அடிக்கடி திரையுலகில் எழுகிற பிரச்சனை சம்பளப் பாக்கி. இந்த முறை அந்தப் பிரச்சனை நடிகை மோனிகாவுக்கு வந்துள்ளது. சஞ்சய்ராம் தயாரித்து இயக்கியுள்ள படம் கவுரவர்கள். இந்தப் படத்தில் சத்யராஜ், விக்னேஷ், மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஷூட்டிங் முடிந்ததும் 2 லட்ச ரூபாய் மோனிகாவுக்குக் கொடுப்பதாகப் பேச்சு. ஆனால் பேசியபடி சம்பளம் பட்டுவாடா ஆகாததால் மோனிகா நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்து படத்தை வெளிவிடாமல் தடுக்கக் கேட்டுக்கொண்டுள்ளார். 20 நாள் கால்ஷீட்டுக்கு 26 நாள் நடிச்சுக் கொடுத்தும் நன்றியில்லையே என தயாரிப்பாளரை ஏகத்துக்கும் திட்டிக் கொண்டிருக்கிறாராம் மோனிகா.
பயனர்கள்.
ript>
வெள்ளி, 15 அக்டோபர், 2010
போரதீவுபற்று பிரதேசசெயலர் பிரிவில் யானை தாக்கியதில் விவசாயி பலி..!!
மட்டக்களப்பு படுவான்கரை போரதீவுபற்று பிரதேச செயலர் பிரிவில் இன்று அதிகாலை 4மணியளவில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலையடிவட்டை முன்மாதிரிச்சோலை 37ம் கொலனியைச் சேர்ந்த பெரியதம்பி என்கிற 35வயதான தம்பிப்பிள்ளை உலகநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார். வயல் வேலைக்கு சென்றிருந்த சமயமே அவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
சினிமா மீது ரஜினிக்கு காதல் குறையவில்லை - தனுஷ்..!!
சினிமா மீது எனது மாமனார் ரஜினிகாந்துக்கு இன்னும் காதல் குறையவில்லை என்று நடிகரும், மருமகனுமான தனுஷ் கூறினார்.
தனுஷ், எந்திரன் படத்தை இரண்டாவது முறையாக பார்த்து மகிழ்ந்தார். படத்தை வி.ஐ.பி காட்சியில் பார்த்த தனுஷ், பின்னர் ரசிகர்களுடன் 2-வது முறையாக பார்த்துள்ளார். பின்னர் அவர் கூறியதாவது: மாமனார் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றனர். அவரது படத்தை ரசிகர்கள் ரசிக்கும் விதம், ரசிகரல்லாதவர்களும் தரும் வரவேற்பு என்னை அதிசயிக்க வைத்தது. இன்றைக்கும் அவர் இந்த அளவு உழைக்கக் காரணம், சினிமா மீதுள்ள அவரது காதல்தான் என்றார்.
தனுஷ், எந்திரன் படத்தை இரண்டாவது முறையாக பார்த்து மகிழ்ந்தார். படத்தை வி.ஐ.பி காட்சியில் பார்த்த தனுஷ், பின்னர் ரசிகர்களுடன் 2-வது முறையாக பார்த்துள்ளார். பின்னர் அவர் கூறியதாவது: மாமனார் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றனர். அவரது படத்தை ரசிகர்கள் ரசிக்கும் விதம், ரசிகரல்லாதவர்களும் தரும் வரவேற்பு என்னை அதிசயிக்க வைத்தது. இன்றைக்கும் அவர் இந்த அளவு உழைக்கக் காரணம், சினிமா மீதுள்ள அவரது காதல்தான் என்றார்.
நுவரெலியா, கொத்மலை, வௌன்டன் தோட்டத்தில் மண்சரிவு அச்சுறுத்தல்..!!
நுவரெலியா, கொத்மலை, வௌன்டன் தோட்டத்தில் மண்சரிவு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள குடும்பங்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி பிரதேச செயலாளர் ஊடாக தோட்ட நிர்வாகத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையிலேயே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. வௌன்டன் தோட்டத்திற்குச் செல்லும் பாதையிலும் அதனை அண்மித்த பிரதேசத்திலும் சுமார் நூறு மீட்டர் தூரத்திற்கு நிலத்தில் திடீரென நேற்று முன்தினம் வெடிப்பு ஏற்பட்டது. இவ்வெடிப்பின் காரணமாக வீதியின் ஒரு பகுதியும் கீழிறங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த வெடிப்பினால் தோன்றியுள்ள மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக அங்கு வாழ்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி குறிப்பிட்டுள்ளார். வௌன்டன் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இக் குடும்பங்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் அடிப்படை வசதிகளின்றி குடிசைகளில் வாழும் மக்களுக்கு வீட்டுவசதி..!!
கொழும்பு நகரில் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி குடிசைகளில் வாழும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய சூழலில் வீட்டுவசதி அளிக்கப்படும். கொழும்பு நகரை தூய்மையான அழகிய நகரமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். கொழும்பிலுள்ள குடிசை வீடுகளை அகற்றுவதில் எதுவித அரசியல் நோக்கமும் கிடையாது என அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்றுத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சுமார் 65ஆயிரம் குடிசை வீடுகளை அகற்ற நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கூறியதாவது, அரசாங்க காணிகளில் சட்டவிரோதமாக குடியிருக்கும் மக்களை அரசாங்கம் வெளியேற்றப்போவதாக எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் முன்னெடுக்கின்றன. சுகாதாரமற்ற பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் வசதிகளுடன் கூடிய பொருத்தமான பகுதிகளில் குடியமர்த்தவே திட்டமிட்டுள்ளோம். அவர்களை எங்கு குடியேற்றுவது என்பது குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபையே தீர்மானிக்கும். இவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது. ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக கொழும்பு நகரம் மேலும் அழகுபடுத்தப்படும். கொழும்பு மாநகர சபையை ஐ.தே.க. நீண்டகாலம் ஆட்சிபுரிந்தபோதும் குடிசை மக்களின் நலனுக்காக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கொழும்பு நகரில் ஐ.தே.கட்சிக்குள்ள பலத்தை குறைக்க மக்கள் அகற்றப்பட இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ஐ.தே.க.வுக்கு எதுவித அதிகாரமும் இன்று இல்லை என்று தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வவுனியா, மற்றும் மன்னார் மாவட்டங்களில் நவம்பர் மாதம் இறுதிவரை வாக்காளர் பதிவு..!!
வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மற்றும் மன்னார் மாவட்டங்களில் நவம்பர் மாதம் இறுதிவரை வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளன. மீள்குடியமர்த்தப்படும் பணிகள் அதிகளவில் நடைபெறும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்ளுக்கென உதவி தேர்தல் ஆணையாளர் ஒருவர் தேர்தல் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்காளர் பதிவுகளை மேலும் இலகுவாக்கும் நோக்குடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி கச்சேரியில் தற்காலிக தேர்தல் அலுவலகமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. 2001 ஆம் ஆண்டுக்கு வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை வடமாகாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஜூன் 01ஆம் திகதி ஆரம்பமானது. யுத்தம் முடிவடைந்த பின்னர் வடமாகாணத்தில் அனைத்து பிரதேசங்களிலும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை பதியும் பணிகள் இம்முறையே முதன் முதலாக நடைபெறுகிறது. பதிவு செய்யும் நடவடிக்கைகள் பெருமளவில் முடிவு பெற்றுள்ள போதிலும் பெருந்தொகையான இடம்பெயர்ந்தவர்களையும், முகாம்களில் தங்கியிருப்பவர்களையும் கொண்டுள்ள வடமாகாணத்திற்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குவைத் டாப் 10ல் எந்திரன் முதலிடம்..!!
குவைத் பாக்ஸ் ஆஃபிஸில் முதன் முறையாக இந்திய சினிமா(எந்திரன்) ஒன்று முதலிடம் பிடித்துள்ளது. நம்ம சூப்பர் ஸ்டார் நடித்த 'எந்திரன்' படம் குவைத்திலும் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த சந்தோஷமான விஷயத்தை நமது இணைய வாசகர்(குவைத்) ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கான இணைய முகவரியை அவர் வெளியிட்டுள்ளார். இதில் எந்திரனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது, பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான டேக்ர்ஸ், ரேஸிடண்ட் ஈவில், அடுத்தடுத்த இடங்கள் கிடைத்துள்ளது.
இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா சந்திப்பு..!!
இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவூடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நேற்று நடத்தியுள்ளார். இப்பேச்சுவார்த்தைகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் - மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோரும் இரு நாடுகளின் தூதுவர்களும் கலந்துகொண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பூராகவும் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மத ஸ்தாபனங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை..!!
இலங்கை பூராகவும் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மத ஸ்தாபனங்களை அபிவிருத்தி செய்து ஆன்மீக வளர்ச்சிக்கான செயற்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் நேற்று அம்பாறை மாவட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள விஹாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோயில்களுக்கு பிரதமர் டீ. எம். ஜயரத்னவுடனான குழுவினர் நேரடியாகச் சென்று அவற்றின் அபிவிருத்தி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான செயற்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தனர். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் அஷ்ஷேக் வை. எல். எம். நவவி தலைமையில் இடம்பெற்ற வைபவம் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமர் டீ.எம். ஜயரத்ன கலந்து கொண்டிருந்தார். அமைச்சர் பீ. தயாரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வர், பிரதி அமைச்சர் எம்.கே டீ.எஸ். குணவர்த்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல் திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் பிரதமரும், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான டீ. எம். ஜயரத்னவினால் வழங்கப்பட்டன. அக்கரைப்பற்று நகர ஜும்ஆப் பள்ளிவாசல், சம்பாந்துறை மஸ்ஜிதுன் நூறாணியா பள்ளிவாசல் வாங்காமம ஜும்ஆப் பள்ளிவாசல் போன்றவற்றுக்கு இந்நிதியுதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் டீ. எம். ஜயரத்ன குறிப்பிடுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் தற்போது நிரந்தரமானதோர் சமாதானச் சூழல் நிலவுகின்றது. இந்த சூழ்நிலையில் மதஸ்தாபனங்கள் கௌரவத்துடன் மதிக்கப்படுகின்றன. இம்மத ஸ்தாபனங்கள் தற்போது துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மதஸ்தாபனங்கள் மிக விரைவில் விருத்தி செய்யப்படவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பிரிவினரின் சீருடைத் துணி கொள்வனவு செய்வதற்கு குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானம்..!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்புப் பிரிவினரின் சீருடைத் துணி கொள்வனவூ செய்வதற்கு குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி முப்படை பொலிஸ் உட்பட பாதுகாப்புப் பிரிவினருக்கான சீருடைகளைத் தயாரிப்பதற்கு உள்ளுர் உற்பத்தியாளர்களிடம் போட்டி அடிப்படையில் துணி வகைகள் கொள்வனவூ செய்யப்படவூள்ளன. பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழுள்ள குறிப்பிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு இந்தக்குழு நியமிக்கப்படவூள்ளது. தெதுறு ஒயா திட்டத்தால் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு ஏற்ப தெதுறு ஒயா திட்டத்தால் இடம்பெயர்ந்த 900 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் கனேவத்த பிரதேச செயலகப் பிரிவில் பீட்டர் வெலி தோட்டத்தில் மீள்குடியமர்த்தப்படவூள்ளனர். குடும்பம் ஒன்றுக்கு வாழ்க்கைச் செலவாக மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதம் 6 மாத காலத்துக்கு வழங்கப்படும். ஆரம்பக்கட்ட கொடுப்பனவூ 8000 ரூபாவாகும். மின்சாரம் உள்ளக வீதி வசதி செய்து கொடுக்கப்படும். 2011 இல் திட்டம் பூர்த்தி செய்யப்படும்.
காத்தான்குடி வாவியில் முதலைகள் கிடக்கும் பகுதியினை அடையாளப்படுத்த நடவடிக்கை..!!
மட்டக்களப்பு, காத்தான்குடி வாவியில் முதலைகள் கிடக்கும் பகுதியினை அடையாளப்படுத்தி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லாதவாறு விளம்பர பலகைள் இடுவதற்கு தீர்மானித்துள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்துள்ளார். காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் முஸம்பில் தெரிவித்துள்ளார். இவ்வாவியின் ஒரங்களில் மின்குமிள்கள்களை இடுவதென்றும் முதளைகளினால் மீனவர்களுக்கும் அதை அண்டி வாழும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக வன பரிபாலன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையினை எடுப்பதெனவும் இக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் அகமதுலெவ்வை, மற்றும் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜாபீர், அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட பதில் இணைப்பாளர் கசீர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் இஸ்மாயில் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் பொலிஸார் விஷேட அதிரடிப்படையினர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)