பயனர்கள்.
ript>
வெள்ளி, 15 அக்டோபர், 2010
காத்தான்குடி வாவியில் முதலைகள் கிடக்கும் பகுதியினை அடையாளப்படுத்த நடவடிக்கை..!!
மட்டக்களப்பு, காத்தான்குடி வாவியில் முதலைகள் கிடக்கும் பகுதியினை அடையாளப்படுத்தி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லாதவாறு விளம்பர பலகைள் இடுவதற்கு தீர்மானித்துள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்துள்ளார். காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் முஸம்பில் தெரிவித்துள்ளார். இவ்வாவியின் ஒரங்களில் மின்குமிள்கள்களை இடுவதென்றும் முதளைகளினால் மீனவர்களுக்கும் அதை அண்டி வாழும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக வன பரிபாலன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையினை எடுப்பதெனவும் இக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் அகமதுலெவ்வை, மற்றும் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜாபீர், அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட பதில் இணைப்பாளர் கசீர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் இஸ்மாயில் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் பொலிஸார் விஷேட அதிரடிப்படையினர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக