பயனர்கள்.

ript>

சனி, 9 அக்டோபர், 2010

மேலும் 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1500 சிங்கள மக்கள் இன்று யாழ்ப்பாணம் வர ஏற்பாடு..!!

மீளக்குடியேறும் நோக்கத்தோடு 180 சிங்களக் குடும்பங்கள் ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்துள்ள நிலையில் மேலும் 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1500 சிங்கள மக்கள் இன்று யாழ்ப்பாணம் வருகின்றனர். மாலைக்குள் அவர்கள் அனைவரும் யாழ். நகரை வந்தடைவார்கள் என்று ரயில் நிலையத்தில் முகாமிட்டுள்ள சிங்கள மக்கள் கூறுகின்றனர். ரயில் நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கு முழுப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் உட்பட யார் சென்றாலும் விவரங்கள் பதியப்பட்ட பின்னரே அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. அனுராதபுரம், மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் இருந்து இன்றுமாலைக்குள் 500சிங்களக் குடும்பங்கள் வந்துசேர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதென அங்கு குடியேறும் நோக்கில் வந்து யாழ். நிலையத்தில் தங்கியுள்ளவர்களில் ஒருவரான சந்திரசிறி தெரிவித்துள்ளார். மூன்று நாள்களின் முன்னர் யாழ்ப்பாணம் வந்த இவருடன் 180 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் வந்துள்ளனர். இவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடங்கள் எவையும் இல்லாத போதும், தமக்கு அரச காணிகளை ஒதுக்கித் தருமாறு அரசஅதிபரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மேலும் 500 சிங்களக் குடும்பங்கள் மீளக்குடியேறும் நோக்கத்தோடு யாழ்ப்பாணம் வரவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, மீளக்குடியமரும் நோக்கத்துடன் யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு யாழ். செயலகத்தில் உள்ள உரிய அதிகாரிகளுக்கு மேலிட உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக