பயனர்கள்.

ript>

சனி, 2 அக்டோபர், 2010

கல்முனையைச் சேர்ந்த இளைஞனைக் காணவில்லை..!!

அம்பாறை மாவட்டம் கல்முனையைச் சேர்ந்த இளைஞனைக் காணவில்லையென கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கணாமல் போனவர் கல்முனைக்குடி ஸாஹிபு வீதியைச் சேர்ந்த 19வயதுடைய சுபைதீன் அப்ராஸ் என்பவராகும். கடந்த 20ம்திகதி திங்கட்கிழமை காணாமல்போனதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார். கல்முனை பொதுச்சந்தையில் அன்றைய தினம் மரவள்ளிக் கிழக்கு விற்பனை செய்ததாகவும் பகல் வேளையில் இவரைக் காணவில்லை எனவும் விற்பனை செய்த மிகுதிப் பொருட்களும் உபகரணங்களும் வியாபார ஸ்தலத்தில் இருந்ததாகவும் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 500க்கு அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டம்..!!

மாத்தறை ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 500க்கு அதிகமானவர்கள் 1ம் திகதி நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக நிருவாகத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் சங்க மாணவர்கள் ஐந்து பேருக்கெதிராக ரஜரட்ட பல்கலைக்கழக உபவேந்தரினால் விடுக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்கக் கோரியே ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா, ஓமந்தை பாடசாலையை ஒருமாத காலத்தினுள் கல்வி அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு பணிப்புரை..!!

வவுனியா ஓமந்தை பாடசாலையை ஒருமாத காலத்தினுள் கல்வி அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர பணிப்புரை விடுத்துள்ளார். அப்பிரதேச மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவாகவே இந்தப் பாடசாலையை ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஓமந்தை பாடசாலை மிகப்பெரிய பாடசாலையாகும். 30வருட யுத்தத்தின் விளைவாக இன்று அப்பாடசாலை சிறைச்சாலையாக மாறிவிட்டது. இதில் புலிகள் இயக்க முதலாம்தர பொறுப்பாளர்கள் கைதிகளாக உள்ளனர். ஆனால் இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் மரம் செடிகளுக்கு மத்தியில் காட்டை பாடசாலையாக்கி கல்வி பெறுகின்றனர். ஒரு மாதகால இடைவெளிக்குள் பாடசாலையின் கைதிகளை இடம்மாற்றி பாடசாலையை அப்பகுதி கல்வி அதிகாரியிடம் கையளிக்குமாறு சிறையின் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போதே அமைச்சர் டியூ குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் இருக்கமாட்டாது - வடமாகாண ஆளுநர்..!!

யாழ் வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பிரதேசம் இனி இருக்கமாட்டாது. அவ்வாறான பிரதேசம் அகற்றப்பட்டு அபிவிருத்திக்காக மக்களின் கைகளில் வழங்கப்படும். வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி இவ்வாறு தெரிவித்துள்ளார். வலி. மேற்கு பிரதேசத்தின் தரிசுநிலப் பயன்பாடு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கருத்துத் தெரிவிக்கையில், வலி. மேற்கு பிரதேசம் 25கிராம அலுவலர் பிரிவினை கொண்ட பரந்து விரிந்த பிரதேசம். இப்பிரதேசத்தில் உள்ள பயன்பாடு மற்றும் பயன்படாத நிலங்களின் விபரங்களை திரட்ட வேண்டும். பயன்படாத தரிசு நிலங்களில் எவ்வாறான அபிவிருத்திகளையும் உட்கட்டுமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளலாம் என பட்டியல்படுத்த வேண்டும். அதற்கான நிதி மூலாதாரங்களைத் தேடும் பணியைப் பொருளாதார அபிவிருத்தி நிபுணர் எந்திரி ஆர்.ரி.இராமச்சந்திரன் பொறுப்பில் விடப்படுகின்றது. தரிசுநில பயன்பாடு அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மட்டத்தில் விரைவில் துறைசார்ந்த அமைப்புக்களை திரட்டி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நியம நேரத்தை வர்த்தமானிமூலம் அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்..!!

நாடுமுழுவதும் ஒரே நேரத்தை அமுல்படுத்தும் வகையில் நியம நேரத்தை உத்தியோபூர்வமாக வர்த்தமானிமூலம் அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாடு முழுவதற்குமான பொதுவான நேரம், டிசம்பர் 31ம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அறிவிக்கப்பட்டு 2011முதல் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேறுபட்ட நேரங்கள் பயன்படுத்தப்படுவதால் அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. சில ஊடக நிறுவனங்களும் வேறுபட்ட நேரங்களையே பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. இதன்காரணமாக புதிய சரியான நேரத்தை அறிவிக்க அளவீட்டு மற்றும் தரச்சேவைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கிரீன்விச் நேரத்திற்கும் இலங்கை நேரத்திற்குமிடையே 5.30 மணிநேர வித்தியாசம் காணப்படுகிறது. இதனடிப்படையில் புதிய நேரம் கணிக்கப்படவுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையக வீடமைப்புத்திட்ட 02ம் கட்ட நிர்மாணம்..!!

மலையகப் பெருந்தோட்டங்களில் சுய முயற்சிக்கடன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வீமைப்புத்திட்டத்தின் 02ம் கட்ட நிர்மாணப் பணிகளைப் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களுக்குக் கடன் பெற்றுக்கொ டுத்து அவர்களின் சுய முயற்சியில் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 02 லட்சத்து 25ஆயிரம் ரூபா கடன் வழங்கும் இந்த வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நிறைவுசெய்ய அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்குமெனப் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷுடன் இணைந்து நடிக்க‌த் தயார் - சிம்பு

சிம்புவின் அடுத்தப் படம் வானம். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ‌ரீமேக். வேதத்தில் நடித்த அனுஷ்கா இதிலும் நடித்திருக்கிறார். இதுபற்றி கூறிய சிம்பு, நான் அனுஷ்காவின் ரசிகன், அவர் நடித்த அருந்ததியைப் பார்த்து அப்படியே அசந்துட்டேன் என்றார். அனுஷ்காவை பிடிக்கும் என்பதாலேயே வானத்தில் அவரை ஹீரோயினாக்கியிருக்கிறார். இவர்கள் தவிர வேகா, பரத், சோனியா அகர்வால், பிரகாஷ்ரா‌ஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். வேதத்தை இயக்கிய கி‌ரிஷ் வானத்தையும் இயக்கியுள்ளார். இசை யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனுடனான திருமணம் மற்றும் விவாகரத்துக்குப் பிறகு சோனியா அகர்வால் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.  பரத்துடன் நடித்தது பற்றி குறிப்பிட்ட சிம்பு, எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க‌த் தயார். தனுஷுடன் நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைசெய்ய சதி செய்ததாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூன்று விடுதலை..!!

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைசெய்ய சதி செய்ததாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூன்று தமிழர்களும் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.  சிவராசா சுபகிருஷ்ணன், தவராஜசிங்கம் சுபாஷ் மற்றும் லிங்டன் ஆகிய மூவரும் கடந்த வருடம் ஜூன் மாதம் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.  கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் ரஸ்மி சிங்கப்புலி நேற்று இவர்களை விடுதலை செய்தார். இக்குற்றத்தினை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் முன்னர் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய அமைச்சரும் முன்னாள் ஐதேக உறுப்பினருமான ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவின் பெயரையும் இரகசிய பொலிஸார் சந்தேக நபர்களின் பட்டியலில் முன்னர் உள்ளடக்கியிருந்தனர்.  பின்னர் அவரின் பெயரை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ___

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடரும் மழை..!!

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடரும் அடைமழை காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வெள்ள அபாயம் நிலவி வருகின்றது. களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் மல்வானை, பகுதிகளில் தாழ் பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளன. சில பாதைகளில் நீர் நிரம்பி உள்ளதால் சில பகுதிகளில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தொடரும் மழை காரணமாக மல்வானை கொழும்பு பிரதான வீதி நீரில் மூழ்குமென எதிர்பார்க்;கப் படுகின்றது. வெள்ள நீர்மட்டம் அதிகரித்துச் செல்வதையும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதையும் பிள்ளைகள் வெள்ளத்தில் குதூகளித்து மகிழ்வதையும் காணலாம். இதே வேளை சீரற்ற காலநிலை தொடர்வதால் தாழ் பிரதேசங்களில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 18 பாடசாலைகள் அபிவிருத்தி..!!

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 18 பாடசாலைகளை முழுமையாக புனரமைப்புச் செய்ய கல்வி அமைச்சின் அனுசரணையுடன் ஐரோப்பபிய ஒன்றியம் 130 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனம் இப் பாடசாலைகளை புனரமைப்புச் செய்யவுள்ளதாக யுனிசெப் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாடசாலை புனரமைப்புடன் 1000 மலசல கூடங்கள்,400 நீர் விநியோகிக்கும் நிலையங்கள்,259 கிணறுகள்,சிறிய குடிநீர்த் திட்டங்கள் என்பனவும் அமைக்கப்பபடவுள்ளன.
இத்;திட்டத்தின் ஆரம்ப வைபவம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முறுத்தானை கிராமத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று நடைபெற்றது. முறுத்தானை ஸ்ரீமுருகன் வித்தியாலய புனரமைப்பு பணிகளுக்கென இத்திட்டத்தின்கீழ் 2 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப வைபவத்தில் ஐரோப்பிய ஒன்றிய பிரதி; தலைமை அதிகாரி புளோரன்ஸி கம்பாரொடா யுனிசெப் அதிகாரிகள் ஒட்பட பலர் கலந்து கொண்டனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் இன்னமும் எஞ்சியுள்ள 22 ஆயிரம் பேரும் இவ்வருட இறுதிக்குள் மீள்குடியமர்வு - முரளிதரன்..!!

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் இன்னமும் எஞ்சியுள்ள 22 ஆயிரம் பேரும் இவ்வருட இறுதிக்குள் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணி பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. இப்பணி பூர்த்தியடைந்தமை பற்றி இராணுவத்தினர் தரப்பில் சான்று கிடைத்த பின்னர் எஞ்சியுள்ள 8600 குடும்பத்தினரும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவர்.  இதற்கான வேலைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் 47 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர். இவர்களில் 258 ஆயிரம் பேர் இதுவரை மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை அமைச்சு வழங்கியுள்ளது" என்றார்.