பயனர்கள்.
ript>
திங்கள், 11 அக்டோபர், 2010
இந்திய இலங்கைக் கடற்படைகள் திருமலையில் கூட்டுப் பயிற்சி..!!
இந்திய இலங்கைக் கடற்படைகள் திருமலையில் நேற்று கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளன. இந்தியக் கடற்படையின் திர், ஷர்துல் கப்பல்களிலும் வருண என்ற கடலோரக் காவல்படைக் கப்பலிலும் உள்ள 135 இந்தியக் கடற்படை பயிற்சி அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் நேற்றுக்காலை ஆரம்பமாகின. அதேவேளை, இலங்கைக் கடற்படையின் திருகோணமலை கடல்சார் பயிற்சி அக்கடமியில் பயிற்சி பெற்றுவரும் 128 அதிகாரிகளுக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் கடற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தியக் கடற்படையின் பயிற்சிநிலை அதிகாரிகளுக்கு நேற்று திருமலை கடல்சார் பயிற்சி அக்கடமியில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. திருமலைத் துறைமுகத்தில் இலங்கைக் கடற்படைப் பயற்சி அதிகாரிகளுக்குப் பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ள இந்தியக் கடற்படைக் கப்பல்கள் மூன்றும் நேற்று கொழும்புத் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டன. நாளை 12ம் திகதி இந்தக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும். திருமலையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணத்தின்போது இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் நடைமுறை கடல் பயிற்சிகள் வழங்கப்படும். எதிர்வரும் 15ம் திகதிவரை இந்திய இலங்கைக் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சிகள் தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சண்டே லீடர் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் ப்டெ ரிக்கா ஜான்ஸை கொலை செய்ய திட்டம்..!!
பாதுகாப்பு அமைச்சின்கீழ் இயங்கிவரும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சண்டே லீடர் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் ப்டெ ரிக்கா ஜான்ஸை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையை மாற்றும் முகமாகவே இந்நடவடிக் கைக்கு திட்டமிடப்பட்டதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. சிறிலங்கா கார்டியன் செய்திச் சேவையை மேற்கோள்காட்டியுள்ள சண்டே லீடர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் ஆள்கள்மீது பழி போடுவதற்கு இது தகுந்த தருணம் என்ற அடிப்படையில் இந்தத்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குறிப்பட்டுள்ளது. வெள்ளைக் கொடியேந்திய வண்ணம் சரணடைய வந்த புலிகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார் என சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சரத்பொன்சேகாவுக்கு எதிரான விசாரணை நடைபெற்று வருவது தெரிந்ததே. ப்டெரிக்கா ஜான்ஸ் கடந்தவாரம் நீதிமன்றதில் சாட்சியம் அளித்தபோது சரத்பொன்சேகாவை தாம் பேட்டி கண்டபோது எடுத்துக்கொண்ட குறிப்புகள் கொண்ட குறிப்புப் புத்தக்தை இரகசியப் பொலிஸார் கேட்டதன் பேரில் தாம் வழங்கியதாகவும் அதனை அவர்கள் பழுதாக்கிய நிலையில் திருப்பிக் கையளித்தனர் நான் குறிப்புப் புத்தகத்தை முழுயாகவே அவர்களிடம் கொடுத்தேன் நான் பேட்டிகளை நடத்தும்போது ஒலிநாடாவையே பயன்படுத்துவது உண்டு. ஆனால் இம்முறை குறிப்புப் புத்தகங்களை பயன்படுத்தினேன் என்று உறுதிஅளித்திருந்தார்.
யாழ். குடாநாட்டில் முன்னர் வசித்த சிங்களக் குடும்பங்கள், அங்கு மீளக்குடியேற அரசாங்கம் சகல உதவி, ஒத்தாசைகளையும் வழங்க வேண்டும்-திஸ்ஸ அத்தநாயக்க..!!
