பயனர்கள்.

ript>

வெள்ளி, 1 அக்டோபர், 2010

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென கருதப்பட்ட தமிழ்க் குடும்பமொன்றை அவுஸ்திரேலிய பாதுகாப்பு..!!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென கருதப்பட்ட தமிழ்க் குடும்பமொன்றை அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பினர் சிட்னியிலுள்ள தடுப்பு நிலையமொன்றில் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். தமது பிள்ளைகளுடன் இலங்கைத் தமிழ்க் குடும்பமொன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக த அவுஸ்திரேலியன் பத்திரிகை நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு நிலையத்திலிருந்து இரு மாதங்களுக்கு முன்னர் இந்தத் தமிழ்க்குடும்பம் சிட்னியிலுள்ள வில்லாவூட் தடுப்புநிலையத்திற்கு இடமாற்றப்பட்டிருந்தது. 6 வயது 3 வயதுடைய இரு மகன்மாருடன் இரகசியமான முறையில் இக்குடும்பம் இடமாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சிட்னியில் பெயார்ப்பீல்ட் மருத்துவமனையில் இக்குடும்பத்தின் தாய் மூன்றாவது பிள்ளையை கடந்த சனிக்கிழமை பிரசவித்துள்ளார். தடுப்பு நிலையத்தில் அதிகளவு பாதுகாப்புடன் இக்குடும்பம் வைக்கப்பட்டிருப்பதுடன் வெளி உலகுடன் தொடர்புகொள்ள முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. ஒசனிக் வைக்கிங் கப்பலிலிருந்த 78 இலங்கை அகதிகளில் இந்தத் தாயும் ஒருவராகும். இந்தத்தாய் புலிகளின் உறுப்பினராக இருந்தவர் என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டதாகவும் வட,கிழக்கு நீதிமன்ற முறைமையில் அவர் பணியாற்றியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்ணின் கணவர் கடந்த வருடம் நடுப்பகுதியில் கிறிஸ்மஸ்தீவுக்கு படகில் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக