பயனர்கள்.

ript>

திங்கள், 11 அக்டோபர், 2010

குடும்பம் நடத்தும் 'சிறுவர் தம்பதியர்' - 300 பேரைத் தேடி வேட்டை..!!

மகியங்கனை ரிதிமாலியத்தை பகுதியில் 300 சிறுவர் தம்பதியர் விவாகப் பதிவு செய்திருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் திருமதி. அனோமா திசாநாயக்க சற்றுமுன்னர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.  இவர்கள் தொடர்பான விசாரணைகளை மகியங்கனை பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய தேடுதலின்போது 15 வயதுக்குக் குறைவான இரண்டு தம்பதிகள் சட்டவிரோதமாக திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருமதி திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக திருமணம் செய்துவைத்த திருமணப் பதிவாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பாக பிரத்தியேக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறு வயது குறைந்தவர்களுக்கு விவாகப் பதிவு செய்துவைத்த 20 பதிவாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக