பயனர்கள்.

ript>

திங்கள், 11 அக்டோபர், 2010

யாழ். குடாநாட்டில் முன்னர் வசித்த சிங்களக் குடும்பங்கள், அங்கு மீளக்குடியேற அரசாங்கம் சகல உதவி, ஒத்தாசைகளையும் வழங்க வேண்டும்-திஸ்ஸ அத்தநாயக்க..!!

யாழ். குடாநாட்டில் முன்னர் வசித்த சிங்களக் குடும்பங்கள், அங்கு மீளக்குடியேற அரசாங்கம் சகல உதவி, ஒத்தாசைகளையும் வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பது அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்த சிங்கள முஸ்லிம் மக்கள் தமது காணிகள், சொத்துக்களை கைவிட்டு தென்பகுதிக்கு வந்தனர். 28 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வடக்கில் தமது சொந்தக் காணிகளில் குடியேறவென யாழ்ப்பாணம் சென்ற 150 குடும்பங்களைச் சேர்ந்த 300பேர் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. தமது சொத்துகள், காணிகளின் உரிமையை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களுடன் சென்றுள்ள இவர்களுக்கு, அரச அதிகாரிகளிடமிருந்தோ அரச தரப்பிடமிருந்தோ எதுவித உதவியும் கிடைக்காமல் அவர்கள் அகதிகளைப் போல் யாழ். ரயில்நிலையத்தில் தங்கியுள்ளனர். மூன்று தசாப்தகாலமாக இனங்களுக்கிடையே காணப்பட்ட குரோதத்தைக் குறைத்து புரிந்துணர்வை ஏற்படுத்தி இணைந்து வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவது அரசின் பொறுப்பாகும். எனவே, தமது தேவைகளைப் பூர்த்தி செய்து இவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் குறித்து மீள்குடியமர்வு அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், வடக்கிலிருந்து ஏற்கனவே இடம்பெயர்ந்த சிங்கள மக்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அங்கு மீளக்குடியமர்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீள்குடிய மர்வு அமைச்சு அல்லது வடமாகாண ஆளுநரிடம் தகுந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். அவற்றை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்கள் வடக்கில் மீளக்குடியேற பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும். மன்னார் மாவட்டத்தில் ஏற்கனவே இடம்பெயர்ந்திருந்த 80 சிங்களக் குடும்பங்கள் தகுந்த ஆதாரங்களுடன் மீண்டும் தற்போது அங்கு மீளக்குடியேறியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக