பயனர்கள்.
ript>
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!
இலங்கையில் நிலவும் அமையான சூழலை அடுத்து இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்றவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐ.நா. வின் புள்ளிவிபரவியல் அறிக்கையில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு தப்பி சென்ற 67 பொதுமக்கள் ஐ.நாவின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் நாடு திடும்பியுள்ளனர். இந்தியாவிலுள்ள 112 முகாம்களில் 71,654 இலங்கை அகதிகளும் வெளியிடங்களில் 32,467 இலங்கை அகதிகளும் தங்கியுள்ளதாக கடந்த ஜூலை மாதம் இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரவியல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதான பாரதிதாசனின் கைது அரசியல் நோக்கிலானது- ஜனநாயக மகக்ள் முன்னணி..!!
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கப் பிரிவு செயலாளர் எல்.பாரதிதாசன் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைக்கபெறவில்லை எனவும் இவரது கைது ஒரு அரசியல் நோக்கத்திலானது என்றும் முன்னணியின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குமரகுருபரன் மேலும் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் சுதந்திரவாழ்வை உறுதிப்படுத்தும் மாநாடு..!!
மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் சுதந்திரவாழ்வை உறுதிப்படுத்தும் முதலாவது மாநாடு இன்று மலேசியாவில் இடம்பெறவுள்ளது. மலேசியா கோலாலம்பூரில் இன்றுகாலை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. 30 வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத்; தமிழர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் அவர்கள் வாழ்வதற்காக எவ்வித வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை குறிப்பாக முறையான வேலைவாய்ப்பு அனுமதி, தங்குமிடம், உணவு, கல்வி வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என மலேசிய மாற்றுசெயலணி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய அரசாங்கத்தின் மனிதபிமான அடிப்படையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காணப்பட்ட 72 இலங்கை அகதிகளை மீட்டெடுத்து அவர்களை மூன்றாம் தரப்பு நாடுகளில் குடியமர்த்த செயற்பட்டிருக்கும் மலேசிய மாற்றுசெயலணி தலைவர் கலைவாணர் முழு பொறுப்பையும் ஏற்று நடத்துகிறார். மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழர்கள் வாழ்வு உறுதிப்படுத்த முடியும் என்பதற்காகவே இம்மாநாடு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. மலேசிய மத்திய அமைச்சர் இருவர், குடிவரவு அதிகாரிகள், பொலீஸ் அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஐ.நா சபையின் பிரதிநிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்கின்றனர்.
வெடிபொருட்களை வைத்திருந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது..!
வெடிபொருட்களை வைத்திருந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு கிலோ கிராமிற்கு அதிகமான சக்திவாய்ந்த வெடிபொருட்களை குறித்த தமிழர்கள் இருவரும் வைத்திருந்துள்ளனர். 80 மீல்லி மீற்றர் மோட்டார் செல் ஒன்றில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. என்ன காரணத்திற்காக இவர்கள் குறித்த வெடிபொருட்களை வைத்திருந்தார்கள் என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். பொலீசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதடி மக்களுக்கான குடிநீர்த்திட்டம் நேற்று அங்குரார்ப்பணம்..!!
யாழ்ப்பாணம், கைதடி மக்களுக்கான குடிநீர்த்திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தென்மராட்சி கைதடி மக்களின் நீண்டகால தேவையான குடிநீர்த் திட்டமே நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நேற்றுமாலை கைதடியிலுள்ள நீர்வழங்கல் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டு நீர்விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் கைதடி அபிவிருத்திக்குழு செயலாளர் மோகனரூபன், தமது கிராமத்தின் நீண்டநாள் கோரிக்கையான குடிநீர்வசதியை ஏற்படுத்தித் தந்தமைக்கு கைதடி மக்களின் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளர் செல்வி ரஞ்சனா மற்றும் நீர்வழங்கல் பகுதி அதிகாரிகள் ஆகியோருடன் பொதுமக்களும் பங்குகொண்டனர்.
காதலிப்பதாக சொன்ன ரசிகரை மன்னித்த - அசின்..!
ஹீரோயின்களை ‘அன்பே’ ‘ஆருயிரே’ என்று வர்ணித்து, கடைசியில் ‘ஐ லவ் யூ’ என்றும் கடிதம் எழுதும் அல்லது எஸ்.எம்.எஸ் அனுப்பும் ரசிகர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அசின் விஷயத்தில் இது தலைகீழ். ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்த ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் இது. அசின் நடிப்பதை வேடிக்கை பார்த்த ஒரு ரசிகர், பலரது கட்டுக்காவலை மீறி அசினிடம் வந்தார். ஏதோ ஆட்டோகிராப் கேட்கிறார் போலிருக்கிறது என்று அவரைப் பார்த்த அசின், அடுத்த வினாடி அந்த வாலிபர் செய்த செயலால் அதிர்ந்து போனாராம். “நேரா என்கிட்ட வந்த அந்த ரசிகர், ‘ஐ லவ் யூ’னு சொன்னார். ‘இப்படி எல்லாம் சொல்லாதீங்க’ன்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கிறதுக்குள்ள, அங்கே இருந்த செக்யூரிட்டி, அந்த ரசிகரை இழுத்து வெளியே தள்ளிட்டார். அய்யோ பாவம், அவரை விட்டுடுங்கன்னு கத்தினேன். ஊகூம், செக்யூரிட்டி அப்பதான் இன்னும் கொஞ்சம் பலமா வீரத்தை காட்டினார்” என்ற அசின், இப்போதெல்லாம் தன் உதவியாளர்களை உஷார்ப்படுத்தி வைத்துள்ளார்.
புலிச் சந்தேகநபரும் சகாக்களும் கைது, ஆயுதம் மீட்பு..!!
புலிகள் இயக்க உறுப்பினர்கள் என கூறப்படும் சந்கேதநபர் ஒருவரையும் அவரது சகாக்கள் இருவரையும் நேற்று நுவரெலியா தலவாக்கலைப் பொலீசார் கைதுசெய்துள்ளனர். கண்டி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தலவாக்கலையில் அண்மையில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டதன் தொடராகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கிகளும் மீட்கப்பட்டது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பாரிய தீவிபத்து..!!
புத்தளம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பாரிய புகைமூட்டம் மேலெழுந்துள்ளதால் மேலதிக தகவல்கள் பெற முடியவில்லையென்று கூறப்படுகின்றது.
யாழ் பொதுசன நூலகம் முன்பாக தெற்கிலிருந்து சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் அடாவடி..!!
யாழ் பொதுசன நூலகம் முன்பாக தெற்கிலிருந்து சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் நேற்று நடாத்திய அடாவடித்தனங்களால் பொதுசன நூலகத்தின் அன்றாட செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இலங்கை மருத்துவ சங்கம் முந்தநாளுக்கு முதல்நாள்முதல் நேற்றுவரை முக்கிய மகாநாடு ஒன்றை இங்கு நடத்துகின்றது. இந்த மகாநாட்டை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ் பொதுசன நூலகத்தை பார்வையிடுவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு சென்றிருந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஜனாதிபதியினது உறவினர்கள் தாம் எனக்கூறி பொதுசன நூலகத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்குமாறு காவலர்களைக் கோரினர். எனினும் இலங்கை மருத்துவ சங்கத்தின் வருடாந்தக் கூட்டம் இடம்பெறுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இதனையடுத்து அங்கு அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அறிவிப்புத்தாளை கிழித்து எறிந்தனர். காவலாளியை தாக்குவதற்கும் முற்பட்டனர். அத்துடன் பிரதான வாயிலிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கும் படையதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து படையதிகாரிகளும் பொலிசாரும் அங்கு திரண்டனர். உடனடியாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. பின்னர் அவரும் அவ்விடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். அதன் பின்னர் தடையைநீக்கி பொதுசன நூலகத்தை சுற்றிப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கினர். இதனால் யாழ் பொதுசன நூலக வளாகத்தில் இன்று பிற்பகலில் சுமார் 2மணித்தியாலம் குழப்பகரமான சூழ்நிலை காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அம்பாறையில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து ஒருவர் பலி..!!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரிவுக்குட்பட்ட பனையடிவட்டைக் கிராமத்தில் இழுவைப் பெட்டியுடன் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன், மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுப்பகல் 12.30அளவில் உழவு இயந்திரத்தை ஓட்டிவந்த மலையடிக் கிராமம் 04ல் 18வயதான பாறூக் சிராஜ் என்ற இளைஞனே ஸ்தலத்தில் மரணமானவர். மணல் ஏற்றிவரும்போதே உழவு இயந்திரம் குடை சாய்ந்துள்ளது.
அனுஷ்கா குழப்பம் பிரண்ட்ஸ் அட்வைஸ்..!!
சிங்கம்’ பட வெற்றியை தொடர்ந்து தமிழில் அனுஷ்காவுக்கு நிறைய வாய்ப்பு குவியத் தொடங்கி உள்ளது. தற்போது சிம்பு ஜோடியாக ‘வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தெலுங்கிலும் வாய்ப்பு அலைமோதுகிறது. தமிழ், தெலுங்கு இரண்டிலும் வாய்ப்பு வருவதால் எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் மகேஷ்பாபுவுடன் அவர் நடித்த தெலுங்கு படம் ‘கலீஜா’ வெற்றி பெறாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். தெலுங்கில் நம்பர் ஒன் என்ற அந்தஸ்த்தில் இருக்கும் அனுஷ்காவுக்கு இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு அடுத்த வரிசையில் உள்ள இலியானா, காஜல் அகர்வால் ஆகியோர் எப்படியாவது முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று களத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். ‘இரண்டு மொழியிலும் நடித்துக்கொண்டிருந்தால் தெலுங்கில் உள்ள நம்பர் ஒன் இடத்தை இழக்க வேண்டியதிருக்கும். தமிழை விட தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்து’ என்று அவரது நெருங்கிய சகாக்கள் அனுஷ்காவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)