேரத்துடன் வழங்க வேண்டும். கிராம அலுவலகர்களுக்கு உரிய அலுவலகப் பையை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும். தற்போது அரசாங்க அதிபரின் பணிப்புரையின் பெயரில் அலுவலகப் பை சம்பந்தமான விபரங்கள் பிரதேச உதவி அரசாங்க அதிபர் பிரிவு மட்டத்தில் யாழ் செயலகத்தினால் சேகரிக்கப்பட்டுள்ளது.  கிராம அலுவலகர்களின் அலுவலகங்களில் இருக்கும் தளபாடங்கள் பொது மக்கள் அலுவலகத்திற்கு சமூகம் கொடுக்கும் வேளைகளில் இருப்பதற்கு புதியனவாக இல்லை. அதனால் மேலும் கதிரைகள் வழங்கப்பட வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
கிராம மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வேலைகளுக்கும் கிராம அலுவலகர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டள்ளது. இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் சில முன்செயற்பாடுகளை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும்.
யாழ் மாவட்டத்தில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அந்த இடங்கள் அரசாங்கத்தினால் நிரப்பப்படும் வரைக்கும் பழைய ஓய்வு பெற்ற கிராம அலுவலகர்கள் மீள் நியமணம் செய்யப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு கிராம அலுவலர் சங்கம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முதல் சம்பளத்தை பாதுகாக்கிறார் பிரியங்கா..!!

தனது முதல் சம்பளத்தை பாதுகாத்து வருவதாக கூறினார் பிரியங்கா சோப்ரா.இதுபற்றி அவர் கூறியதாவது:மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். தமிழில் ‘தமிழன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானேன். நான் முதன் முதலாக சம்பளம் வாங்கியபோது சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தேன். இப்போது கூட அந்த நாள் எனக்கு நினைவில் உள்ளது. மாடலிங் துறையில் இருந்தபோது, ஒரு விளம்பரத்துக்காக 5 ஆயிரம் ரூபாயை சம்பளமாக வாங்கினேன். அதை செலவழிக்கவில்லை. கோயில் உண்டியலிலும் போடவில்லை. அதை அப்படியே அம்மாவிடம் கொடுத்தேன். அந்த நோட்டுகளை இன்னும்கூட பொக்கிஷமாக, அவர் பாதுகாத்து வருகிறார். அதை பார்க்கும் போதெல்லாம் பெருமையாக இருக்கும். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.