பயனர்கள்.
ript>
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
யாழ் பொதுசன நூலகம் முன்பாக தெற்கிலிருந்து சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் அடாவடி..!!
யாழ் பொதுசன நூலகம் முன்பாக தெற்கிலிருந்து சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் நேற்று நடாத்திய அடாவடித்தனங்களால் பொதுசன நூலகத்தின் அன்றாட செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இலங்கை மருத்துவ சங்கம் முந்தநாளுக்கு முதல்நாள்முதல் நேற்றுவரை முக்கிய மகாநாடு ஒன்றை இங்கு நடத்துகின்றது. இந்த மகாநாட்டை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ் பொதுசன நூலகத்தை பார்வையிடுவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு சென்றிருந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஜனாதிபதியினது உறவினர்கள் தாம் எனக்கூறி பொதுசன நூலகத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்குமாறு காவலர்களைக் கோரினர். எனினும் இலங்கை மருத்துவ சங்கத்தின் வருடாந்தக் கூட்டம் இடம்பெறுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இதனையடுத்து அங்கு அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அறிவிப்புத்தாளை கிழித்து எறிந்தனர். காவலாளியை தாக்குவதற்கும் முற்பட்டனர். அத்துடன் பிரதான வாயிலிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கும் படையதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து படையதிகாரிகளும் பொலிசாரும் அங்கு திரண்டனர். உடனடியாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. பின்னர் அவரும் அவ்விடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். அதன் பின்னர் தடையைநீக்கி பொதுசன நூலகத்தை சுற்றிப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கினர். இதனால் யாழ் பொதுசன நூலக வளாகத்தில் இன்று பிற்பகலில் சுமார் 2மணித்தியாலம் குழப்பகரமான சூழ்நிலை காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக