பயனர்கள்.
ript>
புதன், 20 அக்டோபர், 2010
சிதறிக் கிடக்கும் புலிகளின் புலனாய்வு மற்றும் ஆயுதப்பிரிவைப் பலப்படுத்த முயற்சி..!!
தலைமைத்துவமின்றி சிதறிக் கிடக்கும் புலிகளின் புலனாய்வு மற்றும் ஆயுதப்பிரிவு உறுப்பினர்களை பலப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சி செய்யப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) ஊடாகவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 30 வருடகால யுத்தம் முடிவடைந் துள்ள நிலையில் நாட்டில் அமைதிச்சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை உறுதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும். மனிதாபிமான நடவடிக்கைமூலம் புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. மக்களின் உள்ளங்களை மாற்றவும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும் மற்றொரு மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. மீண்டுமொரு யுத்தம் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்முதல் இன்றுவரை 4485 முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஈழ நாடொன்றை அமைக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மீண்டும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் இலங்கைக்கு வரும் புலிகளையும் யுத்தகாலத்தில் தென்பகுதியில் மறைந்திருந்து மீண்டும் வடக்கிற்குவரும் நபர்கள் குறித்தும் விசாரணை செய்வதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைமைத்துவமின்றி மறைந்து இருக்கும் புலனாய்வு மற்றும் ஆயுதப்பிரிவு புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எஸ்.எம்.எஸ். குறுந்தகவலினூடாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக