பயனர்கள்.

ript>

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

உலகத்திலேயே மாபெரும் தேநீர் கோப்பையைத் தயாரித்து இலங்கை உலக சாதனை..!!

உலகத்திலேயே மாபெரும் தேநீர் கோப்பையைத் தயாரித்தமைக்கான கின்னஸ் உலக சாதனையை இலங்கை படைத்துள்ளது. கிளாக்ஸோஸ்மித்க்லைன் நிறுவனத்தால் வீவாவின் பிரதான தொனிப்பொருள் பிரச்சார நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த சாதனை நிகழ்வு ஆரம்பம்முதல் இறுதிவரை லண்டனைச் சேர்நத கின்னஸ் பிரதிநிதியால் கண்காணிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டமைக்கான உறுதிப்படுத்தல் சான்றில் இலங்கை கிளாக்ஸோஸ்மித்க்லைன் நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவுத் தலைவரும் இயக்குனருமான திரு. சச்சி தோமஸிடம் கையளிக்கப்பட்டது. இதற்கு முன் 2009ம்ஆண்டு செப்டம்பர்மாதம் 26ம்திகதி அமெரிக்கா, கன்ஸாஸ், போர்ட் ஸ்கொட் சுகாதார நிலையத்தினால் மாவெரும் தேநீர் கோப்பைக்கான சாதனை படைக்கப்பட்டிருந்தது. இந்த கோப்பையானது 3000லீற்றர் அதாவது 660 கெலன் தேநீரைக கொண்டது. எனினும் வீவாவினால் படைக்கப்பட்ட இந்த சாதனையானது 1000 கெலன்களைக் கொண்ட மாபெரும் சாதனையாகும். கிளாக்ஸோஸ்மித்க்லைன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களினதும், நூற்றுக்கணக்கான மக்களினதும் கரகோஷத்தின் மத்தியில் இந்த உலகசாதனை இன்றுகாலை 10.30 மணியளவில் படைக்கப்பட்டது. இந்த கோப்பை 10உயரமும், 8 அடி அகலமும் கொண்டது. 2000 வோல்ட்டேஜ் கொண்ட 6ஹீட்டர்களினால் தேநீர் சூடுபடுத்தப்பட்டது. தேநீரைச் சூடாக வைத்திருக்க மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் பயண்படுத்தப்பட்டன. இந்த அரிய உலகசாதனை நிகழ்ச்சியில் வீவாவின் தூதுவரான இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார் சங்கார, மற்றும் இலங்கை ஜனாதிபதியின் மகனான ஜோசித ராஜபக்ஷ, மற்றும் கலைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த கோப்பை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் மத்தியில் பார்வைக்கு விடப்பட்டது. இந்நிகழ்வு இடம்பெறுவதற்கு 3 தினங்களுக்கு முன்னரே இது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான திட்டமிடல்கள் 2 மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இலங்கை தமிழ் மக்களின் நிலை பற்றி தமிழக முதல்வர் மு.கருணாநிதி காங்கிரஸ் தலைவி கலந்துரையாடல்- இலங்கையின் வடக்கிலுள்ள முகாம் மக்களின் அவதி தொடர்பில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி இன்று காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியை சந்தித்தபோது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். அத்துடன் தமிழக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பிலான மனுவொன்றையும் தமிழக முதல்வர் இன்று சென்னையில் வைத்து சோனியாகாந்தியிடம் கையளித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான செயன்முறையை விரைவில் ஆரம்பிக்க அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமென்றும் தமிழக முதல்வர் சோனியா காந்தியிடம் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக