பயனர்கள்.

ript>

புதன், 20 அக்டோபர், 2010

காதலி வேடம் தவிர்க்க முடியாது - சனுஷா..!!

9 வருடங்களுக்கு முன், மம்மூட்டியின் ‘தாதா சாகேப்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சனுஷா. தொடர்ந்து தெலுங்கிலும், தமிழில் ‘காசி’, ‘தீனா’, ‘அரண்’ படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிறகு ‘பீமா’வில் த்ரிஷாவின் தங்கையாக வந்தார். விநயன் இயக்கிய ‘நாளை நமதே’ மூலம் ஹீரோயின் ஆனார்.  சாதுவான பெண் கேரக்டர்களிலேயே வருகிறீர்களே? ‘நாளை நமதே’, ‘ரேனிகுண்டா’ படங்களில் அமைந்த கேரக்டர்கள் அப்படி. என்னால் மெச்சூரிட்டியான வேடங்களிலும் நடிக்க முடியும். அதற்கான படங்கள் அமைய வேண்டும். அதுவரை மென்மையான காதல் ஹீரோயினாக நடிக்க வேண்டியிருக்கும். இதை என்னைப் போன்றவர்கள் தவிர்க்க முடியாது. ‘நந்தி’யில் என் நடிப்பை பார்த்த பின், எல்லோருடைய கருத்தும் மாறும். ‘நந்தி’ டப்பிங்கில் டைரக்டர் அடித்தாராமே? தமிழ்வாணன் என்னை அடிக்கவில்லை. கோபத்தில் என் தலைமுடியை பிடித்து இழுத்தார். வலியால், ‘அய்யோ’ என்று கத்தினேன். டப்பிங்கில் கிளைமாக்ஸ் காட்சி வந்தபோது, நன்றாகத்தான் பேசினேன். டைரக்டருக்கு திருப்தி இல்லை. பிறகு நானே அவரிடம், ‘என் தலைமுடியை பிடித்து இழுங்கள். அந்த வேதனையில், கண்டிப்பாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்’ என்றேன். அவரும் யாரும் எதிர்பாராத நேரத்தில், என் தலைமுடியை கொத்தாகப் பிடித்து இழுக்க, கண் கலங்கியபடி டப்பிங் பேசினேன். காட்சியும் சிறப்பாக அமைந்துவிட்டது. அதிக சம்பளம் கேட்கிறீர்களாமே? இதுவரை என்னை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களிடம், நியாயமான சம்பளம் மட்டுமே வாங்கியுள்ளேன். தமிழ், மலையாளம், தெலுங்கில் நல்ல கேரக்டர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறேன். சம்பளம் இரண்டாம் பட்சம்தான். எனது திறமைகளை வெளிக்கொண்டு வரும் கேரக்டருக்காக, சம்பளம் குறைவாக வாங்கி நடிப்பேன். இப்போது விமல் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன்.
படிப்பு? ஷூட்டிங் இல்லாத நாட்களில் கேரளா கண்ணூரிலுள்ள ஸ்ரீபுரம் பள்ளிக்கு சென்று, பிளஸ் ஒன் படிக்கிறேன். ஷூட்டிங் இருந்தால், ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி நடிக்கிறேன். சினிமாவில் நடிப்பதால், படிப்பை விட முடியாது. நல்ல மதிப்பெண்களும் வாங்குகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக