பயனர்கள்.

ript>

சனி, 2 அக்டோபர், 2010

வவுனியா, ஓமந்தை பாடசாலையை ஒருமாத காலத்தினுள் கல்வி அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு பணிப்புரை..!!

வவுனியா ஓமந்தை பாடசாலையை ஒருமாத காலத்தினுள் கல்வி அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர பணிப்புரை விடுத்துள்ளார். அப்பிரதேச மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவாகவே இந்தப் பாடசாலையை ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஓமந்தை பாடசாலை மிகப்பெரிய பாடசாலையாகும். 30வருட யுத்தத்தின் விளைவாக இன்று அப்பாடசாலை சிறைச்சாலையாக மாறிவிட்டது. இதில் புலிகள் இயக்க முதலாம்தர பொறுப்பாளர்கள் கைதிகளாக உள்ளனர். ஆனால் இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் மரம் செடிகளுக்கு மத்தியில் காட்டை பாடசாலையாக்கி கல்வி பெறுகின்றனர். ஒரு மாதகால இடைவெளிக்குள் பாடசாலையின் கைதிகளை இடம்மாற்றி பாடசாலையை அப்பகுதி கல்வி அதிகாரியிடம் கையளிக்குமாறு சிறையின் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போதே அமைச்சர் டியூ குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக