பயனர்கள்.

ript>

புதன், 20 அக்டோபர், 2010

லஸ்கார் இதொய்பா இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துவது பற்றி எவ்வித ஆதாரமில்லை-வெளிவிவகார அமைச்சர்..!!

தீவிரவாத அமைப்பான லஸ்கார் இதொய்பா பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்க இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துகின்றது எனத் தெரிவிப்பது தொடர்பாக எந்தவொரு ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். நான்கு நாள் விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த அமைச்சர் பீரிஸ், இவ்வாறு கூறுவதில் பிரயோசனமான தன்மை கிடையாது என்று கடந்த சனிக்கிழமை கூறியதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையில் லஸ்கார் இதொய்பா இயக்கத்தினர் பயிற்சி பெற்றதாக பூனே பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் முன்னர் கூறியிருந்தார். இந்த விடயம் எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதனை எமது பாதுகாப்பு அதிகாரிகள் பரிசீலித்திருந்தனர். ஆனால், அது தொடர்பாக நாம் எதனையும் கண்டறிந்திருக்கவில்லை. அந்த மாதிரியான ஏதாவது நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான புலனாய்வுத் தகவல் பரிமாற்ற பொறிமுறையில் இருநாடுகளும் ஈடுபட்டிருந்தன என்றும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார். பூனே பேக்கரி குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவர் தெரிவித்திருந்தமை தொடர்பாக இந்திய பாதுகாப்பு முகவரடைப்புகள் இலங்கை பாதுகாப்பு முகவரமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தன. கொழும்புக்கு சமீபமான இடத்திலேயே பயிற்சி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அப்பகுதி கடும் பாதுகாப்பு பிரசன்னமான இடம் என்று கூறி அதனை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருந்தனர். இதேவேளை, சீனாவுக்கு நெருக்கமாக இலங்கை செல்வது அதிகரித்துவரும் விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இந்தியாவுடன் கொழும்பு தொடர்ந்து விசேடமான உறவைக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார். சீனாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்திவருகின்ற அதேசமயம் இந்தியாவுடன் விசேட உறவைப் பேணும் என்று கூறியுள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு எதிராக இலங்கை மண்ணை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக