பயனர்கள்.

ript>

வெள்ளி, 15 அக்டோபர், 2010

இலங்கை பூராகவும் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மத ஸ்தாபனங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை..!!

இலங்கை பூராகவும் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மத ஸ்தாபனங்களை அபிவிருத்தி செய்து ஆன்மீக வளர்ச்சிக்கான செயற்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் நேற்று அம்பாறை மாவட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள விஹாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோயில்களுக்கு பிரதமர் டீ. எம். ஜயரத்னவுடனான குழுவினர் நேரடியாகச் சென்று அவற்றின் அபிவிருத்தி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான செயற்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தனர். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் அஷ்ஷேக் வை. எல். எம். நவவி தலைமையில் இடம்பெற்ற வைபவம் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமர் டீ.எம். ஜயரத்ன கலந்து கொண்டிருந்தார். அமைச்சர் பீ. தயாரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வர், பிரதி அமைச்சர் எம்.கே டீ.எஸ். குணவர்த்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல் திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் பிரதமரும், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான டீ. எம். ஜயரத்னவினால் வழங்கப்பட்டன. அக்கரைப்பற்று நகர ஜும்ஆப் பள்ளிவாசல், சம்பாந்துறை மஸ்ஜிதுன் நூறாணியா பள்ளிவாசல் வாங்காமம ஜும்ஆப் பள்ளிவாசல் போன்றவற்றுக்கு இந்நிதியுதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் டீ. எம். ஜயரத்ன குறிப்பிடுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் தற்போது நிரந்தரமானதோர் சமாதானச் சூழல் நிலவுகின்றது. இந்த சூழ்நிலையில் மதஸ்தாபனங்கள் கௌரவத்துடன் மதிக்கப்படுகின்றன. இம்மத ஸ்தாபனங்கள் தற்போது துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மதஸ்தாபனங்கள் மிக விரைவில் விருத்தி செய்யப்படவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக