நமீதாவுக்கு கவர்ச்சி அலுத்து விட்டதாம். குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்புவதாக கூறினார். நமீதாவின் சமீபத்திய தமிழ் படங்கள் அனைத்திலுமே கவர்ச்சி தூக்கலாக இருந்தது. ஆபாச கதையம்சம் உள்ள படங்களிலும் துணிச்சலாக நடித்தார். இதனால் கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டது. இயக்குனர்கள் கவர்ச்சி கேரக்டர்களில் நடிக்கவே அவரை அணுகினர். இதனால் வருத்தமாகி இருந்தார் நமீதா. தற்போது முதல் தடவையாக சண்டை படமொன்றில் குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதுபற்றி அவர் சொல்கிறார். என் சினிமா வாழ்க்கையில் போதுமான அளவுக்கு கவர்ச்சியாக நடித்து விட்டேன். அலுத்து விட்டது. கன்னட படங்களிலும் கவர்ச்சியாகத்தான் நடிக்க வைத்தார்கள். ஆனால் இப்போது முதல் தடவையாக கன்னட படமொன்றில் கவர்ச்சி இல்லாமல் யோகா ஆசிரியை வேடத்தில் நடிக்கிறேன். இதில் வில்லன்களுடன் சண்டை போடும் காட்சிகளும் உள்ளன. தொடர்ந்து இது போன்ற கேரக்டர்களில் நடிக்க விருப்பம் உள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக