பயனர்கள்.

ript>

திங்கள், 25 அக்டோபர், 2010

பிரபுதேவா-நயன்தாரா மிகவும் பொருத்தமான ஜோடி - பிரகாஷ் ராஜ்..!!

யார் என்ன சொன்னாலும் நான் நயனுடனான திருமணத்தை தடுக்க முடியாது என பிரபுதேவா கூறிய பிரபுதேவாவுக்கு சமீபத்தில் தன் மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து பண்ணிவிட்டு, போனி வர்மாவைத் திருமணம் செய்திருக்கும் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், பிரபுதேவா-நயன்தாரா மிகவும் பொருத்தமான ஜோடி என்று கருத்துக் கூறியிருக்கிறார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின்மூலம் இவ்வாண்டின் இறுதியில் 42ஆயிரத்து 500கோடி ரூபா வருமானம்..!!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின்மூலம் இந்த ஆண்டின் இறுதியில் 42ஆயிரத்து 500கோடி ரூபா சாதனைமிக்க வருமானம் நாட்டிற்குக் கிடைக்கவுள்ளது. ஒருவருட காலத்தினுள் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்நாட்டிற்கு அனுப்பிவைத்த ஆகக்கூடிய தொகை என்ற சாதனையாக இது அமைகின்றது. கடந்த ஆண்டிலே இந்நாட்டிற்குக் கிடைத்த வருமானம் 3.3பில்லியன் டொலராகும். இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் அமுல்படுத்திய குடியகல்வு ஊழியர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டமே இதற்கான காரணமாக அமைந்துள்ளது. உயர்வருமானம் பெறும் தொழில்களுக்கு இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல், இந்த உழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கப்பெறும் வகையில் கூட்டு உடன்படிக்கைகளை மத்திய கிழக்கு நாடுகளுடனும் சேவை வழங்குநர்களிடமும் செய்துகொண்டமையே இதற்கான காரணமாகுமென இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் தர்மா வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். அதிக வருமானம் பெறும் தொழிற்றுறைகளுக்கு அதிகமாக பயிற்றப்பட்ட ஊழியர்களை அனுப்புதல், தொழில்சார் நிபுணர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப் பும் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் இதுவரையில் எடுத்துள்ளது.

ஐந்து சிம் கார்ட்டுகளையே ஒருவர் வைத்திருக்க முடியும்..!!

கையடக்கத் தொலைபேசிக்கான ஐந்து சிம் கார்ட்டுகளையே ஒருவர் வைத்திருக்க முடியும் என்ற விதிமுறை ஜனவரிமுதல் அமுலுக்கு வருவதாகத் தொலைத் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்லிட்ட தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்தப் புதிய நடைமுறை அமுலுக்கு வருவதாகவும் பத்துப் பதினைந்து சிம் கார்டுகளை குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்கள் டிசம்பர் 21ம் திகதிக்கு முன்னர் சிம் கார்டுகளைத் தமது பெயரில் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யப்படாத சிம்கள் டிசம்பர் 31ம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொலன்னாவையில் இரு குழுக்களிடையே பாரிய மோதல்கள்..!!

கொழும்பு, கொலன்னாவ ஊறுகொடவத்த பகுதியில் இரண்டு பாரிய குழுக்களுக்கிடையில் இன்று அதிகாலை 5.00 மணிக்கு மோதல் ஆரம்பித்துள்ளது. இதனால் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் இப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பகுதியில் பதற்றநிலை நிலவுகின்றது.

இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள பூரண ஆதரவளிக்கப்படும்-சஜித் பிறேமதாச..!!

இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளும் பரஸ்பர ரீதியாக நன்மைகளை எட்டக் கூடிய வகையில் உறவுகள் வலுப்படுத்திக்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்குபற்றும் நோக்கல் சஜித் பிரேமதாஸ இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூப ராவுடனும் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விமலா ராமனுடன் மோதிய ப்ரியாமணி..!

விஜய் என்ற புதிய இயக்குநர் இயக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் ப்ரியாமணியும் விமலா ராமனும் நடிக்கிறார்கள். சுமந்த் நடிக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் ஆரம்பத்தில் ப்ரியாமணியை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அதுவரை குழப்பமின்றி போய்க்கொண்டிருந்த ஷூட்டிங்கில், விமலா ராமன் வந்ததும் பிரச்சினை செய்ய ஆரம்பித்தாராம் ப்ரியாமணி. எனக்கு என்ன ரோல், விமலா ராமனுக்கு என்ன ரோல்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டாராம். க்ளைமாக்ஸில் தன்னை விட விமலா ராமனுக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பதால் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டாராம் ப்ரியாமணி. "நான் ஒரு தேசிய விருது பெற்ற நடிகை... நானும் விமலா ராமனு ஒண்ணா... நான் ஷூட்டிங்குக்கு வரலேன்னா என்ன பண்ணுவீங்க?", என்று ப்ரியாமணி எகிற "பருத்தி வீரன்ல யார் நடிச்சிருந்தாலும் இந்த தேசிய விருது கிடைச்சிருக்கும். ஏன்னா அது எந்த நடிகையோட, நடிகரோட படமும் இல்லை. அமீர் சார் படம்...!" என தன் பங்குக்கு குத்த ஆரம்பித்துள்ளார் விமலா ராமன்.

வெற்றுப் பீரங்கி குண்டுகளை கடத்த முனைந்த பிக்கு உள்ளிட்ட நால்வர் கைது..!!

89 வெற்றுப் பீரங்கி தோட்டாக்களை லொறியில் கடத்திச் செல்ல முற்பட்ட ஆறு சந்தேகநபர்களை கண்டி, தெல்தெனிய நகரில் வைத்து பொலீசார் கைதுசெய்துள்ளனர். பிலிமத்தலாவை, தெவுலுகல, அம்பிட்டிய மற்றும் கரலியத்த பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டதாகவும், குறித்த சந்தேகநபர்களுள் பௌத்த பிக்கு ஒருவர் உள்ளடங்குவதாகவும் பொலீசார் கூறியுள்ளனர். இதேவேளை கம்பஹா மாவட்டம் களனி, வனவாசல பகுதியில் 9மில்லிமீற்றா ரக தோட்டாவுக்கான துப்பாக்கியுடன் நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வனவாசலப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த தீவின் இரு பிரதேசங்கள், பிரதான வீதிகள் மக்கள் பாவனைக்கு அனுமதி..!!

தீவகப்பகுதியில் நீண்ட காலமாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு பிரதேசங்கள் அவற்றுக்கான பிரதான வீதிகள் என்பன மக்கள் பாவனைக்கு நேற்று அனுமதிக்கப்பட்டன. வேலணை வங்களாவடி தொடக்கம் வேலணை மத்தியகல்லூரி வரையான பிரதேசம் படையினரது பாவனையிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் வேலணை ஊர்காவற்றுறை பிரதான வீதியும் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. அத்துடன் மண்டைதீவு மத்திய பிரதேசமும் விடுவிக்கப்பட்டு மண்டைதீவு பிரதான வீதியும் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த வீதிகளுக்கான 778ம், 781ம் இலக்க பஸ் சேவைகளும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சரும் ஆளுநரும் இவ்விரு பிரதேசங்களையும் கையேற்று வீதிகளைத் திறந்தும் பஸ்சேவைகளை ஆரம்பித்தும் வைத்தனர். நடைபெற்ற நிகழ்வில் கருத்துத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று ஒரு இனியநாள் உங்களது நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு லண்டனில்..!!

சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு நேற்று முன்தினம் வடமேற்கு லண்டன் ஹரோவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. உலகமயமாதலில் ஊடகங்களும், தமிழ் மக்களின் பிரச்சினையும் என்ற கருப்பொருளுடன் காலை 10:00 மணிமுதல் மாலைவரை நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்கள் இலங்கை, இந்தியா, கனடா, ஜேர்மனி, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளிலிருந்து பங்கேற்றிருந்தனர்.

பொலநறுவையில் லொறி விபத்து 12 இராணுவத்தினர் காயம்..!!

பொலநறுவை கிரித்தலைப் பிரதேசத்தில் இராணுவத்தினர் பயணித்த லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 இராணுவவீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்றுமுற்பகல் 10மணியளவில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதி இராணுவ முகாமில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிக்காக உபகரணங்களை ஏற்றிச்சென்ற லொறியே விபத்தில் சிக்கியதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் அடுத்த நாயகி வித்யா பாலன்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான சுல்தான் தி வாரியர் தலைப்பு ஹரா என்று மாற்றப்பட்டுள்ளது. தன் மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இதனால், சுல்தான் என்கிற ஹராவின் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில், எந்திரனுக்கு முன்பே துவங்கிய இந்த அனிமேஷன் படத்தின் வேலைகள், எந்திரன் ரிலீசுக்காக தள்ளி வைக்கப்பட்டன.
இந்தப் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகளை கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார். மீதி அனிமேஷன் வடிவில் வரும் காட்சிகளை சௌந்தர்யா கவனிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களையும் ரவிக்குமாரே படமாக்குவார் என்று தெரிகிறது. வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல், எல்லா நாயகிகளுமே இவருடன் ஒரு முறை நடித்துவிட வேண்டும் என்று துடிப்பது, ரஜினியுடன் மட்டுமே! அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் வித்யா பாலன்.
தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும், இதுவரை அவர் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார். படத்தில் முதலில் நாயகியாக விஜயலட்சுமி நடித்திருந்தார். இப்போது, இன்னொரு நாயகியாக வித்யா பாலனும் நடிப்பார் என்று கூறப்பட்டது. இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், ரஜினி படத்தில் நடிக்க எனக்கும் ஆசைதான். தமிழ் நான் நடிக்கும் முதல் படம் ரஜினியுடன் அமைந்தால், அதைவிட அதிர்ஷ்டம் எதுவுமில்லை. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனது பெற்றோரும், நான் ரஜினியுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் எனக்கு முறையான அழைப்பு வரவில்லை, என்றார்.