பயனர்கள்.

ript>

செவ்வாய், 19 அக்டோபர், 2010

பிரபுதேவா - நயன்தாராவுக்கு மீண்டும் சம்மன்..!!

பிரபு தேவா மீது சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் மாதம் 19ந் தேதி நேரில் பிரபு தேவா, நயன்தாரா இருவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ரம்லத் தொடர்ந்துள்ள இரு வழக்குகளிலும் ஆஜராகி நேரில் விளக்கமளிக்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் நேற்று பிரபுதேவா மற்றும் நாயன்தாராவுக்கு தரப்பட்டது. ஆனால் இருவருமே இன்று ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நடிகர் சங்கம் மூலமாகவும் நயன்தாராவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு வருகிற நவம்பர் 23 ந்தேதிக்கு

காத்தான்குடி மாவிலங்கத்துறை வாவியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த முதலை பிடிப்பு..!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை வாவியில் இருந்துகொண்டு பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தொந்தரவு கொடுத்துவந்த மற்றொரு முதலையை பிரதேச வாசிகள் ஒன்றிணைந்து பிடித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று மதியம் இம் முதலை பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இதே மாதிரியானதொரு முதலையை காத்தான்குடி வாவியில் பொதுமக்கள் பிடித்து அடித்துக் கொன்றனர். இம்முதலை மீனவரான 60 வயதுடைய தம்பிலெப்பையை கடித்து குதறி படுகொலை செய்ததுடன் அதிகளவிலான கால் நடைகளையும் கடித்து நாசமாக்கியமை குறிப்பிடத்தக்கது.

கோவா திரைப்பட விழாவில் அங்காடித் தெரு, ராவணன்..!!

கோவாவில் அடுத்த மாதம் 22-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வசந்த பாலனின் அங்காடித் தெரு, மணிரத்னம் இயக்கிய ராவணன் ஆகிய 2 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன. இந்த விழாவில் கலந்து கொண்ட 140 திரைப்படங்களை பார்த்து, அதில் 26 இந்திய மொழி திரைப்படங்களை என்.சந்திரா தலைமையிலான 10 உறுப்பினர்கள் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளனர். இதில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ராவணன், இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன. ஆத்ம கதா என்ற மலையாளப் படமும் தேர்வாகியுள்ளது.

நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டம்..!!

நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இலங்கைக்கு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செப்டம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வந்திருந்த நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் அடுத்த வருட முற்பகுதியில் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் நோர்வேயின் விசேட சமாதான தூதுவராக செயற்பட்ட சொல்ஹெயிமின் இந்த விஜயமே, யுத்தம் முடிவடைந்தன் பின் இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக அமையும்.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலிஸார் 40பேர் அடங்கிய விசேடகுழு சோதனை..!!

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலிஸார் 40பேர் அடங்கிய விசேடகுழு நேற்று முன்தினம் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நடத்திய திடீர் சோதனையின்போது 53 கையடக்க தொலைபேசிகள், பற்றரிகள், சார் ஜர்கள் மற்றும் கஞ்சா சுருட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இந்த விசேட குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகள் 15பேருடன் இணைந்து இந்த திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு மாளிகாகந்தை நீதிவான் நீதி மன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்றே பொலிஸார் இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவுக்குள் நேற்றுபிற்பகல் 2.30மணியளவில் திடீரென நுழைந்த விசேட குழுவினர் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது தடுத்து வைக்கப்பட்டிருந்த 464 பெண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த திடீர் சோதனையின்போது 44 கஞ்சா சுருட்டுகள், 53 கையடக்கத் தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிக்கு பயன்படுத்தப் படும் 100 பற்றரிகள், 66 சார்ஜர்கள், 12 சிம் கார்ட்கள், 5 மல்டி பிளக் மற்றும் தண்ணீர் சூடாக்கப் பயன்படுத்தப்படும் ஹீட்டர்கள் என்பவற்றை மீட்டெடுத்துள்ளனர். மேற்படி பொருட்கள் சிறைச்சாலைக்குள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரி வினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிவரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் தொகை அதிகரிப்பு..!!

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிவரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் தொகை அதிகரித்துவருவதை கருத்திற்கொண்டு அவர்களைத் தங்கவைப்பதற்கு புதிய தடுப்பு நிலையங்களை நிர்மாணிக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்பிரகாரம் பேர்த் மற்றும் அடெலெயிட் நகர்களில் இரு புதிய தடுப்புநிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த தடுப்பு நிலையங்களில் 2000பேரை தங்கவைக்க முடியுமெனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பமாக காணப்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுப்புநிலையத்திலிருந்து சமூக அடிப்படையிலான தங்குமிடத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறுவர்களை கம்பிகளுக்கு பின்னால் தடுத்து வைப்பது அவுஸ்திரேலிய வழிமுறை அல்ல என பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். புகலிடம் கோருபவர்களின் பிரச்சினையானது அண்மைய அவுஸ்திரேலிய தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது முக்கிய அம்சமாக விளங்கியது. உரிய ஆவணங்களை வைத்திராத அனைத்து குடியேற்ற வாசிகளையும் அவர்களது புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் செயற்கிரமத்தின் போது தடுத்து வைக்கும் அவுஸ்திரேலியாவின் கொள்கை ஐக்கிய நாடுகள் சபையின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. புகலிடம் கோருபவர்களது பிரச்சினை தொடர்பான மனிதாபிமான அணுகுமுறையின் ஒரு அங்கமாக சிறுவர்களைக் கொண்ட குடும்பங்கள் சமூக அடிப்படையிலான தங்குமிடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறியுள்ளார். சிறுவர்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனடிப்படையில் எதிர்வரும் வருட மத்தியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சமூக அடிப்படையிலான தங்குமிடங்களுக்கு மாற்றப்படவுள்ளதாக ஜூலியா கில்லார்ட் கூறியுள்ளார். இது தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் விபரிக்கையில்,அவுஸ்திரேலியா உலகிலேயே மிகவும் கடுமையான புகலிடக் கொள்கைகளிலொன்றை பேண வேண்டிய கட்டாயத்திலுள்ள அதேசமயம் புகலிடம் கோருபவர்களுக்கு வசதியளிப்பதில் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். புதிய நடைமுறையின் மூலம் சிறுவர்களுக்கு பாடசாலை சென்று இயல்பு வாழ்க்கையை வாழ்வது சாத்தியமாகும் என அவர் கூறியுள்ளார். அதேசமயம் புகலிடம் கோருபவர்களுக்கான பிராந்திய நிலையமொன்றை நிர்மாணிக்க கிழக்கு தீமோர் மற்றும் இந்தோனேஷியாவுடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

ஆட்களை வெளிநாடு அனுப்பாத வெளிநாட்டு முகவர் நிலையங்களின் அனுமதிப் பத்திரங்கள் ரத்து..!!

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை அனுப்பாத வெளிநாட்டு முகவர் நிலையங்களின் அனுமதிப் பத்திரங்கள் ரத்துச் செய்யப்படவிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்தகைய முகவர் நிலையங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சில வெளிநாட்டு முகவர் நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளபோதும் அவை எவரையும் வேலைவாய்ப்புக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது. அவ்வாறு உறுதிசெய்யப்படும் முகவர் நிலையங்களை தடைசெய்யும் நடவடிக்கை அடுத்தவருடம் முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. சில முகவர் நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளபோதும் வேறு முகவர் நிலையங்களினூடாக ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இமயமலையிலிருந்து சென்னை திரும்பினார் - சூப்பர் ஸ்டார்..!!

தனது படங்கள் ரிலீஸ் ஆன பிறகு இமயமலை செல்வது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வழக்கம், ‘எந்திரன்’ படத்தின் மெகா ஹிட்டுக்குப் பிறகு, தனது நண்பர்களுடன் இமயமலை சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சில நபட்கள் தங்கயிருந்த ரஜினி அங்குள்ள பாபா குகையில், தியானம் செய்தார். இமயமலையில் ஒரு சாதாரண ஆட்களை போல தன் நண்பர்களுடன் தியானம் செய்துவிட்டு சனிக்கிழமை அன்று சென்னை திரும்பினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் இரத்து..!!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கைக்கு இம்மாத இறுதிப் பகுதியில் மேற்கொள்ளவிருந்த உத்தியோகபூர்வ விஜயம் அடுத்தமாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா அடுத்தமாதம் 25முதல் 28ம் திகதிகளுக்கு இடையில் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என்று வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன. இம்மாதம் 28, 29ம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். எனினும், தற்போது இந்த ஏற்பாடுகளில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரிட்டன் சென்றுள்ளார். பிரிட்டன் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக்கின் அழைப்பையேற்றே பீரிஸ் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்போது ஜீ.எல்.பீரிஸ் பிரிட்டனின் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக் உள்ளிட்ட பலரரையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் பிரிட்டனுக்கான விஜயத்தின்போது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மாவையும் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

வலது குறைந்தவர்கள் பயன்படுத்தக் கூடியவாறு வடபகுதிக்கான ரயில் நிலையங்களை நிர்மாணிக்க தீர்மானம்..!!

வலது குறைந்தவர்கள் பயன்படுத்தக் கூடியவாறு வடபகுதிக்கான ரயில் நிலையங்களை நிர்மாணிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அப் பகுதியில் ஆய்வொன்று நடத்தப்பட்டதாக ரயில்வே திணைக்கள வணிக அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறியுள்ளார். இது தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் வட பகுதிக்குச் சென்று ஆராய்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பளையில் இருந்து காங்கேசன்துறை வரை அமைக்கப்படும் ரயில் நிலையங்களிலும் மதவாச்சியிலிருந்து தலைமன்னார்வரை அமைக்கப்படும் ரயில்நிலையங்களிலும் வலது குறைந்தவர்களுக்கென விசேட வசதிகள் செய்யப்படவுள்ளன. இவர்களுக்கென தனியான மலசல கூடங்களும் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதன்படி வலது குறைந்தவர்களுக்கு மற்றவரின் உதவியுமின்றி சுதந்திரமாக ரயில் நிலையங்களில் நடமாடமுடியும் என அறிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தென்பகுதியிலும் இத்தகைய வசதிகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 29ம்திகதி முதல் நவம்பர் 11ம் திகதிவரை டில்லியில் சில்ப சியலங்கா கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை..!

புதுடில்லி நகரத்தில் இம்மாதம் 29ம்திகதி முதல் நவம்பர் 11ம் திகதிவரை சில்ப சியலங்கா கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை நடைபெறவுள்ளன. இந்தியாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், இந்திய கைப்பணிப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம் மற்றும் இலங்கை உல்லாசத்துறை மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் தேசிய அருங்கலைகள் பேரவை இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையை ஏற்பாடு செய்துள்ளது. புதுடில்லி (டில்லி ஹாட்) கைப்பணிப் பொருட்கள் விற்பனை மத்திய நிலையத்தில் நடைபெறுகின்ற இக்கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையில் இலங்கையின் பல்வேறு துறைசார்ந்த கைப்பணிப் பொருள் உற்பத்தி கலைஞர்கள் 11பேர் கலந்து கொள்கின்றனர். கலைஞர்களை வழியனுப்பி வைக்கும் முகமாக நேற்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கொழும்பு அமைச்சு அலுவலகத்தில் விசேட வைபவம் ஒன்று நடைபெற்றது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில்: பாரம்பரிய கலாசார விழுமியங்களை பிரதி பலிக்கும் கைப்பணிப் பொருட்களின் ஊடாக இரு நாடுகளினதும் உறவுப் பாலத்தை நாம் வளமுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இச்சந்தர்ப்பத்தை மிகவும் சரியாகப் பயன்படுத்தி கலைஞர்கள் மேம்பாடு அடையவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ் ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசவிருப்பதாக அமைச்சர் மில்றோய் தெரிவிப்பு..!!

யாழ் ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து பேசவிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ நேற்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் சந்தித்து பேசிய பின்னர் இக்குடும்பத்தினர் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இக்குடும்பங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பூர்வீக பிரதேசமான யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியமர்த்துமாறு கோரி சுமார் 150குடும்பங்களைச் சேர்ந்த சிங்களமக்கள் யாழ். ரயில்வே நிலையத்தில் தங்கியுள்ளனர். இவர்களை சந்தித்து உரையாடுவதற்காக அமைச்சர் மில்ரோய் நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இதன்போது அம்மக்கள் அமைச்சரிடம் தமது பெற்றோர் இங்கே காலங்காலமாக வியாபாரம் செய்து வந்ததாகவும் 1970களில் பிரதமராகவிருந்த சிறிமாவோ பண்டார நாயக்கவினால் இவர்களுள் சிலருக்கு சொந்தமாக காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தமது பழைய காணிகளை மீளப்பெற்றுக் கொடுக்கும்படியும் இல்லையேல் அதற்கு பதிலாக புதிதாக காணிகளைப் பெற்றுத்தருமாறும் அவர்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது விடயமாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக இவர்களுக்கு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.