கடைசியாக 'லண்டன் ட்ரீம்ஸ்' படத்தில் சல்மான் கானுடன் நடித்தார் அசின். இப்படம் ரிலீசாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. அதற்கு பின் அவர் நடித்த படமே வெளிவரவில்லை. இது பற்றி அசின் கூறியது: 'லண்டன் ட்ரீம்ஸ்' படத்துக்கு பின் விளம்பர படங்களில் பிசியாக இருந்தேன். அதன் பின் தமிழில் ‘காவலன்’ பட வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் மீண்டும் சல்மான் கானுடன் ÔரெடிÕயில் நடிக்க¤றேன். இந்த இரண்டுமே பெரிய படங்கள். அதனால் தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படங்கள் வெளியாகும். அடுத்தடுத்து படங்கள் வெளியாக¤,
தோல்வி அடைந்தால் அதனால் பயனில்லை. ஆண்டுக்கு ஒரு படம் வந்தாலும் பேசப்பட வேண்டும். இந்தியில் மேலும் இரு படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. 'காவலன்' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பது பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை. அது பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு அசின் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக