பயனர்கள்.
ript>
சனி, 9 அக்டோபர், 2010
காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கான வேலைகள் இந்தமாதம் ஆரம்பமாகும்- இந்திய உயர்ஸ்தானிகர்..!!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பமாகும் என இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்த் கூறியுள்ளார். யாழ். மாநகர சபையில் இலங்கை - இந்திய நட்புறவுச் சங்கத்தால் வழங்கப்பட்ட பஸ் வண்டிகளின் திறப்புகளை யாழ். நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். சண்முகலிங்கன், வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பொன்னம்பலம், யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் கு. பற்குணராஜா ஆகியோரிடம் இந்தியத் தூதுவர் அசோக்காந்த் நேற்று வெள்ளிக்கிழமை கையளித்தார். அசோக்காந்த் மேலும் பேசும்போது கூறியதாவது:- மக்களின் போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்கக் கூடியதான உதவிகளை இந்தப் பிரதேசத்திற்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மன்னார், மடு, தலைமன்னார் பகுதிகளுக்கான புகையிரத வீதிகளையும் எமது அரசு அமைத்துக் கொடுக்கவுள்ளது. இலங்கை - இந்திய நட்புறவின் சின்னமாக இங்கே பல்வேறு உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதார உதவியாக அவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் இந்திய அரசு உதவி வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக