பயனர்கள்.
ript>
திங்கள், 11 அக்டோபர், 2010
இந்திய இலங்கைக் கடற்படைகள் திருமலையில் கூட்டுப் பயிற்சி..!!
இந்திய இலங்கைக் கடற்படைகள் திருமலையில் நேற்று கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளன. இந்தியக் கடற்படையின் திர், ஷர்துல் கப்பல்களிலும் வருண என்ற கடலோரக் காவல்படைக் கப்பலிலும் உள்ள 135 இந்தியக் கடற்படை பயிற்சி அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் நேற்றுக்காலை ஆரம்பமாகின. அதேவேளை, இலங்கைக் கடற்படையின் திருகோணமலை கடல்சார் பயிற்சி அக்கடமியில் பயிற்சி பெற்றுவரும் 128 அதிகாரிகளுக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் கடற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தியக் கடற்படையின் பயிற்சிநிலை அதிகாரிகளுக்கு நேற்று திருமலை கடல்சார் பயிற்சி அக்கடமியில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. திருமலைத் துறைமுகத்தில் இலங்கைக் கடற்படைப் பயற்சி அதிகாரிகளுக்குப் பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ள இந்தியக் கடற்படைக் கப்பல்கள் மூன்றும் நேற்று கொழும்புத் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டன. நாளை 12ம் திகதி இந்தக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும். திருமலையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணத்தின்போது இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் நடைமுறை கடல் பயிற்சிகள் வழங்கப்படும். எதிர்வரும் 15ம் திகதிவரை இந்திய இலங்கைக் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சிகள் தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக