பயனர்கள்.
ript>
வியாழன், 7 அக்டோபர், 2010
காங்சேன்துறையில் இராணுவத்திற்காக சொகுசு சுற்றுலா விடுதி..!!
யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமான காங்சேன்துறையில் இராணுவத்திற்கு சொந்தமான மற்றும் அவர்களினால் நிர்வகிக்கப்படும் சொகுசு சுற்றுலா விடுதியொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தல்செவன ( பனைவீடு) என்ற இந்த சுற்றுலா விடுதியை இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய திங்கட்கிழமை திறந்து வைத்துள்ளார். பொதுமக்கள் பலர் இந்த பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, காங்சேன்துறை அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்திருந்தனர். இராணுவத்தினர் அனுமதிப்பதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தவிர மத்திய கல்லூரியை திறப்பதற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள விடுதியில் 9 சொகுசு அறைகள் காணப்படுவதுடன் 22 இடைநிலை சொகு அறைகளும் உள்ளன. இந்த அறைகள் மிகவும் குறைந்த விலையில் சுற்றுலாப் பயணிகக்கு வாடகைக்கு வழங்கப்படும் என பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. அப்பாவி தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இந்த சுற்றுலா விடுதியை நிர்மாணித்துள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலும் கூடாரங்களிலும் வசித்து வரும் நிலையில், இந்த மக்களுக்கான நிவாரண உதவிகளை பயன்படுத்தி இராணுவத்தினருக்கான கட்டுமாணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக