பயனர்கள்.

ript>

வியாழன், 7 அக்டோபர், 2010

கண்டியில் கணவனை அச்சுறுத்தி மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு 20வருட சிறை..!!

கண்டி மத்திய கந்தயாய பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் பலவந்தமாகப் புகுந்து கணவனை அச்சுறுத்தி வெளியேற்றிவிட்டு அவரின் மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானதையிட்டு எதிராளிக்கு 20வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கண்டி மேல்நீதிமன்ற நீதிவான் பிரீத்தி பத்மன் சூரசேன தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,50,000 ரூபா நஷ்டஈடாகச் செலுத்தப்பட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மேலும் ஒருவருடம் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிவான் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஹேகுணகெதர விஜேசேன அல்லது வெடிக்காராயா எனும் 50வயது நபருக்கே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு ஜூன் மாதம் வல்லுறவுக் குற்றம் புரியப்பட்டுள்ளது. வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண்ணின் அப்போதைய வயது 25. அவருக்குத் திருமண மாகி ஆறுமாதங்களில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இப்பெண் நீதிமன்றில் சாட்சியமளித்தபோது, சம்பவதினமிரவு எதிராளி வீட்டுவாசலில் நின்று எனது கணவனின் பெயரைச் சொல்லி அழைத்தார். கதவைத் திறந்த கணவனைக் கத்தி முனையில் பயமுறுத்தி வெளியேற்றிய எதிராளி என்னுடன் பலாத்காரமாக உறவு கொண்டார் எனத் தெரிவித்துள்ளார். சாட்சியங்களின் அடிப்படையில் நீதிவான் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக