பயனர்கள்.

ript>

திங்கள், 8 நவம்பர், 2010

அவன் இவனில் மது ஷாலினி...!!

அவன் இவன்’ படத்தில் தெலுங்கு நடிகை மது ஷாலினி நடிக்கிறார். ஆர்யா, விஷால் நடிக்கும் படம் ‘அவன் இவன்’. பாலா இயக்குகிறார். காமெடி படமான இதில், சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஜனனி ஐயர் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினை தேடி வந்தனர். இப்போது தெலுங்கு நடிகை மது ஷாலினி நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தற்போது தேனி அருகே நடந்து வருகிறது.

வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை..!!

வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாடசாலைகளே இந்த திட்டத்தின்கீழ் தரமுயர்த்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். இவ்வாறு தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளின் பெயர்களை பட்டியல் இடுவது தொடர்பாக ஆராயும் இறுதி கலந்துரையாடல் நாளைகாலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஆளுநரின் தலைமையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, முமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், மாகாண கல்விப் பணிப்பாளர் பி.விக்ணேஷ்வரன், பாடசாலை அதிபர்கள், உட்பட உயரதிகாரிகளும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் குளிக்கச்சென்ற குடும்பஸ்தரைக் காணவில்லை..!!

மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் குளிக்கச்சென்ற பதுளை ஹஸலக்க என்ற பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான சேத்தர பண்டார மெதிவெக (40வயது) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் குடும்பத்தாருடன் விடுமுறையைக் களிப்பதற்காக நேற்றையதினம் பாசிக்குடாவிற்கு வந்துள்ளார். இவரின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இக்கடல் பரப்பில் எச்சரிக்கை பலகைகள் இடப்படாமையினால் இவ்வாறான மரணங்கள் தொடர்கின்றன.

பிரபாகரனை காரணம்காட்டிய நிதிசேகரிப்பு தோல்வி..!!

பிரபாகரனை காரணம்காட்டிய நிதிசேகரிப்பு தோல்வி- பிரபாகரன் உயிரிழக்கவில்லை எனப் பிரச்சாரம் செய்து, அதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நிதி திரட்டல் முயற்சி தோல்வியைத் தழுவியுள்ளதாக பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பேரின்பநாயகம் சிவகரன் எனப்படும் நெடியவன், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்து அதன்மூலம் நிதி திரட்டுவதற்கு முனைப்பு காட்டியதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், புலிகள் அமைப்பை மீளமைப்பதற்கு நிதி உதவிகளை வழங்குமாறும் கூறி நெடியவன் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டியுள்ளதாக ரொஹான் குணரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். நெடியவனின் இந்தப் பிரச்சாரத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செவி சாய்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தன்னார்வ அடிப்படையில் நிதி திரட்டுதல் மட்டுமன்றி போலியான கடன் அட்டைகள், காசோலை மோசடி, சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத வழிகளிலும் பணம் திரட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெலிக்கடைச் சிறையில் பொலீசார்மீது கைதிகள் தாக்குதல், விசாரணைகள் தொடர்கின்றன..!!

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றுக்காலை திடீர் சோதனை மேற்கொள்ள சென்றிருந்த விசேட பொலிஸ் குழுமீது கைதிகள் நடத்திய தாக்குதலில் 45 பொலிஸாரும், 5 சிறைக்காவலர்களும் காயமடைந்தனர். வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரிவில் சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த ஐம்பது பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாகவும், கைதிகள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசேட பொலிஸ் குழுவினர் திடீர்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 66 பொலிஸார் அடங்கிய இந்த விசேட குழுவினர் தேடுதல் நடத்திக்கொண்டு இருக்கும்போது குறித்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் சிலர் பொலிஸார்மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். அதனை அடுத்து ஏனைய கைதிகளும் கற்கள், போத்தல்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை அடுத்து அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த மேலதிக பொலிஸாரும், சிறைக்காவலர்களும், முப்படையினரும் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்துள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு விரைந்த விசேட படைப் பிரிவினர் காயமடைந்தவர்களை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர். இவர்களில் சிலர் அவசர சிகிச்சை பிரிவுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்களின் தலை மற்றும் உடம்பிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவென விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் (சி.ஐ.டி.) குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் குழு தமது விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளது.

அஜீத் பிரியாணி சமைப்பதில் ஸ்பெஷலிஸ்ட்..!!

அல்டிமேட் ஸ்டார் அஜீத் சினிமா மற்றும் ரேஸ் துறையில் அசத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவர் வீட்டிலும் ஒரு கலையில் சிறந்தவராக உள்ளாராம். அப்படி என்ன கலை தெரியுமா... சமையல் கலை தான். குறிப்பாக பிரியாணி சமைப்பதில் அஜீத் எக்ஸ்பர்ட்டாம். பிரியாணி சமைப்பதையை ஹாபியாக கொண்ட நம்ம அல்டிமேட் ஸ்டார் வீட்டில் அனைவரையும் உட்காரவைத்து பரிமாறுவாராம்.