உத்தமபுத்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு அபூர்வமான வரவு இயக்குனர் மகேந்திரன். உதிரிப்பூக்கள் மகேந்திரன் என்றால் சட்டென்று புரியும். பொதுவாக எந்த விழாவுக்கும் வராதவர் இங்கு வந்த காரணமென்ன? இப்படத்தின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் மகேந்திரனின் சிஷ்யனாம்! 'இந்த ஒரு விஷயமே இந்த டைரக்டர் மேல எனக்கு தனி மரியாதையை ஏற்படுத்தியிருக்கு' என்றார் மற்றொரு கெஸ்ட்டான கே.எஸ்.ரவிகுமார். இரண்டு பாடல்களையும் ஒரு ட்ரெய்லரையும் திரையிட்டார்கள். திரையில் ஜேஜே என்று கூட்டம். இவ்வளவு நட்சத்திரங்களையும் எப்படிதான் கட்டி மேய்த்தாரோ என்று விழாவில் பேசிய அத்தனை பேரும் மித்ரனின் இயக்கம் குறித்து ஆச்சர்யம் தெரிவித்தார்கள். "நான் கூட ஏதோ கேரவேன் காரங்கள்ளாம் ஒண்ணு கூடி ஊர்வலம் நடத்துறாங்களோன்னு நினைச்சேன். அந்தளவுக்கு எல்லா கேரவேனையும் ஸ்பாட்ல இறக்கிட்டாரு தயாரிப்பாளர் அப்பாராவ்" என்றார் விவேக். "அந்த காலத்துல கிருஷ்ணாராவ், ராமாராவ், ரங்காராவ்னு நிறைய 'ராவ்'கள் சினிமாவுல முக்கியமான இடத்துல இருந்திருக்காங்க. நிச்சயம் இந்த அப்பாராவுக்கும் பெரிய இடம் இருக்கு" என்றார் விவேக். இந்த படத்தில் தனுஷ§க்கு மாமாவாக நடித்திருக்கிறாராம். அதுவும் ஓல்டு கெட்டப்பில்! "ஏற்கனவே படத்துல எழுபது எண்பது பேரு இருக்காங்க. எல்லாரும் காமெடி பண்ணியிருக்காங்க. இதுல நான் நடிச்சு எங்க வெளியில தெரியப்போறேன். அந்த கூட்டத்துல காணாம போயிருவேன். அதனால் இந்த படமே வேணாம்னு சொன்னேன். ஆனாலும் விடாம என்னை வற்புறுத்தி நடிக்க வச்சார் தனுஷ். இப்பதான் புரியுது. என் சினிமா கேரியரில் இந்த படம் ரொம்ப ரொம்ப முக்கியமான படமா இருக்கும்" என்றார். விவேக் சொன்னதை அப்படியே வழிமொழிந்த தனுஷ், "செகண்ட் ஆஃப்ல இந்த படத்தை தோளில் சுமக்கறதே விவேக்தான். தெலுங்கு ரெடி படத்தை பார்த்ததுமே அந்த கேரக்டரில் விவேக்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணினேன். அதனாலதான் பிடிவாதமா நடிக்கவும் வச்சேன். ஒப்புக்கொண்ட அவருக்கு நன்றி" என்றார் தனுஷ். படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி. "ஒரு ஹீரோவே இன்னொரு ஹீரோகிட்ட பாட்டுக்காக நின்னது நான்தான்னு நினைக்கிறேன். ஒரு பாடலை கம்போஸ் பண்ணி கொடுத்திட்டு நடிக்க போயிட்டாரு விஜய் ஆன்ட்டனி. அடுத்தடுத்த பாடல்களை வாங்குறது ரொம்ப சிரமமா போச்சு. பகலெல்லாம் நடிக்க போயிடுவாரு. நைட்டெல்லாம் கண்ணு முழிச்சி பாட்டு போட்டுக் கொடுப்பாரு. அவ்வளவு சிரமப்பட்டு போட்டு கொடுத்தாலும் அத்தனை பாடலும் ஹிட் ஆகிற அளவுக்கு நல்லாயிருக்கு" என்று லைட்டாக ஒரு 'நறுக்' கொடுத்து வாழ்த்தினார் தனுஷ். "இந்த படத்தின் தயாரிப்பாளர் மறுபடியும் எப்போ கால்ஷீட் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கேன்" என்று அந்த மேடையிலேயே தனுஷ் ஓப்பன் ஆஃபர் கொடுத்ததுதான் விசேஷத்திலும் விசேஷம்!
"உத்தம ஹீரோ!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக