பயனர்கள்.

ript>

திங்கள், 25 அக்டோபர், 2010

படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த தீவின் இரு பிரதேசங்கள், பிரதான வீதிகள் மக்கள் பாவனைக்கு அனுமதி..!!

தீவகப்பகுதியில் நீண்ட காலமாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு பிரதேசங்கள் அவற்றுக்கான பிரதான வீதிகள் என்பன மக்கள் பாவனைக்கு நேற்று அனுமதிக்கப்பட்டன. வேலணை வங்களாவடி தொடக்கம் வேலணை மத்தியகல்லூரி வரையான பிரதேசம் படையினரது பாவனையிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் வேலணை ஊர்காவற்றுறை பிரதான வீதியும் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. அத்துடன் மண்டைதீவு மத்திய பிரதேசமும் விடுவிக்கப்பட்டு மண்டைதீவு பிரதான வீதியும் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த வீதிகளுக்கான 778ம், 781ம் இலக்க பஸ் சேவைகளும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சரும் ஆளுநரும் இவ்விரு பிரதேசங்களையும் கையேற்று வீதிகளைத் திறந்தும் பஸ்சேவைகளை ஆரம்பித்தும் வைத்தனர். நடைபெற்ற நிகழ்வில் கருத்துத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று ஒரு இனியநாள் உங்களது நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக