வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின்மூலம் இந்த ஆண்டின் இறுதியில் 42ஆயிரத்து 500கோடி ரூபா சாதனைமிக்க வருமானம் நாட்டிற்குக் கிடைக்கவுள்ளது. ஒருவருட காலத்தினுள் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்நாட்டிற்கு அனுப்பிவைத்த ஆகக்கூடிய தொகை என்ற சாதனையாக இது அமைகின்றது. கடந்த ஆண்டிலே இந்நாட்டிற்குக் கிடைத்த வருமானம் 3.3பில்லியன் டொலராகும். இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் அமுல்படுத்திய குடியகல்வு ஊழியர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டமே இதற்கான காரணமாக அமைந்துள்ளது. உயர்வருமானம் பெறும் தொழில்களுக்கு இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல், இந்த உழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கப்பெறும் வகையில் கூட்டு உடன்படிக்கைகளை மத்திய கிழக்கு நாடுகளுடனும் சேவை வழங்குநர்களிடமும் செய்துகொண்டமையே இதற்கான காரணமாகுமென இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் தர்மா வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். அதிக வருமானம் பெறும் தொழிற்றுறைகளுக்கு அதிகமாக பயிற்றப்பட்ட ஊழியர்களை அனுப்புதல், தொழில்சார் நிபுணர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப் பும் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் இதுவரையில் எடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக