பயனர்கள்.

ript>

வெள்ளி, 15 அக்டோபர், 2010

கொழும்பு நகரில் அடிப்படை வசதிகளின்றி குடிசைகளில் வாழும் மக்களுக்கு வீட்டுவசதி..!!

கொழும்பு நகரில் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி குடிசைகளில் வாழும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய சூழலில் வீட்டுவசதி அளிக்கப்படும். கொழும்பு நகரை தூய்மையான அழகிய நகரமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். கொழும்பிலுள்ள குடிசை வீடுகளை அகற்றுவதில் எதுவித அரசியல் நோக்கமும் கிடையாது என அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்றுத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சுமார் 65ஆயிரம் குடிசை வீடுகளை அகற்ற நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கூறியதாவது, அரசாங்க காணிகளில் சட்டவிரோதமாக குடியிருக்கும் மக்களை அரசாங்கம் வெளியேற்றப்போவதாக எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் முன்னெடுக்கின்றன. சுகாதாரமற்ற பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் வசதிகளுடன் கூடிய பொருத்தமான பகுதிகளில் குடியமர்த்தவே திட்டமிட்டுள்ளோம். அவர்களை எங்கு குடியேற்றுவது என்பது குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபையே தீர்மானிக்கும். இவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது. ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக கொழும்பு நகரம் மேலும் அழகுபடுத்தப்படும். கொழும்பு மாநகர சபையை ஐ.தே.க. நீண்டகாலம் ஆட்சிபுரிந்தபோதும் குடிசை மக்களின் நலனுக்காக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கொழும்பு நகரில் ஐ.தே.கட்சிக்குள்ள பலத்தை குறைக்க மக்கள் அகற்றப்பட இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ஐ.தே.க.வுக்கு எதுவித அதிகாரமும் இன்று இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக