பயனர்கள்.
ript>
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவை அவரின் மனைவி..!!
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை அவரின் மனைவி அனோமா பொன்சேகா நேற்றுமுன்தினம் பிற்பகல் பார்வையிட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு வெலிக்கடைச் சிறைக்கு பொன்சேகா மாற்றப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் வியாழக்கிழமை இரவு 10.30மணியளவில் பொன்சேகா வெலிக்கடைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். அச்சமயம் திருமதி பொன்சேகாவும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் ஆதரவாளர்களும் சிறைச்சாலைக்கு வெளியே நின்றிருந்தனர். பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நாட்டு மக்களும் இராணுவமும் ஏற்றுக்கொள்ளக்கூடாதென தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் தனது கணவர் குற்றமற்றவர் என்பது தனக்குத் தெரியும் என்றும் அனோமா பொன்சேகா கூறியிருந்தார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவில் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு..!!
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசசார்பற்ற நிறுவனங்கள் பணிபுரிவதற்கு பாதுகாப்பு அமைச்சு விதித்திருந்த கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தியுள்ளதாக யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் வி.கேசவன் தெரிவித்துள்ளார். வன்னி மக்களுக்கு நிறையத் தேவைகள் இருக்கின்றன. அவர்கள் யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுடைய தேவைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் பணிபுரிவதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் இந்த மக்களின் தேவைகளை ஓரளவேனும் பூர்த்தி செய்யமுடியும். இங்கு பணியாற்றும் நிறுவனங்கள் அரசின் திட்டங்கள் எண்ணங்களுக்கு அமைவாகவே செயற்படவேண்டும். மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது. அதனைக் கருத்திற்கொண்டு அந்த நிறுவனங்கள் அந்தப் பகுதிகளில் செயலாற்ற முன்வரவேண்டும். வன்னிப் பிரதேசத்துக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் ஏ9 வீதியால் சென்றுவர பாதுகாப்பு அமைச்சிடம் ஒவ்வொரு தடவையும் அனுமதியைப் பெறவேண்டும். ஆனால் தற்போது அந்த அனுமதி மூன்று மாதகாலத்துக்கு வழங்கப்படுகின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதுகில் ஆட்டோகிராப் போட மறுத்ததால் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை முயற்சி - ரன்பீர் கபூர்..!!
தனது முதுகில் ஆட்டோகிராப் போட ரன்பீர் கபூர் மறுத்ததால் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்வதாக மிரட்டிய பெண் ரசிகையால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர், நடிகைகளுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுப்பது, ஆட்டோகிராப் வாங்குவது என்பது காலங்காலமாக நடந்து வரும் விஷயம். சில அதீத ஆர்வமுள்ள ரசிகர்கள் நடிகர், நடிகைகளுக்காக எதையும் செய்ய துணிவார்கள். அப்படிதான் நடிந்திருக்கிறது டெல்லியில் ஒரு சம்பவம். நடிகர் ரன்பீர் கபூர் புதுடெல்லியில உள்ள ஷாப்பிங் மால் ஒன்றின் விழாவுக்காக சமீபத்தில் சென்றிருந்தார். அப்போது ஒரு ரசிகை, தனது முதுகில் ஆட்டோகிராப் போடுமாறு ரன்பீரை வற்புறுத்தினார்.
அவரது பாதுகாவலர்கள் அந்த பெண் ரசிகையை தடுத்தனர். இதையடுத்து போட்டோ எடுக்க அனுமதி கேட்டார். அதற்கும் பாதுகாவலர்கள் மறுத்தனர். இதனால் கடுப்பான அந்த ரசிகை, ஷாப்பிங் மாலின் முதல் மாடிக்கு சென்று கீழே விழுந்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஷாக் ஆனார் ரன்பீர். இதையடுத்து தனது பாதுகாவலர் ஒருவரை அனுப்பி, அவரை கீழே இறங்கி வர சொன்னார். வந்ததும் அவரிடம் சிறுது நேரம் பேசிவிட்டு தனது காருக்கு சென்றார் ரன்பீர். அவரை பின் தொடர்ந்த அந்த ரசிகை தன்னையும் காரில் ஏற்றிக்கொள்ளும்படி கூற அங்கு கூட்டம் கூடிவிட்டது. ரன்பீரின் பாதுகாவலர்கள் அவரை பிடித்து தள்ளிவிட்டு ரன்பீரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தனது பாதுகாவலர்களாக மேலும் சிலரை நியமிக்க முடிவு செய்துள்ளாராம் ரன்பீர்.
அக்குறணை மோட்டார் சைக்கிள் விபத்து, ஒருவர் பலி, ஒருவர் காயம்..!!
கண்டி அக்குறணை 6ம்கட்டையில் நேற்றுக்காலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்; மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றுக்காலை 8மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதின. இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிளொன்றில் பயணம் செய்தவர் அருகில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றின் கீழ் தூக்கி வீசப்பட்டார். இதனால், பஸ்ஸின் கீழ் அகப்பட்டவர் அந்த இடத்திலேயே மரணமானாரென நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றவர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரும், காயமடைந்தவரும் அக்குறணை மத்திய கல்லூரி மாணவர்களென பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரியில் க.பொ த. (உ,த) வகுப்பு மாணவனான மொஹமட் சஹ்ரான் என்பவரே உயிரிழந்தவராவார். இவர் அக்குறணை தெல்கஸ்தென்னயை வசிப்பிடமாகக் கொண்டவராவர்.
மன்னார் காக்கையன்குளம் பிரதேசத்தில் மீள்குடியேற்றம்..!!
மன்னார் மாவட்டத்திலிருந்து 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் காக்கையன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 51 குடும்பங்கள் நேற்று முன்தினம் அங்கு மீள்குடியேறியுள்ளன. இவ்வாறு மீள்குடியேறிய மக்களின் தேவைகள் குறித்து கண்டறியவென வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில் வர்த்தக அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹ_னைஸ் பாறூக் ஆகியோர் அங்கு விஜயம் செய்தனர். மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இரணை இலுப்பங்குளம் அரசினர் தமிழ் பாடசாலைக்குச் சென்ற அமைச்சர் தலைமையிலான குழுவினர், அங்கு தங்கியிருந்த இலுப்பைக்குளம், செட்டிக்குளம், மண்கிட்டி, பூசாரியார்குளம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினர். அங்கு அம்மக்களின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் பற்றிக் கேட்டறிந்த அமைச்சர் அவை குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். தற்போது இரணைஇலுப்பங்குளம் பாடசாலையில் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த 359 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார். இந்தப் பாடசாலையில் தற்போது 91 மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் தெரிவித்த அதிபர், கற்றலுக்குத் தேவையான உபகரணங்கள் இன்றி மாணவர்கள் சிரமப்படுவதாக அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதன்பின்னர் காக்கையன்குளம் மதீனா நகருக்குச் சென்ற அமைச்சருடனான குழுவினர் அங்கு மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர். தற்போது விவசாய செயற்பாடுகளுக்காக அங்குள்ள ஐந்து குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பிரதேச செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். காக்கையன்குளம், துவரங்குளம், வெளிக்குளம், சின்னரசங்குளம், உவர்க்குளம் போன்ற குளங்களே இவ்வாறு புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. இம்மக்களின் சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு மேட்டு நில மிளகாய் பயிர்ச்செய்கைக்கான தண்ணீர் இயந்திரம், விதைகள் மற்றும் பசளைகளை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கும் பணிகளைத் துரிதமாகத் தமது அமைச்சின் ஊடாக ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் இதன் போது கூறினார். பாலம்பிட்டி, பெரியமடு, தட்சனாமருதமடு, பாலபெருமாள்கட்டு, பாலையடி புதுக்குளம் கிராமங்களிலேயே இந்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நயினாதீவிற்குச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து, 15பேர் காயம்..!!
தென் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நயினாதீவிற்குச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியும் புங்குடுதீவு போக்குவரத்து பஸ் வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 15பேர் காயமுற்றுள்ளனர். வேலணை மணியகாரர் வீட்டடியில் நேற்றுக்காலை 10மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
யாழ். கிளிநொச்சி பாரிய நீர்விநியோகத் திட்டம்..!!
யாழ். கிளிநொச்சி பாரிய நீர்விநியோகத் திட்டம் (இரணைமடுத் திட்டம்) 02ஆயிரம் கோடிரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 2002ல் ஆசிய அபிவிருத்தி வங்கி, தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை மற்றும் யாழ். கிளிநொச்சி அரசஅதிபர் பிரிவுக்குட்பட்ட 55கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரதிபலிப்பாகவே இத்திட்டம் முழுமைபெற்று ஆரம்பிக்கப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். யாழ். கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்தின் அபிவிருத்தி எனும் தலைப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பின் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட முயற்சியை அடுத்து 2000கோடி ரூபா நிதி யாழ். கிளிநொச்சி நீர்விநியோகத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியானது வடக்கு பிர தேசத்தின் குடிநீர் பற்றாக்குறையான அனைத்து பிரதேச மக்களின் தேவைக்கும் பயன் படுத்தப்படவுள்ளது. அரசின் தேசிய கொள்கை பிரகாரம் 2015ல் 85 வீதமான மக்களுக்கு பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்கவேண்டும். 2025ல் 100 வீதமான குடிதண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது பிரதேசசபை நீர்வழங்கல் வடிகால் சபைமூலம் யாழ்ப்பாணத்திற்கு 3.2 வீத நீரும் கிளிநொச்சிக்கு 1.1வீத நீரும் மன்னாருக்கு 20.3வீத நீரும் வவுனியாவுக்கு 4.5வீத நீரும் வழங்கப்படுகிறது. தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியானது, பாரிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நீர் விநியோகத்திற்காக பெரும் நிதியை செலவு செய்கின்றது. இதில் கிளிநொச்சி யாழ். நீர் விநியோகத் திட்டத்தின்கீழ் (இரணைமடு) ஒரு நாளைக்கு 27 ஆயிரத்து 500 மீற்றர் கீயுப் குடி தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 88 ஆயிரத்து 500 மீற்றர் கீயுப் குடிதண்ணீர் ஒருநாளைக்கு யாழ். கிளிநொச்சி நீர் விநியோகத்திற்கு முழுமையாக தேவையாக உள்ளது. மிகுதியான 61 ஆயிரம் மீற்றர் கீயுப் குடிதண்ணீரை நிலத்தடி நீரை பாதுகாத்து வழங்க உத்தேசித்துள்ளோம். இதற்காக குறைந்தது 40 வருடங்கள் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை போராட வேண்டியுள்ளது. இதேவேளை, இரணைமடுத் நீர்த் திட்டத்தை 2 அடி உயரம் உயர்த்தி தேவையான நீரை தேக்கி, வான்பாயும் வாய்க் கால் தொகுதி, பாரிய கடவை பாலம், திருவையாறு லிப்ற் விவசாய நீர்ப்பாசன திட்டம் என்பவற்றை விரைவில் புனரமைத்து கொடுக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாரு பக்கம் போறது? தமன்னாவும் தயக்கமும்..!!
உடுக்கையிடை அழகின்னு சொல்லும் போதெல்லாம் சந்தோஷப்பட்ட தமன்னாவுக்கு இப்போ ரெண்டு பக்கமும் அடி விழுது. யாரு பக்கம் போறது? யாரு பக்கம் நோகறதுன்னு தெரியாம முழிக்குதாம் பொண்ணு. வேட்டை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னாவையும் புக் பண்ணியிருக்கிறார் லிங்குசாமி. இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த சிம்பு, எனக்கு ஜோடியா தமன்னாவைதான் போடணும் என்று வற்புறுத்தி வந்தது ஊரறிந்த சங்கதி. கடைசியில் படமே சிம்புவை கைகழுவி விட்டுவிட்டது. அரண்மனை ராஜாவுக்கு அகப்பட்டதெல்லாம் வாள் என்பது மாதிரி சமீபகாலமாக வாய் பேசாமல் இருந்த சிம்பு இந்த பிரச்சனையில் கொஞ்சம் ஆத்திரப்பட்டே அறிக்கைகள் விட்டார். இப்போது லிங்குசாமிக்கு போட்டியாக வேட்டை மன்னன் என்று தனது புதுப்படத்திற்கு தலைப்பும் வைத்துவிட்டார். இதுவரைக்கும் ஒ.கே. இப்போது இந்த படத்தில் நடிக்க தமன்னாவை அணுகியிருக்கிறாராம்.
வேட்டை முதலில் வருமா? வேட்டை மன்னன் முதலில் வருமா? என்பது தெரியாத நிலையில் தமன்னா சிம்புவுக்கு கால்ஷீட் கொடுக்க தயங்குகிறாராம். ஆனாலும் வந்தே ஆகணும். சம்பளம் எவ்வளவு வேணும்னாலும் ஒ.கே என்று வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறாராம் சிம்பு.
வேட்டை முதலில் வருமா? வேட்டை மன்னன் முதலில் வருமா? என்பது தெரியாத நிலையில் தமன்னா சிம்புவுக்கு கால்ஷீட் கொடுக்க தயங்குகிறாராம். ஆனாலும் வந்தே ஆகணும். சம்பளம் எவ்வளவு வேணும்னாலும் ஒ.கே என்று வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறாராம் சிம்பு.
சரத் பொன்சேகாவிற்கு பதிலாக சிறைத் தண்டனை அனுபவிக்கத் தயார் – சோபித தேரர்..!!
ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு பதிலாக சிறைத் தண்டனை அனுபவிக்கத் தயார் என கோட்டே நாக விஹாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நூறு பௌத்த பிக்குகளுடன் சிறைக்குச் செல்லத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்கால இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம் இதுவென அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளவாட கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 30 மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை ஐக்கிய படுத்திய இராணுவத் தளபதியை விடுவிப்பதற்காக எந்தவொரு எல்லைக்கும் செல்லத் தயங்கப் போவதில்லை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நூறு பௌத்த பிக்குகளுடன் சிறைக்குச் செல்லத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்கால இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம் இதுவென அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளவாட கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 30 மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை ஐக்கிய படுத்திய இராணுவத் தளபதியை விடுவிப்பதற்காக எந்தவொரு எல்லைக்கும் செல்லத் தயங்கப் போவதில்லை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கல்முனை சாய்தமருதுவில் இளம் பெண் தற்கொலை..!!
கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் 22 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கரைவாகு மேட்டுவெட்டை சுனாமி வீடமைப்பு திட்டத்திலேயே இச்சடலம் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவர் 22 வயதுடைய பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருமணமான இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிகின்றார். சடலம் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிசார் மேலதக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இறந்தவர் 22 வயதுடைய பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருமணமான இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிகின்றார். சடலம் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிசார் மேலதக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் ஆரம்பம்..!!
கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் இன்று கோலாகலமாக தொடங்குகின்றன. இரவு 7மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. எதிர்வரும் 14ம் திகதிவரை நடைபெறும். இன்று தொடக்கவிழா நிகழ்ச்சி மட்டும் நடைபெறும். போட்டிகள் எதுவும் இல்லை. திங்கள்முதல் போட்டிகள் தொடங்குகிறது. 12நாட்கள் நடைபெறும் இந்த காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழாவில் 71 நாடுகள் கலந்துகொள்கின்றன. 6700 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் இணைந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்கின்றனர்.
இலங்கைக்கு செல்லும் ஜேர்மனியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப் பாட்டினை மேலும் தளர்த்த உள்ளது..!!
இலங்கைக்கு செல்லும் ஜேர்மனியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப் பாட்டினை மேலும் தளர்த்த உள்ளதாக ஜேமன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் தற்பொழுது நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜேமன் தூதுவர் ஜென்ஸ் புலோட்னர் தெரிவித்துள்ளார். இந்த தளர்வு இம்மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை வடகிழக்கு மாகாணங்களில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கை அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ஜேர்மனிய அரசங்கம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ___
இலங்கையில் தற்பொழுது நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜேமன் தூதுவர் ஜென்ஸ் புலோட்னர் தெரிவித்துள்ளார். இந்த தளர்வு இம்மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை வடகிழக்கு மாகாணங்களில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கை அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ஜேர்மனிய அரசங்கம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ___
மட்டக்களப்பு நகரில் பழுதடைந்த, அழுகிய முட்டைகள் விற்பனை..!!
மட்டக்களப்பு நகரில் பழுதடைந்த, அழுகிய முட்டைகளை விற்பனை செய்த பிரபல வர்த்தக நிலையத்தின் மீது வழக்கு தொடரவுள்ளதாக பொது சுகாதார பகுதினர் தெரிவித்துள்ளனர்.இன்று காலை மட்டக்களப்பிலுள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் (கார்கில் புட்ஸ் சிற்றி) கொள்வனவு செய்யப்பட்ட முட்டைகளுக்குள்ளிருந்து புழுக்கள் வெளிவந்ததையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொதுச்சுகாதார பரிசோதகர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 230 முட்டைகளை சீல் வைத்து விற்பனைக்கு தடை செய்ததுடன் குறித்த வர்த்தக நிலையத்தின் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)