பயனர்கள்.
ript>
செவ்வாய், 19 அக்டோபர், 2010
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலிஸார் 40பேர் அடங்கிய விசேடகுழு சோதனை..!!
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலிஸார் 40பேர் அடங்கிய விசேடகுழு நேற்று முன்தினம் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நடத்திய திடீர் சோதனையின்போது 53 கையடக்க தொலைபேசிகள், பற்றரிகள், சார் ஜர்கள் மற்றும் கஞ்சா சுருட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இந்த விசேட குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகள் 15பேருடன் இணைந்து இந்த திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு மாளிகாகந்தை நீதிவான் நீதி மன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்றே பொலிஸார் இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவுக்குள் நேற்றுபிற்பகல் 2.30மணியளவில் திடீரென நுழைந்த விசேட குழுவினர் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது தடுத்து வைக்கப்பட்டிருந்த 464 பெண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த திடீர் சோதனையின்போது 44 கஞ்சா சுருட்டுகள், 53 கையடக்கத் தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிக்கு பயன்படுத்தப் படும் 100 பற்றரிகள், 66 சார்ஜர்கள், 12 சிம் கார்ட்கள், 5 மல்டி பிளக் மற்றும் தண்ணீர் சூடாக்கப் பயன்படுத்தப்படும் ஹீட்டர்கள் என்பவற்றை மீட்டெடுத்துள்ளனர். மேற்படி பொருட்கள் சிறைச்சாலைக்குள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரி வினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக