பயனர்கள்.
ript>
புதன், 20 அக்டோபர், 2010
யாழ். குடாநாட்டில் மாற்று ஏற்பாட்டின்கீழ் மின்வெட்டை நடைமுறைப்படுத்தாமல் 24 மணிநேரமும் மின் விநியோகம் வழங்க உடன் நடவடிக்கை..!!
யாழ். குடாநாட்டில் மாற்று ஏற்பாட்டின் கீழ் மின்வெட்டை நடைமுறைப்படுத்தாமல் 24 மணிநேரமும் மின் விநியோகம் வழங்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மின்சாரசபை அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வடக்கு அபிவிருத்தி மீளாய்வுக் குழுவின் கூட்டத்தில் வைத்து இந்த உத்தரவை ஜனாதிபதி விடுத்துள்ளார். மின் வழங்குவதற்கான இயந்திரங்கள் பழுதடைந்திருந்தால் அவற்றை திருத்த உடன் ஏற்பாடு செய்யவேண்டும் இல்லாவிட்டால் வேறு இயந்திரங்களை பொருத்தி மின்விநியோகத்தை 24மணி நேரமும் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். ஏ9 வீதி,பண்ணை வீதி ஆகியன புனரமைக்கப்படாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என பிரஸ்தாபித்தபோது அந்த வீதிகளின் புனரப் பின் பிரச்சினைகளை வீதி அபிவிருத்தி அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேட்டுள்ளார். எதிர்வரும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் இந்தப் பணியை ஆரம்பிக்கப் போவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரி பதிலளித்துள்ளார். அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் ஜனாதிபதி அங்கு உரையாற்றினார். மக்கள் சேவையை மகோன்னத சேவையாகக் கருதி அரச ஊழியர்கள் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும். உங்களை நம்பித்தான் எமது மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பு உங்களிடமே உள்ளது என்பதை உணர்ந்து சகலரும் சிறப்பாகச் சேவையாற்ற வேண்டும் என்று அரசஅதிபர் அறிவுரை வழங்கினார். இந்நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் சமமானவர்கள். இனம்,மொழி, சாதி, வேறுபாடின்றி அவர்கள் இந்த நாட்டின் மக்கள் எனக் கருதி சகலரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வவுனியா கூட்டுப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சில்வெஸ்திரி அலன்ரின், முருகேசு சந்திரகுமார், ஹனுஸ் பாரூக், சிறீரங்கா ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், எஸ்.கனகரட்ணம், வடமாகாண ஆளுநர், ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண அரச அதிபர்கள், வடமாகாணத்தின் மாவட்டத் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர். வடமாகாணத்தின் செயற்பாடுகள் பற்றி பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்ட அரசஅதிபர்கள் தமது மாவட்டங்கள் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தனர். ஐந்து மாவட்டங்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி, திணைக்களத் தலைவர்களிடம் கேட்டு ஆராய்ந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக