பயனர்கள்.
ript>
வியாழன், 7 அக்டோபர், 2010
பண்டாரவன்னியனின் உருவச் சிலையையும், நினைவுக் கல்லையும் அமைக்குமாறு கோரிக்கை..!!
கற்சிலைமடுவில் உடைக்கப்பட்டுள்ள வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் உருவச் சிலையையும், நினைவுக் கல்லையும் மீண்டும் அப்பகுதியில் அமைக்குமாறு கற்சிலைமடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எமது வரலாற்றுச் சின்னமான அந்தச் சிலையை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் மன்னனின் சிலை எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரலாற்றுச் சான்றாகப் பேணப்படுகின்றதோ அதேபோன்றே வன்னியில் பண்டார வன்னியனின் சிலையும் பாதுகாக்கப்பட்ட வரலாறு பேணப்படவேண்டும். எனினும் எமது வரலாற்றை மறைப்பதற்காகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கை எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகின்றதெனவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். கற்சிலைமடு கிராம முன்னேற்றச் சங்க வளாகத்தில் அமைந்திருந்த பண்டாரவன்னியன் சிலை, திருவள்ளுவர் சிலை என்பன உடைத்து அகற்றப்பட்டுள்ளன. இவற்றுள் திருவள்ளுவர் சிலை மிகவும் பழைமை வாய்ந்தது. அத்துடன் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட இடமான கற்சிலைமடு பழைய குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லும் உடைக்கப்பட்டுள்ளது. இது ஒருதரப்பினரால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றே நாம் கருதுகின்றோம். இதனால் நாம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். இவை எமது வரலாற்றுப் பொக்கிஷங்கள். எனவே இவற்றை உரிய இடங்களில் மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனார்.
ஒரு ஹீரோவிடம் கேட்டு வாங்கிய - தனுஷ்..!!
உத்தமபுத்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு அபூர்வமான வரவு இயக்குனர் மகேந்திரன். உதிரிப்பூக்கள் மகேந்திரன் என்றால் சட்டென்று புரியும். பொதுவாக எந்த விழாவுக்கும் வராதவர் இங்கு வந்த காரணமென்ன? இப்படத்தின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் மகேந்திரனின் சிஷ்யனாம்! 'இந்த ஒரு விஷயமே இந்த டைரக்டர் மேல எனக்கு தனி மரியாதையை ஏற்படுத்தியிருக்கு' என்றார் மற்றொரு கெஸ்ட்டான கே.எஸ்.ரவிகுமார். இரண்டு பாடல்களையும் ஒரு ட்ரெய்லரையும் திரையிட்டார்கள். திரையில் ஜேஜே என்று கூட்டம். இவ்வளவு நட்சத்திரங்களையும் எப்படிதான் கட்டி மேய்த்தாரோ என்று விழாவில் பேசிய அத்தனை பேரும் மித்ரனின் இயக்கம் குறித்து ஆச்சர்யம் தெரிவித்தார்கள். "நான் கூட ஏதோ கேரவேன் காரங்கள்ளாம் ஒண்ணு கூடி ஊர்வலம் நடத்துறாங்களோன்னு நினைச்சேன். அந்தளவுக்கு எல்லா கேரவேனையும் ஸ்பாட்ல இறக்கிட்டாரு தயாரிப்பாளர் அப்பாராவ்" என்றார் விவேக். "அந்த காலத்துல கிருஷ்ணாராவ், ராமாராவ், ரங்காராவ்னு நிறைய 'ராவ்'கள் சினிமாவுல முக்கியமான இடத்துல இருந்திருக்காங்க. நிச்சயம் இந்த அப்பாராவுக்கும் பெரிய இடம் இருக்கு" என்றார் விவேக். இந்த படத்தில் தனுஷ§க்கு மாமாவாக நடித்திருக்கிறாராம். அதுவும் ஓல்டு கெட்டப்பில்! "ஏற்கனவே படத்துல எழுபது எண்பது பேரு இருக்காங்க. எல்லாரும் காமெடி பண்ணியிருக்காங்க. இதுல நான் நடிச்சு எங்க வெளியில தெரியப்போறேன். அந்த கூட்டத்துல காணாம போயிருவேன். அதனால் இந்த படமே வேணாம்னு சொன்னேன். ஆனாலும் விடாம என்னை வற்புறுத்தி நடிக்க வச்சார் தனுஷ். இப்பதான் புரியுது. என் சினிமா கேரியரில் இந்த படம் ரொம்ப ரொம்ப முக்கியமான படமா இருக்கும்" என்றார். விவேக் சொன்னதை அப்படியே வழிமொழிந்த தனுஷ், "செகண்ட் ஆஃப்ல இந்த படத்தை தோளில் சுமக்கறதே விவேக்தான். தெலுங்கு ரெடி படத்தை பார்த்ததுமே அந்த கேரக்டரில் விவேக்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணினேன். அதனாலதான் பிடிவாதமா நடிக்கவும் வச்சேன். ஒப்புக்கொண்ட அவருக்கு நன்றி" என்றார் தனுஷ். படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி. "ஒரு ஹீரோவே இன்னொரு ஹீரோகிட்ட பாட்டுக்காக நின்னது நான்தான்னு நினைக்கிறேன். ஒரு பாடலை கம்போஸ் பண்ணி கொடுத்திட்டு நடிக்க போயிட்டாரு விஜய் ஆன்ட்டனி. அடுத்தடுத்த பாடல்களை வாங்குறது ரொம்ப சிரமமா போச்சு. பகலெல்லாம் நடிக்க போயிடுவாரு. நைட்டெல்லாம் கண்ணு முழிச்சி பாட்டு போட்டுக் கொடுப்பாரு. அவ்வளவு சிரமப்பட்டு போட்டு கொடுத்தாலும் அத்தனை பாடலும் ஹிட் ஆகிற அளவுக்கு நல்லாயிருக்கு" என்று லைட்டாக ஒரு 'நறுக்' கொடுத்து வாழ்த்தினார் தனுஷ். "இந்த படத்தின் தயாரிப்பாளர் மறுபடியும் எப்போ கால்ஷீட் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கேன்" என்று அந்த மேடையிலேயே தனுஷ் ஓப்பன் ஆஃபர் கொடுத்ததுதான் விசேஷத்திலும் விசேஷம்!
"உத்தம ஹீரோ!"
"உத்தம ஹீரோ!"
கண்டியில் கணவனை அச்சுறுத்தி மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு 20வருட சிறை..!!
கண்டி மத்திய கந்தயாய பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் பலவந்தமாகப் புகுந்து கணவனை அச்சுறுத்தி வெளியேற்றிவிட்டு அவரின் மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானதையிட்டு எதிராளிக்கு 20வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கண்டி மேல்நீதிமன்ற நீதிவான் பிரீத்தி பத்மன் சூரசேன தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,50,000 ரூபா நஷ்டஈடாகச் செலுத்தப்பட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மேலும் ஒருவருடம் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிவான் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஹேகுணகெதர விஜேசேன அல்லது வெடிக்காராயா எனும் 50வயது நபருக்கே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு ஜூன் மாதம் வல்லுறவுக் குற்றம் புரியப்பட்டுள்ளது. வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண்ணின் அப்போதைய வயது 25. அவருக்குத் திருமண மாகி ஆறுமாதங்களில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இப்பெண் நீதிமன்றில் சாட்சியமளித்தபோது, சம்பவதினமிரவு எதிராளி வீட்டுவாசலில் நின்று எனது கணவனின் பெயரைச் சொல்லி அழைத்தார். கதவைத் திறந்த கணவனைக் கத்தி முனையில் பயமுறுத்தி வெளியேற்றிய எதிராளி என்னுடன் பலாத்காரமாக உறவு கொண்டார் எனத் தெரிவித்துள்ளார். சாட்சியங்களின் அடிப்படையில் நீதிவான் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு பத்து மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்..!!
இலங்கைக்கு பத்து மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்ட போதிலும், பல்வேறு நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக தங்குமிடம் மற்றும் நிலக்கண்ணி வெடி ஆகிய பிரச்சினகளை இடம்பெயர் மக்கள் எதிர்நோக்கி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் இலங்கைகான மனிதாபிமான உதவியாக 13 மில்லியன் யூரோ ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஒன்றியத்தின் மனிதாபிமான உதவி மற்றும் சிவில் பாதுகாப்பு ஆணையாளர் கிறிஸ்டினா ஜோர்ஜியா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைளில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ள போதிலும், இன்னமும் பாரியளவு முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தங்குமிடம், உணவு, சுகாதாரம், குடிநீர் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களை உதவிகளை வழங்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார். 2007ம் ஆண்டு முதல் இதுவரையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான மனிதாபிமான உதவியாக 58 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது.
இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 352 ஆகக் குறைந்தது..!!
மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கைகள் காரணமாக முகாம்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை நேற்றுக்காலை 23 ஆயிரத்து 352 ஆகக் குறைந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு முகாம்களிலும் இப்போது 22ஆயிரத்து 194பேர் மட்டுமே தங்கியூள்ளனர். யாழ்ப்பாணத்தில் 1158 பேர் உள்ளனர் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்கம் இதுவரையில் 60ஆயிரம் குடும்பயங்களைச் சோந்த 2லட்சம் பேரை மீள்குடியேற்றம் செய்துள்ளதாக அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
வடமாகாண சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கென 19மில்லியன் அமெரிக்கடொலர் செலவில் பாரிய வேலைத்திட்டங்கள்..!!
வடமாகாண சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கென 19மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சேவையாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகாதார உதவியாளர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். எய்ட்ஸ், காசம், மலேரியா ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் உலகளாவிய நிதியம் (மிபிதிஹிணி) என்ற திட்டத்தின் ஊடாக இதற்காக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிதி ஐந்து முக்கிய திட்டங்களில் செலவு செய்யப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் வி. ரவீந்திரன்; தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் வடபகுதியிலுள்ள 25 வைத்தியசாலைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், ஆளணி பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வரும் முன் காப்போம் என்ற வேலைத் திட்டத்தின்கீழ் மருத்துவ உதவியாளர்களுடன் இணைந்து சேவையாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகா தார உதவியாளர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 570 பேருக்கு நவம்பர் மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த வேலைத் திட்டத்தின் முதலாவது அம்சத்தின் கீழ் 175 மருத்துவ மாதுகளும், 50 பொது சுகாதார அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் இவர்களுக்குத் தேவையான சகல பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது அம்சத்தின்கீழ் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள 25 வைத்தியசாலைகள் புதிதாக நிர்மாணிக்க புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் எட்டு சுகாதார அதிகாரிகள் அலுவலகம், 12 விடுதிகள், ஐந்து மலேரியா தடுப்பு அலுவலகம், இரண்டு இருதய சிகிச்சை பிரிவு, ஆகியன நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் 8 கெப் வண்டிகளும் வழங்கப்படவுள்ளன. மூன்றாவது அம்சத்தின்கீழ் 56 மருத்துவ பரிசோதனை நிலையங்களை அமைப்பதற்கு அல்லது விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. சுமார் 85 மருத்துவ ஆய்வுக் கூட உதவியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். நான்காவது அம்சத்தின் கீழ் உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதுடன் நிதி ஒதுக்கீடுளையும் செய்துள்ளது என்று ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நயன் சீதையா? - கொந்தளித்த தெலுங்கு திரையுலகம்..!!
பிரபுதேவாவுடன் கள்ளக்காதல் கொண்டுள்ள நடிகை நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதையடுத்து அந்த வேடத்தில் மாதுரி தீட்சித்தை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனராம். தெலுங்கு இயக்குநர் பாபு, என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணாவை வைத்து ஸ்ரீராம ஜெயம் என்ற புராணப் படத்தை இயக்கவுள்ளார். இதில் பாலகிருஷ்ணா ராமராக நடிக்கிறார். சீதை வேடத்தில் நயனதாராவை நடிக்க வைக்க அணுகியுள்ளனர். இந்தநிலையி்ல் பிரபுதேவா- நயனதாரா கள்ளக்காதல் குறித்து பிரபுதேவாவின் மனைவி ரமலத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால், நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்கக் கூடாதுஎன்று அவர்கள் கொந்தளித்துள்ளனர். இதையடுத்து முறைப்படி கல்யாணம் செய்து கொண்டு, அழகாக குடும்பம் நடத்தி வருபவரும், குடும்பப் பாங்கான முகம் கொண்டவருமான மாதுரி தீட்சித்தை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தீர்மானித்து அவரை அணுகியுள்ளாராம் இயக்குநர் பாபு.
சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து இத்தாலியில் சுவரொட்டி..!!
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு 30 மாதகால கடுழிய சிறைத்தண்டனை வழங்கியதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடந்த நான்காம் திகதியன்று இத்தாலியில் சுவரொட்டி பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி இத்தாலியிலுள்ள விகாரைகள், பௌத்த நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகிலும், இலங்கையர்கள் வசிக்கும் மற்றும் நடமாடும் பிரதேசங்களிலுமே ஒட்டப்பட்டுள்ளன. ~தமிழர்களை இனப்படுகொலை செய்த இனவெறி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமைக்கு ஜனாதிபதி அவர்களுக்கு உலகத் தமிழ் மக்களின் நன்றி உரித்தாகட்டும் என அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன் கீழே தமிழ் மக்கள் அமைப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவுக்கு சிறைச்சாலையில் உரிய பாதுகாப்பு..!!
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறைச்சாலையில் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நேற்றையதினம் சபையில் தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு தொடர்பிலும் அவர் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றபோது வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் சபையில் அதிருப்தி வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் டியூ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சகல கைதிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தான் சரத் பொன்சேகாவுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு எவரும் விசேட தன்மையில் நோக்கப்படுவதில்லை. சலுகைகள் வழங்கப்படுவதில்லை. கைதிகள் என்ற சமத்துவம் அங்குள்ள அனைவருக்கும் பொதுவானது. சரத் பொன்சேகா தொடர்பில் வைத்தியர்களின் ஆலோசனைகள் இருக்குமிடத்து அது குறித்து கவனத்தில் கொள்ளப்படும். மேலும் சரத் பொன்சேகா நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் உரிய பாதுகாப்பினை வழங்கியிருக்கின்றோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
காங்சேன்துறையில் இராணுவத்திற்காக சொகுசு சுற்றுலா விடுதி..!!
யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமான காங்சேன்துறையில் இராணுவத்திற்கு சொந்தமான மற்றும் அவர்களினால் நிர்வகிக்கப்படும் சொகுசு சுற்றுலா விடுதியொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தல்செவன ( பனைவீடு) என்ற இந்த சுற்றுலா விடுதியை இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய திங்கட்கிழமை திறந்து வைத்துள்ளார். பொதுமக்கள் பலர் இந்த பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, காங்சேன்துறை அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்திருந்தனர். இராணுவத்தினர் அனுமதிப்பதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தவிர மத்திய கல்லூரியை திறப்பதற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள விடுதியில் 9 சொகுசு அறைகள் காணப்படுவதுடன் 22 இடைநிலை சொகு அறைகளும் உள்ளன. இந்த அறைகள் மிகவும் குறைந்த விலையில் சுற்றுலாப் பயணிகக்கு வாடகைக்கு வழங்கப்படும் என பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. அப்பாவி தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இந்த சுற்றுலா விடுதியை நிர்மாணித்துள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலும் கூடாரங்களிலும் வசித்து வரும் நிலையில், இந்த மக்களுக்கான நிவாரண உதவிகளை பயன்படுத்தி இராணுவத்தினருக்கான கட்டுமாணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு விஷேட பாதுகாப்பு வழங்கவேண்டும்-எதிர்கட்சித் தலைவர்..!!
இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு விஷேட பாதுகாப்பு வழங்கவேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற நடாளுமன்ற அமர்வின்போது சிறப்புரிமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது எதிர் கட்சித் தலைவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகாவுக்கு பாதுகாப்பு குறைவாக காணப்படுவதால் அவருக்கு விஷேட பாதுகாப்பை வழங்க வேண்டும். இவர் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப் படும்போதும், வரும் போதும் பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே விஷேட பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் சபாநாயகர் உத்தரவினை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புலி இயக்க முக்கிய சந்தேகநபர்கள் எவருமே விடுதலை செய்யப்பட மாட்டார்கள்-பொலிஸ் தலைமையகம்..!!
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள புலி இயக்க முக்கிய சந்தேகநபர்கள் எவருமே விடுதலை செய்யப்பட மாட்டார்களென பொலிஸ் தலைமையகம் நேற்று அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் கவுன்ஸில் இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவதுது, நேற்று கூடிய தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான சாட்சியங்களுக்கேற்ப வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆதாரங்கள் உள்ள பயங்கரவாத சந்தேகநபர்கள் எவருமே விடுதலை செய்யப்படமாட்டார்கள். இதேவேளை, போதுமான சாட்சியங்கள் இல்லாத சந்தேக நபர்களை விடுதலை செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்திரா காந்தி விருது..!!
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு அகில இந்திய காங்கிரசின் ‘இந்திராகாந்தி தேசிய ஒருமை பாட்டு விருது’ கிடைத்துள்ளது.விருதினை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இம்மாதம் 31ம் தேதி நடக்கும் விழாவில் வழங்குகிறார். ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக சிறந்த சேவை செய்பவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில், ‘இந்திராகாந்தி தேசிய ஒருமை பாட்டு விருது வழங்கப்படுகிறது. 2009ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலம் நராயண்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்திற்கு கூட்டாக வழங்கப்படுகிறது. இந்திரா காந்தி நினைவு தினமான இம்மாதம் 31ம் தேதியன்று விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு ஏ.ஆர்.ரகுமானுக்கும், ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்துக்கும் விருதுகளை வழங்குகிறார். விருதுடன் ரொக்கப்பரிசு ணீ2.5 லட்சம் வழங்கப்படும். ஏற்கனவே இந்த விருதை முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம். சங்கர் தயாள் சர்மா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)