யாழ். குடாநாட்டில் முன்னர் வசித்த சிங்களக் குடும்பங்கள், அங்கு மீளக்குடியேற அரசாங்கம் சகல உதவி, ஒத்தாசைகளையும் வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பது அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்த சிங்கள முஸ்லிம் மக்கள் தமது காணிகள், சொத்துக்களை கைவிட்டு தென்பகுதிக்கு வந்தனர். 28 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வடக்கில் தமது சொந்தக் காணிகளில் குடியேறவென யாழ்ப்பாணம் சென்ற 150 குடும்பங்களைச் சேர்ந்த 300பேர் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. தமது சொத்துகள், காணிகளின் உரிமையை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களுடன் சென்றுள்ள இவர்களுக்கு, அரச அதிகாரிகளிடமிருந்தோ அரச தரப்பிடமிருந்தோ எதுவித உதவியும் கிடைக்காமல் அவர்கள் அகதிகளைப் போல் யாழ். ரயில்நிலையத்தில் தங்கியுள்ளனர். மூன்று தசாப்தகாலமாக இனங்களுக்கிடையே காணப்பட்ட குரோதத்தைக் குறைத்து புரிந்துணர்வை ஏற்படுத்தி இணைந்து வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவது அரசின் பொறுப்பாகும். எனவே, தமது தேவைகளைப் பூர்த்தி செய்து இவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் குறித்து மீள்குடியமர்வு அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், வடக்கிலிருந்து ஏற்கனவே இடம்பெயர்ந்த சிங்கள மக்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அங்கு மீளக்குடியமர்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீள்குடிய மர்வு அமைச்சு அல்லது வடமாகாண ஆளுநரிடம் தகுந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். அவற்றை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்கள் வடக்கில் மீளக்குடியேற பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும். மன்னார் மாவட்டத்தில் ஏற்கனவே இடம்பெயர்ந்திருந்த 80 சிங்களக் குடும்பங்கள் தகுந்த ஆதாரங்களுடன் மீண்டும் தற்போது அங்கு மீளக்குடியேறியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
விளம்பர படத்தில் 6 மணி நேரம் நடிக்க ஸ்ரேயாவுக்கு ரூ.30 லட்சம்..!
நமீதா மற்றும் புதுமுக நடிகைகள் பலர் விளம்பரங்களில் வருகிறார்கள். இதற்காக லட்சம் லட்சமாய் சம்பளம் வாங்குகின்றனர். நயன்தாரா விளம்பர படங்களில் நடிப்பதில்லை என்பதை கொள்கை முடிவாக வைத்திருந்தார். ஆனால் சமீபத்தில் அதை கை கழுவி ஜவுளி கடை விளம்பர படமொன்றில் நடித்தார். இதற்காக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியதாக பேசுகின்றனர். தற்போது ஸ்ரேயாவும் விளம்பர படத்தில் நடிக் கிறார். 6 விளம்பர படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பொருட்களை விளம்பர படுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் நிர்ண யித்துள்ளார். ஐதராபாத்தில் பிரபல ஜவுளிக்கடை யொன்றை திறந்து வைத்தார். ஒரு மணி நேரம் கடையிலேயே செலவிட்டார். அங்கிருந்து புறப்பட்டதும் ரூ. 5 லட் சத்தை கொடுத்தனர். இந்த மாதம் ஆறு ஜவுளி கடைகளை இதே சம்பளத்தில் திறக்க சம்மதித்துள்ளார்.
தாய்லாந்தில் தேடுதல் நடவடிக்கைஇ 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது..!!
தாய்லாந்தில் தாய்லாந்து பொலீசாரும்இ கனேடியன் இன்ரர்போலும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யபட்டவர்களிள் 60 ஆண்கள் 50 பெண்கள் 7 கர்ப்பணித்தாய்மார்கள் 13 குழந்தைகளும் உள்ளனர் இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும் கப்பலில் கனடாவிற்கு செல்வற்காக வந்திருந்த அகதிகளும் கைதுசெய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக்கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுள் உள்ளடங்கியுள்ளனர். இன்றுகாலை 06.30அளவில் தாய்லாந்தின் ஒன்சபோன்இ சபான்மைஇ பொம்சிங் மற்றும் சபான்மை பிக்சி சுற்றுவட்டாரப் பிரதேசங்களை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள்இ தாய்லாந்து இராணுவத்தினர் மற்றும் கனேடிய இன்ரர்போல் பொலீசார் இவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையினை கனேடியன் இன்ரர்போலும்இ தாய்லாந்து இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்திலிருந்து கப்பலில் கனடாவுக்கு இலங்கையர்களை அனுப்பிவரும் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்இ இவர்களை அனுப்பிவைக்கும் பிரதான முகவர்கள் உதவி முகவர்கள் சந்தேகநபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தரப்பில் பேசப்படுகின்றது. அத்துடன் இன்றுகாலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டவேளை தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிவிட்டு 15 இலங்கையர்கள் தப்பியோடி விட்டதாகவும்இ இதனைத் தொடர்ந்து தாய்லாந்து இராணுவமும்இ கனேடியன் இன்ரர்போலும் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மற்றும் கைது என்பவற்றின் பின்னணியின் இலங்கை தூதரகமும்இ கனேடியன் இன்டர்போலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாக பதிவு செய்துகொண்டுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர். அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் அத்துடன் பிரதான முகவர்கள் உதவி முகவர்கள் சந்தேகநபர்கள் ஆகியோரின் பெயர் விபரம் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியிடப்படுமென்றும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்திலிருந்து ராம்
இரணைமடுக் குளத்துக்கு மொறகஸ்கந்த நீர்த் தேக்கத்திலிருந்து மகாவலி கங்கை நீரைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை..!!
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்துக்கு மொறகஸ்கந்த நீர்த் தேக்கத்திலிருந்து மகாவலி கங்கை நீரைப் பெற்றுக் கொடுக்கவுள்ள திட்டத்தின் பின்னணியில் வடபகுதி மக்களின் நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்படலாம் என தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. அண்மையில் இரணைமடுக்குளப் பகுதிக்கு விஜயம்செய்த நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவப் பிரதி அமைச்சர் எச்.எம்.சந்திரசேனவினாலேயே இந்தத் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைப் பல்வேறு ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்தத் திட்டம் தொடர்பிலே வடபகுதி தமிழ் மக்களிடையே பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. யாழ். மாநகரசபை முன்னாள் ஆணையாளரும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான சீ.வி.கே.சிவஞானம் இது குறித்துக் கருத்துக் கூறும்போது, மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய திட்டங்கள் அமுல்படுத் தப்படும்போது அதனை ஒத்துழைத்து வரவேற்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள ஒரு பகுதி மக்களின் நலனில் மாத்திரம் அக்கறை கொண்டு, ஏனைய மக்களின் நலனைக் கருத்திலெடுக்காது அமுல்படுத்த நினைக்கும் திட்டங்கள் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப்படவேண்டும். மகாவலி கங்கை நீரை இரணைமடுக்குளத்துக்கு கொண்டு வரவுள்ள திட்டத்தின் பின்னணியில் வடபகுதி நிலங்களில் தமிழ்மக்கள் அல்லாதோர் குடியேற்றுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன. இது குறித்து வட பகுதித் தமிழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். மகாவலி கங்கைநீரை இரணைமடு குளத்துக்கு வழங்குவதன் மூலம் அத்திட்டத்தை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரத்துக்குக்கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் வட மாகாண சபைக்குள்ள அதிகாரங்களான நீர்ப்பாசனம், காணி, விவசாயம் என்பன பறிபோகும் அபாயம் ஏற்படும். அத்துடன் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையானது மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாகும். அது வடபகுதியில் உள்ள மக்களின் நலனில் எந்தளவுக்கு அக்கறை கொள்ளும் என்று தெரியவில்லை. அநுராதபுரத்துக்குச் செல்லும் மகாவலி கங்கை நீரின் அளவு போதுமானதாக இல்லை என அந்தப் பகுதி மக்களே விசனம் தெரிவிக்கும் நிலையில் அதனை இரணைமடு குளத்துக்குக் கொண்டு வருவது எந்தளவுக்கு சாத்தியமாகும். இதன் காரணமாகவே வடபகுதித் தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் தோன்றியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
தங்கம் கடத்த முயன்ற இரு யுவதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!!
சட்டவிரோதமாகப் பெங்களூருக்குத் தங்கம் கடத்த முற்பட்ட யுவதிகள் இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து இவர்கள் நேற்று முன் தினம் சோதனையிடப்பட்டபோதே, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவர்களைக் கைது செய்தனர்.
யுவதிகள் இருவரும் தம் உடலில் மறைத்து வைத்திருந்த 475 கிராம் தங்கம் முதலில் கைப்பற்றப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களுக்குச் சுங்க அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் இவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட பின்னர் இவர்களின் நடை, உடை பாவனையில் மீண்டும் சந்தேகம் ஏற்படவே, சுங்க அதிகாரிகள் இவர்களைத் திரும்பவும் சோதனையிட்டதில் மேலும் தங்கம் கைப்பற்றப்பட்டது.
மொத்தமாக இவர்களிடமிருந்து ஒரு கிலோ 173 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 51 லட்சம் ரூபாவாகும் என மதிப்பிடப்படுகிறது. கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடைமையாக்கப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடலில் மூழ்கிய மற்றுமொருவரின் சடலம் இன்று காலை மீட்பு..!!
மட்டக்களப்பு பாலமீன்மடு வாவியில் நீராடிக் கொண்டிருந்தபோது நீருக்குப்பலியான இரு தமிழ் இளைஞர்களில் தேடப்பட்டு வந்த மற்றுமொருவரின் சடலம் பாலமீன்மடு வாவி குடாப் பகுதியிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டது. 19 வயதான புநொச்சிமுனையைச் சேர்ந்த சிங்கராஜா ஜோபின் என்ற இளைஞரது சடலமே இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலத்தை பொலிஸார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று காலை இவ்வாவியில் நீராடிக் கொண்டிருந்த 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி பலியாகினர். இவர்களில் ஒருவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பம் நடத்தும் 'சிறுவர் தம்பதியர்' - 300 பேரைத் தேடி வேட்டை..!!
மகியங்கனை ரிதிமாலியத்தை பகுதியில் 300 சிறுவர் தம்பதியர் விவாகப் பதிவு செய்திருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் திருமதி. அனோமா திசாநாயக்க சற்றுமுன்னர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். இவர்கள் தொடர்பான விசாரணைகளை மகியங்கனை பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய தேடுதலின்போது 15 வயதுக்குக் குறைவான இரண்டு தம்பதிகள் சட்டவிரோதமாக திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருமதி திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக திருமணம் செய்துவைத்த திருமணப் பதிவாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பாக பிரத்தியேக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறு வயது குறைந்தவர்களுக்கு விவாகப் பதிவு செய்துவைத்த 20 பதிவாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 29ம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய வெளியுறவமைச்சர்..!!
இலங்கைக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புவரும் இந்திய வெளியுறவு அமைச்சர் எம்.எஸ்.கிருஷ்ணா எதிர்வரும் 29ம் திகதி யாழ்ப்பாணத்தில் இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாரென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள 125,127 ஆம் கட்டிடத்தில் இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை திறந்துவைப்பதுடன் முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடுவார். இதன்பின்னர் இந்திய அரசாங்கம் மீளக்குடியமர்ந்தவர்களுக்கு 50,000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வில் அரியாலையில் வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைப்பார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.இத்திட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் முதல்கட்டமாக 150 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்ச ரூபா செலவில் சகல வசதிகளுடன்கூடிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா ஓமந்தைகாங்கேசன்துறை இரயில்பாதை அமைக்கும் பணியினையும் ஆரம்பித்து வைப்பார்.இவ்வேலைத்திட்டமும் இந்திய அரசின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அமிதாப்பச்சனுக்கு ரஜினி பிறந்தநாள் வாழ்த்து..!!
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 68-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அவருக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.
இன்று மாலை விருந்துக்கும் பிறந்த நாள் விழாவுக்கும் மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரஜினி கலந்து கொண்டு பேசுகிறார்.
அமிதாப்பச்சன் இந்திப்பட உலகில் தொடர்ந்து கலக்கி வருகிறார். சமீபத்தில் சிறுவனாக நடித்த “பா” படம் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. டி.வி.யில் குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மொழிகளை கடந்து ரசிகர்களை கவர்ந்தார், 2008-ல் 66-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடியபோது அமிதாப்பச்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் அதிலிருந்து குணமாகி மீண்டும் திரை உலகுக்கு வந்தார். இளம் தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நடிப்பில் கலக்குகிறார்.
மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த சுந்தகார் படப்பிடிப்பு இருவாரத்துக்கு முன்பு முடிவடைந்தது. தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.
பிறந்த நாளையொட்டி இன்று காலை அமிதாப்பச்சன் வீட்டின் முன்னால் ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர். அவர்கள் மத்தியில் அமிதாப்பச்சன் பேசும்போது எனது மனதையும் உடம்பையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்கிறேன். கெட்ட சிந்தனைகளை எனக்குள் நான் அனுமதிப்பதே இல்லை. இதனால் தான் இன்னும் நான் மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியோடும் இருக்கிறேன் என்றார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)