பயனர்கள்.
ript>
செவ்வாய், 12 அக்டோபர், 2010
கொழும்பு யாழ் ரயில்சேவை மீண்டும் ஆரம்பிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை-ஜாலிய விக்கிரமசூரிய..!!
கொழும்பு யாழ்ப்பாணம் ரயில்சேவை மீண்டும் ஆரம்பிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய இன்று தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலகத்தில் கேட்போர் கூடத்தில் இன்றுகாலை நடைபெற்ற அமெரிக்க வர்த்தகக் குழுவினருக்கான வரவேற்புக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 1972ம் ஆண்டு நான் ரயில் மூலம் யாழ்ப்பாணம் வந்தேன். அதன் பின்னர் ஒருமுறை விமானத்தில் வந்தேன். இன்றும் விமானத்தில்தான் வந்துள்ளேன். எனினும் மிகவிரையில் மீண்டும் ரயில்மூலம் யாழ். வருவேன். அமெரிக்க வர்த்தகக் குழுவினர் இலங்கை வந்ததும் அவர்கள் வடக்கில் வர்த்தக முதலீடுகளைச் செய்யவூள்ளதும் எவரும் முற்றிலும் எதிர்பார்க்காத விடயமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திறமையான வழிநடத்தல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஒரு ஸ்தீர நிலையை அடைந்துள்ளது. இப்போது இலங்கையில் வருடாந்த வருவாய் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது விரைவில் மேலும் இரு மடங்காய் அதிகரிக்கும் என எதிர்பார்க்க முடியும். இலங்கையில் தொழில் இல்லாப் பிரச்சினை குறைந்து வருகின்றது. இலங்கையின் துரித அபிவிருத்தியை இணங்கண்டுள்ள உலக நாடுகள் இலங்கையின் முன்னேற்றத்துக்கு கைகொடுக்க முன்வந்துள்ளன. அதன் ஒரு அங்கமாவே இன்று அமெரிக்க வர்த்தகக் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக