பயனர்கள்.

ript>

புதன், 13 அக்டோபர், 2010

யாழ் கிராம அலுவலகர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்க அரசாங்க அதிபர் நடவடிக்கை..!!

 யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம அலுவலகர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வடக்கு கிழக்கு கிராம உத்தியோகத்தர் சங்கம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் இடம் பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராம அலுவலர் சங்கப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலின் போது பின்வரும் கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. கிராம அலுவலகர்களுக்கான வழங்கப்படும் சீருடைகளுக்கான கொடுப்பணவுகளை நேரத்துடன் வழங்க வேண்டும். கிராம அலுவலகர்களுக்கு உரிய அலுவலகப் பையை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும். தற்போது அரசாங்க அதிபரின் பணிப்புரையின் பெயரில் அலுவலகப் பை சம்பந்தமான விபரங்கள் பிரதேச உதவி அரசாங்க அதிபர் பிரிவு மட்டத்தில் யாழ் செயலகத்தினால் சேகரிக்கப்பட்டுள்ளது.  கிராம அலுவலகர்களின் அலுவலகங்களில் இருக்கும் தளபாடங்கள் பொது மக்கள் அலுவலகத்திற்கு சமூகம் கொடுக்கும் வேளைகளில் இருப்பதற்கு புதியனவாக இல்லை. அதனால் மேலும் கதிரைகள் வழங்கப்பட வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
கிராம மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வேலைகளுக்கும் கிராம அலுவலகர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டள்ளது. இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் சில முன்செயற்பாடுகளை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும்.
யாழ் மாவட்டத்தில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அந்த இடங்கள் அரசாங்கத்தினால் நிரப்பப்படும் வரைக்கும் பழைய ஓய்வு பெற்ற கிராம அலுவலகர்கள் மீள் நியமணம் செய்யப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு கிராம அலுவலர் சங்கம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக