பயனர்கள்.
ript>
புதன், 20 அக்டோபர், 2010
பாணந்துறை, கீக்கியனகந்த தோட்டம், கீழ் டிவிசனில் மலையிலிருந்து பாரிய கற்கள் விழும் அபாயம்..!!
பாணந்துறை பிரிவுக்குட்பட்ட மத்துகம, கீக்கியனகந்த தோட்டம், கீழ் டிவிசனில் மலைப்பகுதி ஒன்றிலிருந்து பாரிய கற்கள் உருண்டு வந்து ஆபத்தை விளைவிக்க இருக்கும் லயன் குடியிருப்புக்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டம் மேலும் தாமதிக்காது துரித கதியில் பூர்த்தி செய்யப்பட்டு குடியிருப்பாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கற்கள் உருண்டு வரும் பட்சத்தில் 25 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து காணப்படுகின்றது. இது தொடர்பாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த மலைப் பிரதேசத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி கற்கள் உருண்டு வரக்கூடிய நிலை காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டு மதுராவல பிரதேச செயலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தோட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இங்கு வசித்து வரும் 25 தொழிலாளர் குடும்பங்களுக்கும் வேறு இடத்தில் 7 பேச் காணி வீதம் ஒதுக்கீடு செய்து வீடமைத்துக் கொடுக்கத் திட்டம் மேற்கொண்ட போதிலும், ஒரு வருடம் கடந்தும் இன்னும் இத்திட்டம் மந்தகதியிலேயே இருந்து வருவது குறித்து குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குடியிருப்பாளர்கள் மழைக்காலத்தில் அச்சம் காரணமாக குடியிருப்புகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள தோட்டக் கட்டடம் மற்றும் பாடசாலைக் கட்டடத்தில் தங்கியிருந்து பொழுதைக் கழிக்கின்றனர். மதுராவல பிரதேச செயலகத்தின் மூலம் இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. வீடமைக்க ஒவ்வொருவருக்கும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மூலமாக 2 இலட்சத்து 40 ஆயிரமும், பெருந்தோட்ட நம்பிக்கை நிதியத்தின் மூலம் கடன் அடிப்படையில் 2 இலட்சமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக